Friday, December 12, 2008

மௌனத்தின் தீவில்…!

ரம்மியமாய் வந்து
ராட்சச அலையென
என்னை இழுத்துச் செல்லும்
உன் ஞாபகங்கள்
கொண்டு போய் சேர்க்கின்றன
அடர்ந்த மௌனத்தின் தீவில்…

அதன் கரையோரங்களில் எல்லாம்
மணலாய் கொட்டிக் கிடக்கின்றன
உன் குட்டிப் புன்னகைகள்…

மரங்களாய் வளர்ந்து நிற்கின்றன
என்மீதான உன் அக்கறைகள்…

அங்கு தனியே நானிருந்தாலும்
தனிமையாய் இல்லை…

அருகாமையோ
தீண்டல்களோ
பகிர்தல்களோ
இல்லாவிடினும்…

எனக்கு துணையாய்
எப்போதும் என்னைச் சுற்றி
பறந்துகொண்டே இருக்கின்றன
உன் ஸ்பரிசப் பறவைகள்…

ஒருநாள் காலம்
உன்னையும் இந்த தீவில்
கொண்டு வந்து தள்ளும்
என்ற எதிர்பார்ப்போடு…

மகிழ்ச்சியுடன் அலைந்து கொண்டிருக்கிறேன்
நமக்கான மௌனத்தின் தீவில்…

ஊடல்


உன் கண்களில் இருந்து
உடைந்துவிழும்
ஒவ்வொருத்துளி கண்ணீருக்குள்ளும்
நெருப்பாய் எரிந்துகொண்டிருக்கிறது
நமது நேற்றைய ஞாபகங்கள் !

முற்றிப்போய் முட்டிக்கொண்ட
நமது சண்டைகளுக்குள்
ஒன்றும் பேசாமல்
ஒளிந்துகொண்டிருக்கிறது
நமக்கான காதல் !

மனதின் முரண்

நாளொரு கருத்தும்
நொடியொரு நிகழ்வும்
நிகழ்த்தியவாறே
மனது முயலும்
அமைதியை தேடி!

தோழியே....!

என் மௌனத்தில்
சிரிப்பதென்றால்
வார்த்தைகளை துறப்பதில்
வருத்தமொன்றும்
எனக்கில்லை!

Monday, December 08, 2008

நம்ப மறுத்த கணங்கள்

நம்ப மறுத்த கணங்களை
மீண்டும் மீண்டும்
நிகழ்த்திப் பார்க்கிறது மனம்.


கடந்துபோன ஆற்று நீர்போல்
ஏற்கனவே பெய்த வெயில்போல்
இழந்த கணங்கள் என்றபோதிலும்


பரவசமான கணங்களை
முன்பைவிடத் தேய்ந்துபோன
பரவசத்தோடும்


வலிமிகுந்தத் தருணங்களை
முன்பைவிடத் தேய்ந்துபோன
வருத்தத்தோடும்.


அக்கணங்களின்
அதிர்வலைகள் இன்னமும்
ஓய்ந்தபாடில்லை.

Wednesday, December 03, 2008

சந்திப்பு - பிரிவு


எப்போதும் போலவே
சந்திப்புக்கள் சத்தத்தோடும்
பிரிவுகள் மௌனத்தோடும்
அரங்கேறிப் போனது.

சொல்லாத வார்த்தைகள்......!


இருவருக்கும் இடையில்
கூப்பிடு தூரந்தான் இடைவெளி- இருந்தும்
எதுவுமே பேசவில்லை
இதுவரையில் நாம்


குரல்நாண்களின்
வேலை நிறுத்தத்தால்
வெப்பக்காற்று மட்டும்
வெளியேறிக் கொண்டிக்கிறது
பெருமூச்சாகசுற்றி நின்றவர் பேசினர்


தூரத்தில் குயில் கூவியது
வாகனங்கள் இரைந்தன
வாலாட்டியபடி வந்த நாய்
சும்மா குரைத்துப்போனது


இன்னும் எத்தனையோ
இரைச்சல்களுக்கு மத்தியில்
எந்தவித ஒலியும்
எழுப்பத் திரணியற்றவர்களாய்
உறைந்திருக்கிறோம் நாம்


நினைத்துப் பார்க்கிறேன்
நிறையவே நாம் பேசியிருக்கிறோம்
வருந்தியதும் உண்டு
சொல்லிய சில வார்த்தைகளுக்கும்
சொல்லாமல் விட்ட வார்த்தைகளுக்கும்.....!

Monday, December 01, 2008

Life is a .......?

Life before marriage is AIRTEL
" u can express ur self ".
During honeymoon is RELIANCE-
" Always get in Touch ".

After Honeymoon is HUTCH
" Wherever u go ur wife network follows".



After one year Life is IDEA
" ur wife can change ur life ".



After 10 years Life is BSNL
" Subscriber is not reachable "?????????

Sunday, November 30, 2008

முதல் மழை

முதல் மழை எனை நனைத்ததே
முதன் முறை ஜன்னல் திறந்ததே
பெயரே தெரியாத பறவை அழைத்ததே
மனமும் பறந்ததே
இதயமும் ஹோய் இதமாய் மிதந்ததே

ம்ம்ம்...முதல் மழை நம்மை நனைத்ததே
மூடி வைத்த ஜன்னல் திறந்ததே
பெயரே தெரியாத பறவை அழைத்ததே
மனமும் பறந்ததே
இதயமும் இதமாய் மிதந்ததே


கனவோடு தான் அடி நீ தோன்றினாய்
கண்களால் உன்னைப் படம் எடுத்தேன்

என் வாசலில் நேற்று உன் வாசனை
நீ நின்றாய் இடம் என்று உணர்ந்தேன்

எதுவும் புரியாப் புது கவிதை
அர்த்தம் மொத்தம் இன்று அறிந்தேன்

கையை மீறும் ஒரு குடையாய்
காற்றோடு தான் நானும் பறந்தேன்
மழைக் காற்றோடு தான் நானும் பறந்தேன்


முதல் மழை எனை நனைத்ததே
ல ல லலா

முதன் முறை ஜன்னல் திறந்ததே
ல ல லலா

பெயரே தெரியாத பறவை அழைத்ததே
மனமும் பறந்ததே
இதயமும் ஹோய் இதமாய் மிதந்ததே

ஓர் நாள் உன்னை நானும் காணா விட்டால்
என் வாழ்வில் அந்த நாளே இல்லை

ஓர் நாள் உன்னை நானும் பார்த்தே விட்டால்
அந்நாளின் நீளம் போதவில்லை

இரவும் பகலும் ஒரு மயக்கம்
நீங்காமலே நெஞ்சில் இருக்கும்

உயிரின் உள்ளே உந்தன் நெருக்கம்
இறந்தாலுமே என்றும் இருக்கும்
நான் இறந்தாலுமே என்றும் இருக்கும்


பெயரே தெரியாத பறவை அழைத்ததே
இதயமும் ஹோய் இதமாய் மிதந்ததே

Saturday, November 29, 2008

யாரோ யாருக்குள் இங்கு யாரோ

யாரோ.. யாருக்குள் இங்கு யாரோ
யார் நெஞ்சில் இங்கு யார் தந்தாரோ
விடை இல்லா ஒரு கேள்வி

உயிர் காதல் ஒரு வேள்வி

யாரோ யாருக்குள் இங்கு யாரோ
யார் நெஞ்சில் இங்கு யார் தந்தாரோ
விடை இல்லா ஒரு கேள்வி

உயிர் காதல் ஒரு வேள்வி

காதல் வரம் நான் வாங்க
கடை கண்கள் நீ வீச
கொக்கை போல நாள் தோறும்
ஒற்றை காலில் நின்றேன்.. கண்மணி

யாரோ யாருக்குள் இங்கு யாரோ
யார் நெஞ்சில் இங்கு யார் தந்தாரோ
விடை இல்லா ஒரு கேள்வி

உயிர் காதல் ஒரு வேள்வி

ஊரை வெள்ளும் தோகை நான்
உன்னால் இன்று தோற்றுப்போனேன்
கண்ணால் யுத்தமே நீ
செய்தாய் நித்தமே

ஓஹோ ஓஓஓ
நின்றாய் இங்கு மின்னல் கீற்று
நித்தம் வாங்கும் மூச்சுக்காற்றால்
உன்னை சூழ்கிறேன் நான்
உன்னை சூழ்கிறேன்

காற்றில் வைத்த சூடம் போலே
காதல் தீர்ந்து போகாது
உன்னை நீங்கி உஷ்னம் தாங்கி
என்னை வாழ ஆகாது
அன்பேவா.... யே. ஹேஏஏஏ

யாரோ..

ம்ஹாஆ
யாருக்குள் இங்கு யாரோ

ம்ஹ்ம்
யார் நெஞ்சில் இங்கு யார் தந்தாரோ

விடை இல்லா ஒரு கேள்வி

உயிர் காதல் ஒரு வேள்வி

உந்தன் ஆடை காயப் போடும்
உங்கள் வீட்டு கம்பிக் ஹகொடியாய்
என்னை எண்ணினேன் நான்
தவம் பண்ணினேன்

ஆஹா ஹா ஹா
கெட்ட கெட்ட வார்த்தை சொல்லி
கிட்ட கிட்ட வந்தாய் துள்ளி
எட்டி போய் விடு இல்லை
ஏதோ ஆகிவிடும்

காதல் கொண்டு பேசும் போது
சென்னை தமிழும் செந்தேந்தான்

ஆசை வெள்ளம் பாயும் போது
வங்க கடலும் வாய்க்கால் தான்
அன்பே வா.ஆஆஆ ஹோ

யாரோ..
ம்ம்ம்
யாருக்குள் இங்கு யாரோ
ம்ஹாஆஆ..

யார் நெஞ்சில் இங்கு யார் தந்தாரோ
விடை இல்லா ஒரு கேள்வி

உயிர் காதல் ஒரு வேள்வி

காதல் வரம் நான் வாங்க
கடை கண்கள் நீ வீச
கொக்கை போல நாள் தோறும்
ஒற்றை காலில் நின்றேன்.. கண்மணி

யாரோ யாருக்குள் இங்கு யாரோ
யார் நெஞ்சில் இங்கு யார் தந்தாரோ
விடை இல்லா ஒரு கேள்வி

உயிர் காதல் ஒரு வேள்வி

என் தலையணை...!

முகம் புதைத்து அழும் பொழுது
கண்ணீரை கவர்ந்திருக்கிறது ,

அல்ப சந்தோஷங்களையும் கூட
ஆரவாரமில்லாமல் ரசித்திருக்கிறது ,

நியாமான கோபங்களை
அமைதியாக அங்கீகரித்திருக்கிறது ,

மொத்தத்தில் என் எல்லா உணர்வுகளையும்
அருகில் இருந்து பகிர்ந்து கொண்டிருக்கிறது ...

ஆதலால் என் தலையணை
அவனை விட மேலானது !

Friday, November 28, 2008

முகத்தை தொலைத்த முகமூடி !

ஒரு முகம்
சிலரால் விரும்பப்படுகிறது ...

பலரும் விரும்பிடவேண்டி
ஒப்பனை செய்து கொள்கிறது ...

எல்லாரும் விரும்பிடவேண்டி
ஒவ்வொருவருக்கும் ,
ஒவ்வொரு முகமூடி அணிகிறது...

யாரும் அந்த முகத்தை
பார்க்கவில்லை - முகமூடியை
பார்க்கிறோம் என உணரவும் இல்லை !

விரும்பப்படாத முகம் ,
அழகானதாகவும் இருக்கக்கூடும் !

Thursday, November 27, 2008

தெரியவில்லை ......

தெரியவில்லை ......

நீ உன்னோடு எடுத்துச் சென்றது
என் சிறகுகளையா..
இல்லை
வானத்தையா ..???

Wednesday, November 26, 2008

இடைவெளி

மிக அற்புதமான கவிதையாக
இருந்திருக்கலாம்
மனதுக்குள்ளேயே தொலைத்துவிட்டேன்.

பணிக்கும் துன்பத்திற்கும் இடையில்
எப்போதாவது எட்டிப் பார்க்கும் கவிதை

தாளைத் தேடி தடம் பதிக்கும்
வேளை வரும் முன் தொலைந்துவிடுகிறது
அல்லது உருமாறி
ஒவ்வாமையாகி விடுகிறது.

எப்போதோ உடன் படித்த நண்பர்கள்
முகம் நின்று பெயர் மறைந்து போவது போல்
கருத்தில் எழுந்து
இருட்டில் மறைந்திருக்கிறது...
கவிதை!

அது புதிதாக ஒன்றைச் சொல்ல வந்திருக்கலாம்
யாராவது புகழும்படியாக
ஏதாவது கொண்டு வந்திருக்கலாம்
குறைந்தபட்சம்
எனக்கு மட்டும் இன்பத்தைக் கொடுத்திருக்கலாம்
பாவம்

இடைவெளிக் குறைவில்
சிக்கிச் சாவது கவிதையும்தான்!

பிரிவின் நிழல்




காதலின் வெம்மையை விட
பிரிவின் நிழல்
சில நேரங்களில் மேலானது !

=============

தொலைக்கவிருந்த என் அடையாளங்களை
மீட்டுக்கொடுத்தது - உன் பிரிவு !

மழை துளி

தோழியா என் காதலியா யாரடி என் கண்ணே..!

தோழியா என் காதலியா யாரடி என் கண்ணே
தோழியா என் காதலியா யாரடி என் கண்ணே
மடி மீது தூங்க சொல்கிறாய்
தோள் மீது சாய்ந்து கொள்கிறாய்
நெருங்கி வந்தால் நண்பன் என்கிறாய்
ஓஹோஹோ பெண்ணே

ஏனடி என்னை கொல்கிறாய்
உயிர் வரை சென்று தின்கிறாய்
மெழுகு போல் நான் உருகினேன்
என் கவிதையே என்னை காதல் செய்வாய்

கனவிலும் நீ வருகிறாய்
என் இமைகளை தொட்டு பிரிக்கிறாய்
இரவெல்லாம் செத்து பிழைக்கிறேன்
உன் பதில் என்ன அதை நீயே சொல்லடி
(தோழியா..)

ஒரு துளி நீர் வேண்டி நின்றேன்
அடை மழை தந்து என்னை மிதக்க விட்டாய்
சிலுவைகளை நான் சுமந்து நின்றேன்
சுகங்களை தந்து என்னை நிமிர வைத்தாய்
விழிகள் ஓரம் நீர் துளியை
மகிழ்ச்சி தந்து உளர வைத்தாய்
பாலைவனத்தில் பூக்கள் தந்து
சொர்க்கங்களை கண் அருகில் காட்டினாய்
கருப்பு நிறத்தில் கனவு கண்டேன்
காலை நேரத்தில் இரவு கண்டேன்
வெள்ளை நிறத்து தேவைதையே
வண்ணங்களை தந்து விட்டு
என் அருகில் வந்து நில்லு
(தோழியா..)

இருட்டுக்குள்ளே தனித்து நின்றேன்
மின்மினி பூச்சிகள் மிதக்க விட்டாய்
தனி அறையில் அடைந்து விட்டேன்
சிறகுகள் கொடுத்து என்னை பறக்க விட்டாய்
அலைகள் அடித்து தொலைந்து விடும்
தீவை போல மாட்டிக் கொண்டேன்
இறுதி சடன்கில் மிதிகள் படும்
பூவை போல் கசங்கி விட்டேன்
தெய்வம் பூகிக்கு வருவதில்லை
தாயை பதிலுக்கு அனுப்பி வைத்தான்
தாயும் இங்கு எனக்கு இல்லை
எனக்கு தாயை உன் உருவில் தந்து விட்டான்
(தோழியா..)

பிரிவு

உன்னைச் சந்திக்கும் வரை உன் முகத்தை
யார் யாரோ முகத்தில் தேடிப்பார்த்தேன்
உன்னைப் பிரிந்த பின் என் முகத்தை யார் யாரிலோ
தேடிப் பார்க்கிறேன்.

வேதனை

உன்னை தவிர்க்க முடியாமல்
நான் தவிப்பது தெரியாமல்
நீ தவித்து கொண்டிருப்பது
தெரிந்தும் மவுனமாகவே
இருக்கிறேன் நான்
கூண்டுக்குள் செயலிழந்த
பறவையை போல

வேலிகளை விட்டு
வெளியே வரவும்
வழி தெரியவில்லை
என் இதயத்தை விட்டு
உன்னை வெளியேற்றவும்
வழி தெரியவில்லை

Tuesday, November 25, 2008

நெருடல்கள்

மேடையில்
நடந்தால்
கருத்தரங்கம்
அதுவே
டீக்கடையில்
நடந்தால்...?

சாமான்யன்
சொன்னால்
பொய்
அதையே
வழக்கறிஞர்
சொன்னால்...?

குற்றவாளி
செய்தால்
கொலை
அதையே
நீதிபதி
செய்தால்...?

அதிகாரி
செய்தால்
தண்டனை
அதையே
அரசியல்வாதி
செய்தால்...?

பிரயாணி
செய்தால்
ஈவ்டீசிங்
அதையே
நடத்துனர்
செய்தால்...?

Wednesday, November 19, 2008

மெளனத்தின் மொழி

எவர்க்கும்
தெரியாத
ரகசியமாய்
நான்கு
சுவருக்குள் மோதி
மீண்டும்
என்னுடன்
பேசிக்கொண்டிருக்கிறது

சிந்தனைகளின்
சிதைவு
உணர்வுகளின்
சோர்வு
இதயத்தின்
இயக்கம்
மெளனமாக
நின்றுவிடும்

தருணங்களுடன்
கடந்து கொண்டிருக்கிறது..

Tuesday, November 18, 2008

மழை இரவின் கதை

அறைக்குள் ஒளிந்து
கொண்டிருக்கும் இருள்
மெழுகுவர்த்தி ஒளியில்
அரை நிர்வாணமாகிறது

மெல்லியதாய் இசைத்துக்
கொண்டிருக்கும் ஜமேக்கக்
காதலனின்
பாடல்

எங்கிருந்தோ
அழும் குயிலின் ஏக்கம்
தனிவழியில் மழை இரவில்
கடந்துபோகும்
பெண்ணின் சோகம்

நட்சத்திரங்களைத்
தொலைத்ததில்
அழுது வடியும் வானம்
இருளைக்கிழித்து
உறுமிப்போகும்
இடியும் மின்னலும்

பனிப்புகாரும் காற்றும்
திசைதெரியாது அலைந்த
இப்படியான
இரவொன்றில்தான்
மழை இரவின்
காதல் கதை
முடிந்துபோனது.

Monday, November 17, 2008

நீயும் வா நிலா

நின்றதெல்லாம் நின்றபடி இருக்க
இந்த நிலா மட்டும்
என்கூட வரும் எனில்
இன்னும் நீள வேண்டும்
இந்த இரயில் பயணமும்
எனது இரவும்.

என் புரிதல்.....!

கடலில்
அழும்
மீனின்
கதறலாய்
கரைகிறது
என்கேள்விகள்

தூங்க நினைக்கையில்
விழித்துக்கொள்ளும்
துயரத்தொடர்கள்
பகலையும்
ஆக்கிரமிக்கிறது
பயத்தின்
நிழல்கள்

எதிர்த்து
எதிர்பார்த்து
கழைத்த
மனதிடம்
கேழாதீர்கள்
கவிதையை

இன்று
என்னிடம்
மயக்கும்
நினைவுகளும்
மயங்கும்
பொழுதுகளும்
கனவுகளும்
செத்துப்போயின

எவரும்
புரிந்திடா
என்
கேள்விகளும்
என்
புரிதலும்

தனித்திருந்து
எதை
சாதித்திடப்போகிறது

Sunday, November 16, 2008

வெளிச்சமும் இருளும்



வெளிச்சம்
பயத்தை ஏற்படுத்த
தொடங்கும் வரை
பாதைகள் எளிமையாகவே இருந்தன
இருளின் மீதான அனுமானங்களும்

நீண்டிடும் விளிம்புகள்

பாராதபோதும்,
நினைவுகள் நிறைக்கும்
உண்மைதான் - உன்
உணர்வுகளின் ஓரங்களில்
வரியாய் ஓடிடும்
எனக்குள்ளே அழைத்திட்ட
நிசப்தக் குரலின்
நீண்டிடும் விளிம்புகள்.

Saturday, November 15, 2008

உன் விரல் பிடித்துக் கொள்கிறேன்



உன் விரல் பிடித்துக் கொள்கிறேன்
அனிச்சையாய் ..
இருள் படர
ஆயத்தமாகும் பொழுது
வகைபிரிக்க முடியாத உணர்வு
இருட்டில் பயணிப்பதென்பது
பயமாகவும் இருக்கலாம்
தைரியக்குறைவாகவும் இருக்கலாம்
ஆராய விருப்பமில்லாது
உன் விரல் பிடித்துக்கொள்கிறேன்
உறுதியளிக்க முடியாது தான்
உன் பாதைகளின் தன்மை குறித்து
இருளைக் காட்டிலும்
மோசமான தாக்கத்தை
நீ என்னில் ஏற்படுத்தலாம்
எனினும்
உன் விரல் பிடித்துக்கொள்கிறேன்
என்னென்னவோ காரணங்களை
எனக்கு நானே கற்பித்துக் கொண்டு
உன் விரல் பிடித்துக்கொள்கிறேன்
இருட்டிலே
கொஞ்சம் கொஞ்சமாய்
என் சுயத்தின் சிதைவுகள்
தென்படக்கூடும் ..

மழைக்கால டைரிக்குறிப்பு



மழைபெய்ய வாய்ப்பிருப்பதை
சொல்லாமல் சொல்கிறது
மேகங்கள் சூழ்ந்திருக்கும் மெல்லிருட்டு

இணை தேட வைக்கிறது
நடுங்க வைக்கும்
குளிர்

எப்போதும் அருந்தும்
தேநீரை. . .
இன்னும் இதமாக்கிவிடுகிறது
நிலவும் சூழல்

ஒற்றையடிப் பாதையில்
தேர் வருவதைப் போல
ஆசிர்வதிக்கப்பட்ட நீர்நிலைகள்
நிரம்பி வழிகின்றன

திரும்பும் திசையெங்கும்
புன்னகைக்கும் பசுமை
வறண்டு கிடக்கும்
வாழ்வின் கரங்களில்
நம்பிக்கையைப் பரிசளிக்கிறது

குழந்தைகள் உலவும்
வீடுகளை ஞாபகப்படுத்துகிறது
வனங்களில் உலவும்
விதம்விதமான
பட்டாம்பூச்சிகளும்
ஒரேமாதிரியான
தட்டாம்பூச்சிகளும்

முகம் அறியாத பாடல்
பழக்கமாகிவிட்டது
கேட்டுவிட்டுப் போகிற நமக்கும். . .
பாடிவிட்டுப் போகிற பறவைகளுக்கும். . .

மழைக்காலத்தைப் போல
இத்தனை ரம்மியமானதில்லை
வேறெந்தக் காலமும்!

Friday, November 14, 2008

திரைச்சீலை



மெல்லியதொரு திரைச்சீலை
நம்மிடையே
அவசியப்படுகிறது

அநேகக் காரணங்கள்
அதற்கானதாய்
என்னிடத்தில்

உன் விழிகளின் வசீகரம்
என்னை விழுங்கிடாதிருக்கவும்

சுவாசத்தின் வெம்மைதனில்
நெகிழ்ந்து இளகாதிருக்கவும்

சிநேகத்தின் பரஸ்பரங்களில்
சிதறுண்டு போகாமலிருக்கவும்

இன்னும்
இனியும்
எத்தனையோ அத்தனையும்
எனைப் பத்திரப்படுத்த

எப்பொழுதேனும்
இதனில் என்னை
முழுவதுமாய் வாரிச்சுருட்டி
உன் உள்ளங்கைக்குள்
பொதிந்து வைக்கவும் ஆகிறது ...

Thursday, November 13, 2008

நீ வந்து விட்டாய்



யாவும் பாதியிலேயே
நிறுத்தப்பட்டு விட்டன .

விரும்பிச் சுவைத்துக்கொண்டிருந்த தேநீரொன்று ....
விருப்பமான தொலைபேசி உரையாடலொன்று .....
குழந்தையிடமிருந்து பெற்றுக் கொண்டிருந்த முத்தமொன்று .....
விரும்பிக் கேட்டுக்கொண்டிருந்த பாடலொன்று ......

நீ வந்து விட்டாய்.
யாவும் ஆறிவிட்டன .
யாவும் துண்டிக்கப்பட்டன .
யாவும் உலர்ந்து விட்டன .
யாவும் நிறுத்தப்பட்டுவிட்டன .

நீ வந்து விட்டாய் .
நான் செய்துகொள்ளவிருந்த
தற்கொலையும் பாதியிலேயே .........

Wednesday, November 12, 2008

கண்ணீர்

சில நேரங்களில்
எல்லையற்ற மகிழ்ச்சி என்னுள் பூக்கும் போது
கண்ணீர் என் கண்ணாடி

சில நேரங்களில்
விலா கொள்ளாமல் நான் சிரிக்கும் போது
கண்ணீர் என் கடிவாளம்

சில நேரங்களில்
சிறுதுகள்கள் உள்ளேறி உறுத்தும் போது
கண்ணீர் என் மருந்து

சில நேரங்களில்
இதயத்து சுமை ஏந்தி நான் துவழும் போது
கண்ணீர் என் சுமைதாங்கி

சில நேரங்களில்
துயரங்கள் எனை ஆழ்த்த முயலும் போது
கண்ணீர் என் வடிகால்

சில நேரங்களில்
எவருமில்லா தனிமையில் நான் தவிக்கும் போது
கண்ணீர் என் துணை

சில நேரங்களில்
என்னை மீட்க நான் எத்தனிக்கும்போது மட்டும்
கண்ணீரும் என் ஆயுதம்

பிறகு ஏன் அழவேண்டும்?



'பாட்டிதான் சொன்னாள்
தேவதைகள் பறக்கும் என்றும்
தேடும் வேளையில் வராது
தேவைப்படும் வேளைகளில் வருமென்றும்..,

Tuesday, November 11, 2008

அந்தரங்கம்



அடுத்தவரின் அந்தரங்கமறிய
ஆசையில்லாதவர்
யாருமில்லையிங்கு!

சுவாரஸ்யம் தேடித்திரியும்
சில மனிதப்புலிகளுக்கு
ஓடத்தெரியாத மான்களென
மாட்டிக்கொள்கின்றன
கசிந்துபோன சில அந்தரங்கங்கள்!

ஒழுகிபோன ஒவ்வொரு அந்தரங்கமும்
ஆயிரம் முறைகள் பொழியும்
அடைமழையாய்!

செய்தித்தாள் துணுக்குகள் முதல்
குழாயடி பெண்களின் கிசுகிசு வரை
அரங்கேற்றத்துடனே அம்பலமாகின்றன
அவை!

நமக்கேன் வம்பு என
ஒதுங்கிச்செல்லும் கால்கள்கூட
காதுகள் கூர்மையாக்கியே நடக்க,

அந்தரங்கம் அறிதலென்பது
யாருக்கும் வெறுப்பதேயில்லை,
தனதானது தெருமுனையில்
சிரிக்கப்படும் வரையிலும்!

கவிதைகளும் உறவுகளும்......!



என் கவிதைகள் என்னுடனே
இருக்கட்டும் - அவை
வெளிப்பட்டால் பல மனங்கள்
புன்ணாகும் - சில உறவுகள்
பாழாகும்.

ஆதலால் குமறும்
எரிமலையாய் கவிதைகள்
என்னுள் இருக்கட்டும்.

மன விளிம்பை தாண்டி
என் பேனா நுனியால்
கசிந்தாலும் அவை கறை
படிந்த தாள்களோடு நிக்கட்டும்..
அதை தாண்டி உன்
விழிகளில் எட்ட வேண்டாம்
என் கவிதைகள் என்னுடனே
இருக்கட்டும்..............

Saturday, November 08, 2008

நட்பு காலம்

மௌன மொழி


மௌனம்
வார்த்தைகளற்றது
தூரத்து தேசங்களையும் கடக்கிறது
தன்னிலை மாறாமலேயே.

நெருக்கத்திலும்
நேசத்திலும் நெருக்கமாகி
புரிதலின் ஆழத்திற்கு
அழைத்து செல்கிறது.

மௌனத்தைவிட
தனிமை அழகென்றாலும்
தனிமைக்கு துணைசேர்ப்பது
மௌனம்.

வீட்டுமாடி நிலா வெளிச்சத்திலும்
வானம் பார்த்து ப்ரியநேசத்தை
அசைபோடுவதிலும்
மணம் நிறைக்கின்றன
மௌன மல்லிகைகள்.

Friday, November 07, 2008

நட்பு

முதன்முதலாய் பார்த்துக்கொண்டது,

பரஸ்பரம் புன்னகைகள்
பறிமாறிக்கொண்டது,

அறிமுகத்தில் தொடங்கி
கதைகள் பேச ஆரம்பித்தது,

உன் அருகாமை இல்லாத‌
பொழுதுகளில் தவித்துப்போனது,

இவையெல்லாம் நடந்தேறிய‌
தேதிகளும் கிழமைகளும்
சத்தியமாய் நினைவில்லை,
நல்லவேளையாய் நட்பில்
அது தேவைப்படுவதுமில்லை!

Thursday, November 06, 2008

அமாவாசையில் பிறந்தவர்களின் குணாதிசயம்

ஒவ்வொரு மாத அமாவாசையைப் பொறுத்து அவர்களின் குணாதிசயம் அமையும்.

அதாவது,

சித்திரை மாத அமாவாசையில் பிறந்தவர்கள் நல்ல குணமுடையவர்கள்.

ஆணி மாதத்தில் பிறந்தவர்களுக்கு கொடுக்கும் குணமும்,

ஆடி மாதத்தில் பிறந்தவர்கள் அப்பாவியாகவும், படைப்பாற்றல் மிக்கவர்களாகவும் இருப்பர்கள்.

ஆவணி மாதத்தில் (அமாவாசையில்) பிறந்தவர்கள் ராஜ தந்திரிகளாகவும், உள்ளூணர்வு மிக்கவர்கள்.

புரட்டாசி மாதத்தில் பிறந்தவர்கள் ஆராய்ச்சியில் ஆர்வம் மிக்கவர்கள்.

ஐப்பசியில் பிறந்திரொந்தால் ஓயாத மனப் போராட்டம் கொண்டவர்களாக இருந்தாலும் மற்றவர்களுக்கு வழி காட்டுபவர்களாக இருப்பார்கள்.

கார்த்திகையில் பிறந்திருந்தால் நாடாளுபவர்களாகவும், நாடாளுபவர்களின் நட்பு பெற்றவர்கள், ஆவணங்களை உருவாக்குவதில் கை தேர்ந்தவர்கள்.

மார்கழியில் பிறந்தவர்கள் துறவிகள் போன்றும் இருப்பர். 40 வயதிலேயே முதிர்ச்சி அடைந்துவிடுவர்.

தை மாதத்தில் பிறந்தால் சுற்றத்தாரை விரும்புவராகள். பங்குனி மாதத்தில் பிறந்தவர்கள் திறமைசாலிகள்.

வைகாசி மாதத்தில் பிறந்தவர்கள் கெட்ட குணங்களைக் கொண்டும் இருப்பார்கள்.

ஆனால், மாசி மாதத்தில் பிறந்தவர்கள் சோபிக்க மாட்டார்கள். அவர்களுக்கு வாழ்க்கைத் துணை சரியாக அமையவில்லை என்றால் வாழக்கை அவ்வளவுதான், அவர்களது வாழ்க்கைத் துணையைப் பொறுத்தே அவர்களது வாழ்க்கை அமையும்.

Wednesday, November 05, 2008

சில சமயம்....!

தொலைந்து போன
காகிதங்கள்
மீண்டும் கிடைத்தது போல்
மகிழ்ச்சி!

மனசு வெட்கப் படாமல்
சில சமயம்
தனக்குத் தானே
குளித்து கொள்ளும்..

ரகசியமாய்க் கனவை
அடைகாத்து வைத்து
குஞ்சு பொறிப்பது போல்
சில துளி நிகழ்வுகள்..

தங்காது எனத் தெரிந்தும்
தென்றலை சுகிக்கும் மனம்..

எதைக்
கட்டிப் போட முடியும்..
கட்டுப்படுகிறவை
தானாய் விரும்பாமல்...!

மனசு

வேகமாய் விழுந்த மின்னல்
கரைந்து போகும்
காற்றோடு ஒரு நொடியில்

பசுமரத்தாணி போல்
சில விஷயம் மட்டும்
சிம்மாசனத்தில்.

ஓவ்வொரு நொடியும்
யாரோ, என்னவோ,
எதுவோ, எப்படியோ….

பழைய விதைகளை பதியமிட்டதில்
புதியதாய் முளைக்கும் கனவுகள்,
தினம் தினம்.

கதவு திறந்துதானிருக்கிறது.
இன்னும் பல
கனவுகளுக்கு.

மனசு

வேகமாய் விழுந்த மின்னல்
கரைந்து போகும்
காற்றோடு ஒரு நொடியில்

பசுமரத்தாணி போல்
சில விஷயம் மட்டும்
சிம்மாசனத்தில்.

ஓவ்வொரு நொடியும்
யாரோ, என்னவோ,
எதுவோ, எப்படியோ….

பழைய விதைகளை பதியமிட்டதில்
புதியதாய் முளைக்கும் கனவுகள்,
தினம் தினம்.

கதவு திறந்துதானிருக்கிறது.
இன்னும் பல
கனவுகளுக்கு.

வாரணம் ஆயிரம்

நேற்று இரவு வழக்கம்போல் மெல்லிய சத்தத்தில் பாடல்கள் ஒலிக்க தூங்கப் போன்னே. வழக்கமாய் கேட்ட பாடல்களே வந்துக் கொண்டிருக்க, திடிரென இது வரை கேட்டிராத பாடல் ஒன்று வந்தது. ஆரம்பமே ஏனோ வெகுவாய் கவர்ந்தது. பாம்பே ஜெயஷ்ரீயின் குரலோ என் நினைக்கத் தோண்றியது.. பாடலிலும் ஹாரீஸின் வாசனை அடித்தாலும் ஒரு சந்தேகம். சுகமா சோகமா எனப் புரியாமால் அந்த இசையில் லயிக்கத் தொடங்கினேன்.

"அனல் மேலே பனித்துளி

அலைபாயும் ஒரு கிளி

மரம் தேடும் மழைத்துளி

இவைதானே இவள் இனி

இமை இரண்டும் தனி தனி

உறக்கங்கள் உறைபனி

எதற்காக‌ தடை இனி....."

கண் மூடி கேட்டேன். யாரோ ஒருவர் இதயத்தை கசக்கி ரத்தத்தை பிழிவது போல் ஒரு வலி. கண்திறந்தேன். மயான அமைதி. ஊர் முழுவதும் கண்ணயர்ந்த நேரம் ,வெகு நாட்களுக்கு பின் கண்கலங்கினேன். இது சோகமா சுகமா புரியவில்லை. எழுதியவர் மீது அளவில்லா கோபம். தாமரையாகத்தான் இருக்க முடியும். ஒரு பெண்ணின் உணர்வை இத்துனை வீரியத்துடன் பதிவு செய்யும் ஆண்கவிஞன் இன்னும் வரவில்லை. இருந்தால் அது முத்துக்குமாராகத்தான் இருக்க முடியும். வலையில் வந்து மேய்ந்தால் தாமரைதான்.. ஆனால் குரல், சுதா ரகுனாதன். எத்துனை முறை ரிப்பீட் செய்தேன் என நினைவில்லை.

"எந்தக் காற்றின் அளாவ‌லில்

மலர் இதழ்கள் திறந்திடுமோ

எந்தத் தேவ வினாடியில்

மன அறைகள் திறந்திடுமோ.. "

சொக்கிப் போனேன். கண்ணுக்கு எட்டிய வரை யாருமில்லா இரவு. தவளைகளும் எனக்காக அமைதி காத்தன. சுவரில் சாய்ந்து நானும் பாடத் தொடங்கினேன். தூரத்தில் நிலா என்னைபோல தனியாக. யாரும் இல்லை என்றாலும் அழகாய் பொழிந்து கொண்டிருந்தது. என்னைப் பார்த்ததும் எனதருகில் வந்து என்னை மடியில் ஏந்திக் கொண்டது. எனக்காக‌ ஒரு கதை சொன்னது. ஆறுதலாய் உணர்ந்தேன். பின் ஏனோ விலகி சென்றது. இத்தனை நாள் இந்த அழகிய இரவையும், நிலாவையும் ரசிக்காமால் வீணடித்ததை நினைத்து நொந்தேன். இவை அழகா, இல்லை இந்தப் பாடல் எல்லாவற்றையும் அழகாக்கியதா? சுதாவின் குரலில் இன்னும் மயங்கியே இருந்தேன். அதிலும் அந்தப் பாடல் முடிவடையும் நேரம் ஒரு ஆண்குரல் அந்த மெட்டை ஹ‌ம் செய்யும்.. கேட்டுப் பாருங்கள். ரொம்ப நாளாச்சு.. தாங்க்ஸ் ஹாரீஸ் மற்றும் குழு...


பல்லவி

அனல் மேலே பனித்துளி

அலைபாயும் ஒரு கிளி

மரம் தேடும் மழைத்துளி

இவைதானே இவள் இனி

இமை இரண்டும் தனி தனி

உறக்கங்கள் உறைபனி

எதற்காக‌ தடை இனி....."


சரணம் -1


எந்தக் காற்றின் அளாவ‌லில்

மலர் இதழ்கள் திறந்திடுமோ

எந்தத் தேவ வினாடியில்

மன அறைகள் திறந்திடுமோ..

ஒரு சிறு வலி இருந்ததுவே

இதயத்திலே இதயத்திலே..

உனதிரு விழி தடவியதால்

அழித்துவிட்டேன் மயக்கத்திலே..

உதிரட்டுமே உடலின் திரை

இதுதானே இனி நிலாவின் கறை கறை..


சரணம் -2

சந்தித்தோமே கனாக்களில்

சில முறையா பல முறையா!

அந்தி வானில் உலாவினோம்

அது உனக்கு நினைவில்லையா?

இரு கரைகளை உடைத்திடுவே

பெருகிடுமா கடலலையே

இரு இரு உயிர் தத்தளிக்கயில்

வழி சொல்லுமா கலங்கரையே

உனதலைகள் எனையடிக்க

கரை சேர்வதும் கனாவில் நிகழ்ந்திட‌..

Tuesday, November 04, 2008

நகைச்சுவை

இரட்டை குழந்தைகளில் ஒருத்தன் பெயர் பீட்டர் என்றால் இன்னொருத்தன் பெயர் இன்னா?

Repeater
----------------------------

கணக்கு புத்தகம் ஏன் பெஜாரா இருக்கு?

It has got lot of problems to solve

தமிழா!... தமிழா!....

1 = ஒன்று -one

10 = பத்து -ten

100 = நூறு -hundred

1000 = ஆயிரம் -thouand

10000 = பத்தாயிரம் -ten thousand

100000 = நூறாயிரம் -hundred thousand

1000000 = பத்துநூறாயிரம் - one million

10000000 = கோடி -ten million

100000000 = அற்புதம் -hundred million

1000000000 = நிகர்புதம் - one billion

10000000000 = கும்பம் -ten billion

100000000000 = கணம் -hundred billion

1000000000000 = கற்பம் -one trillion

10000000000000 = நிகற்பம் -ten trillion

100000000000000 = பதுமம் -hundred trillion

1000000000000000 = சங்கம் -one zillion

10000000000000000 = வெல்லம் -ten zillion

100000000000000000 = அன்னியம் -hundred zillion

1000000000000000000 = அர்த்தம் -?

10000000000000000000 = பரார்த்தம் —?

100000000000000000000 = பூரியம் -?

1000000000000000000000 = முக்கோடி -?

10000000000000000000000 = மஹாயுகம் -????????????????

உயிர்ப்பு

உறுப்புகள் உயிரல்ல
சவத்திடமும் உறுப்புகள்…

இயக்கம் உயிரல்ல
சுழலும் மின்விசிறி…

புருவம் கேள்விக்குறியாய்?
பின் எது?
தேடினேன்… தேடினேன்
தேடல் உயிர்ப்பு.

கண் பேசும் வார்த்தைகள்

காதலும் காற்றைப் போலத்தான்.அது கதவைத் தட்டி அனுமதி கேட்டுவிட்டு உள்ளே வருவதில்லை. சொல்லபோனால் காற்று நுழையாத இடத்தில் கூட காதல் நுழைந்துவிடும். ஒரு வழிப்போக்கன் போல் வரும் காதல் உரிமையாளன் போல் வீட்டுக்குள் தங்கிவிடுகிறது. காலம்காலமாக இந்த மண்ணில் ஜெயித்த காதலைவிட தோல்வியுற்ற காதலும் ஒரு தலைக் காதலுமே காவியமாகி நம் மனதில் இடம் பெற்றிருக்கின்றன.

"இந்த சோகம்கூட சுகமானது.ஏனென்றால் இது நீ தந்தது" என்கிறான் ஒரு உருதுக் கவிஞன்.தண்ணீரை விடவும் இரத்தததை விடவும் அடர்த்தியானது கண்ணீர்த் துளி.இதயத்தின் அறைகளில் இமயத்தின் பாரத்தை எடுத்து வைப்பவை காதல் தோல்விப் பாடல்கள். அப்படி முத்துக்குமார் எழுதிய ஒருப் பாடல்தான் "7ஜி ரெயின்போ காலனி" என்ற படத்தில் வந்த "கண் பேசும் வார்த்தைகள்". இந்தப் பாடலை எப்போது கேட்டாலும் அதன் உள்ளே ஊடாடிக்கொண்டிருக்கும் வலி நம் உயிருக்குள் ஊஞ்சலாடும்.

பல்லவி

கண் பேசும் வார்த்தைகள் புரிவதில்லை
காத்திருந்தால் பெண் கனிவதில்லை
ஒரு முகம் மறைய மறு முகம் தெரிய‌
கண்ணாடி இதயமில்லை‍ கடல்
கை மூடி மறைவதில்லை!!

காற்றில் இலைக‌ள் ப‌ற‌ந்த‌ பிற‌கும்
கிளையில் த‌ழும்புக‌ள் அழிவ‌தில்லை
காயம் நூறு கண்ட பிறகும்
உன்னை உள்மணம் மறப்பதில்லை!
ஒருமுறைதான் பெண் பார்ப்பதினால்
வருகிற வலி அவள் அறிவதில்லை!
கனவினிலும் தினம் நினைவினிலும்
கரைகிற ஆண்மணம் புரிவதில்லை!

சரணம் 1

காட்டிலே காயும் நிலவை
கண்டுகொள்ள யாருமில்லை!
கண்களின் அனுமதி வாங்கி
காதலும் இங்கே வருவதில்லை!

தூரத்தில் தெரியும் வெளிச்சம்
பாதைக்குச் சொந்தமில்லை!
மின்னலின் ஒளியைப் பிடிக்க‌
மின்மினிப் பூச்சிக்கு தெரியவில்லை!

விழி உனக்குச் சொந்தமடி
வேதனைகள் எனக்குச் சொந்தமடி!
அலை க‌ட‌லை க‌ல‌ந்த‌ப் பின்னே
நுரைக‌ள் ம‌ட்டும் க‌ரைக்கே சொந்த‌மடி!

சரணம் 2

உலகத்தில் எத்தனை பெண் உள்ளது
மனம் ஒருத்தியை மட்டும் கொண்டாடுது!
ஒரு முறை வாழ்ந்திட திண்டாடுது
இது உயிர் வரை பாய்ந்து பந்தாடுது!

பனித்துளி வந்து மோதியதால்
இந்த முள்ளும் இங்கே துண்டானது!
பூமியிம் உள்ள பொய்களெல்லாம்
அட புடவை கட்டிப் பெண்ணானது!

புயல் அடித்தால் மலை இருக்கும்
மரங்களும் பூக்களும் மறைந்து விடும்!
சிரிப்பு வரும் அழுகை வரும்
காதலில் இரண்டுமே கலந்து வரும்!

முத்தம்




மிப்பெரிய யுத்தங்களின் அதிர்வுகளை விட


மிகச்சிறிய முத்தங்களின் அதிர்வுகள்


உங்களை பயங்காட்டலாம்....!

Monday, November 03, 2008

என்னையும்..மீறி….

உடல் நிலை..
சரியில்லை ..உனக்கு…

மருத்துவமும்..
உறவுகளும்…
மீட்டுத்தந்திருக்கும்..
சுக நிலையை..

என்ன..செய்வதென..
புரிவதற்க்குமுன்..
என்னை..மீறி..
அனுப்பிவைத்தன..
விழிகள்..
சில..
கண்ணீர்த்துளிகளை..

வெற்றி தோல்வி

எனக்கொன்றும்..
வலிக்கவில்லை..
இப்படித்தான்..
திரிகிறேன்..
ஒவ்வொரு..
தோல்வியிலும்..

மறைப்பதற்க்கு..
கற்றுக்கொண்ட..
மறுநொடியே..
அடுத்தது..வெற்றி
என்று..
முடிவு செய்து..
நடக்கிறேன்…

முடிந்த வெற்றியின்.
கடைசி..
களித்துளியில்..
அடுத்த..தோல்வியின்..
கர்வம்..கிழம்பும்..
புரிந்துகொள்ள..
புத்தியிருந்தும்..
மறைக்கத்தெரியவில்லை..
வெற்றித்தோல்விகளை..
எனக்குள்..
இருக்கும்.
எனக்குள்..

Friday, October 31, 2008

தோழி....!

தோழி....!
பேச என்ன இருக்கிறது
உனது தோற்றங்களும் தடங்களும்
இன்னொருவருக்காய் ஆகிப்போன
மாயையில்
பேசி முடிந்து போன
நிசப்தங்களை தவிர.....!

Tuesday, October 14, 2008

சாத்தியப்புள்ளிகள்



வாழ்வை இனியதாக்கும் பொருட்டு
கனவுப் பாசறைகளில் உலாவத் தொடங்கி
கனவுகள் சமைப்பது மட்டுமே
வாழ்க்கையாகியிருக்கிறது

எல்லாமே சூன்யமாயிருக்கையில்
எங்கு தொடங்கி எதில் முடிக்க??

இருத்தலும் இல்லாதிருத்தலுக்குமான
அடையாளங்கள் அழிந்தொழிந்தபின்
எதைத் தொடர எதை விட??

சுவாசித்தல் மட்டுமே
உயிரோடிருப்பதைப் பறைசாற்றுகையில்
வாழ்தலுக்கான சாத்தியப்புள்ளிகளை
தேடியலைகிறது மனம்
எக்கணத்திலேனும்
அவை கிடைக்கப்பெறலாமென..

Monday, October 13, 2008

வாழ்க்கை


வாழ்க்கையின் அதிவேகத்தில்
உணர்வுகளை பத்திரப்படுத்தல்
அசாத்தியமானதாயிருக்கிறது

துயில் கொள்ளுமென் காதில்
கேட்கிறது மெல்லிய விசும்பல் ஒலி

திசைமாறவியலாத கணத்தில்
சிதறிப் போகிறது பிரியம்

வலிந்து தவிர்த்தலில்
உறுத்திக் கொண்டேயிருக்கின்றன‌
சில நினைவுகளும் கவிதைகளும்..

Sunday, October 12, 2008

எல்லைகள்

வட்டத்துக்குள் இருக்கப்
பழகிக் கொள்ளவில்லை
இடைஞ்சலாயிருக்கிறது
இச்சிறிய வட்டம்
மூச்சு விட இயலவில்லை
வெட்டவெளியெனினும்
துரத்தி விளையாட முடியவில்லை
செளகரியத்திற்காகவோ
எல்லை தாண்டவில்லையென்ற
மறைமுக உண‌ர்த்த‌லுக்காகவோ
வரைந்து கொள்ளலாம் இவ்வட்டத்தை
பெரிதாய்..
சற்றே பெரிதாய்..
இன்னும் பெரியதாய்..

Saturday, October 11, 2008

பிரிதலும், பிரிதல் நிமித்தமும்..



எதன் பொருட்டேனும் நிகழலாம் எதுவும்
எப்போது வேண்டுமானாலும்

தெரிந்து விட்ட மர‌ண‌வ‌லியாய்
முன்ன‌மே நிச்ச‌யிக்க‌ப்ப‌ட்ட பிரிவுகள்

உயிர் ந‌ர‌ம்பை அறுக்கும்ப‌டியான‌
விலகல்கள் இனி சாத்திய‌மில்லை

பீறிடும் அழுகை ம‌றைத்து
பொய்யாய் புன்னகைத்த க‌ண‌ங்களில்,
விசுவிசுத்த காற்றின் சப்தமும்
மடியிருத்திய மழலையின் கொஞ்சல்களும்
கேட்டபடியேயிருக்கிறது
இன்னமும்.

Friday, October 10, 2008

வாழ்வின் நிழல்கள்


நீண்ட மணற்பரப்பும், ஒற்றை நிலவும்
ஆர்ப்பரிக்கும் கடலும்
போதுமானதாகவே இருக்கிறது.

விரும்பிடத் தோன்றவில்லை
சட்டங்களுக்குள் அடைபட.

இதுதான் வாழ்க்கையென்றே உணர்த்திப்போன
பொழுதுகளில் எதார்த்தத்தின் கரங்கள்
கழுத்தை இறுக்க மூச்சு முட்டத் துவங்குகிறது.

உடைக்கவியலா கண்ணாடிச் சட்டத்தினுள்
அகப்பட்டுக் கொண்டதாய்
பொருமிக் கொண்டேயிருக்கிறது
என் மீதமுள்ள பொழுதுகளும்...

உன்னிஷ்டம் கேட்கப்போவதில்லையென
மிரட்டும் காலத்தின் சுழல்களில்
மூழ்கிப்போகிறேன்
வரங்களுக்கு சற்றும் தகுதியில்லாதவளாய்..

விருப்பு வெறுப்புகளற்ற பிராந்தியத்தில்
நடைபோடத் துவங்குகிறேன்
என்னுலகில் சஞ்சரிக்கும் சிற்றெறும்பு தேடி...

உங்கள் உலகத்தில் வாழ்ந்திராத எனக்கு
தெரியத்தானில்லை
உலகம் பற்றி ஒருவரி சொல்ல...

Thursday, October 09, 2008

ஆழ்கடலும் அமைதியும்..

உனக்கு முன்பான நாட்களில்
எனக்கென்று யாருமில்லை
என்னைத்தவிர...

அவ்வப்போது முகம் காட்டிச் செல்லும்
இருள் சூழ்ந்த சில நினைவுகள்.

இருத்தலின் எச்சமாய்
கிறுக்கிச் செல்லும் சில வார்த்தைகள்
என் நாட்குறிப்பின் பக்கங்களை..

நீ வந்து சென்ற நாளொன்றின்
பின்புலப் பொழுதுகளில் தனிமைக்குத்
துணையாய் வீற்றிருக்கும் என் கவிதை.

கலைக்க விரும்பாத தவமாய்
நீண்டு கொண்டே செல்லும்
என் மெளனமும்...
புலன்களுக்கு சிக்காத இறுதிப்புள்ளி நோக்கி.

Wednesday, October 08, 2008

நிதர்சனம்


தப்பித்து ஓடி வந்தேன்
முகமூடி மனிதர்களிடமிருந்து...
காத்திருந்தது
என் மேஜையில்
எனக்கான முகமூடி ஒன்று.

Tuesday, October 07, 2008

குற்றவாளி

அழகான அதிகாலை
பனியின் மென்மையை ரசிக்க இடம்தராமல்
வலுக்கட்டாயமாக வந்துவிடும்
அலுவலக நினைவு.

உருண்டோடும் காலத்தின் பின்னால்
நானுமொரு சக்கரமாய்..

மெல்ல தலை காட்டிய சூரியனின் பார்வை
தகிக்கத் துவங்க,
திணிக்கப்பட்ட வாழ்க்கையோடு
போரிடத் தொடங்குகிறேன்
நிராயுதபாணியாய்..

பேருந்தை துரத்தும் அவசரச் சூழலில்
'புளிச்'சென்று வந்து விழும்
காவிநிறத்தில்...

சிவந்த பற்கள் காட்டி அகோரமாய் சிரிக்கும்
முகமறியா மனிதனின் துப்பலை
மெளனமாய் ஏற்று நிறம் மாறத்துவங்கும்
நகரத்துத்

தார்ச்சாலை
ஏதும் செய்ய இயலா நிலையில்
ஒரு முறைப்பை மட்டும் கொட்டி விட்டு
கூட்டத்தில் கலந்து மறையும்
குற்றவாளியாய் நான்..

அன்பு - பலவீனம்

உன்னை பலவீனப்படுத்தும்
எந்த ஒரு விஷயத்திடம்
இருந்தும் விலகியே இரு.

அது,
அதிகபட்ச
அன்பாக இருந்தாலும்...

Thursday, October 02, 2008

கனவு மெய்ப்படுமா?

நல்வரவை எதிர் நோக்கி

முடிவில்லா சாலையில் பயணிக்கிறேன்

முடித்து வைத்த கனவுகளோடு.............

கரைந்திடும் நிமிடங்கள்,கரைத்திடுமா கனவுகளை?

நம்பிக்கைதான் கைவிடுமோ?

Friday, September 05, 2008

புதிய பழமைகள்


இன்றின் புதுமையாய்
கண்டறியப்படுகின்றன
நேற்றின் பழமைகள்…

இன்றின் புதுமைகள்
கண்டறியப்படும்
நாளைய பழமையாய்…

கச்சிதமாய்
வரையப் பட்ட
வட்டத்தில்
கண்டறிய முடிவதில்லை.
முதல் எது?
முடிவு எது?

Thursday, August 21, 2008

இல்லை...!

கற்பனைகள் மட்டுமே
கவிதைகளில் வருமாயின்
எங்களின் வார்த்தைகளில்
கனவுகள் இல்லை...


அனுபவங்கள் மட்டுமே
கவிதைகளாகுமாயின்
எங்களின் வரிகளில்
நிகழ்வுகள் இல்லை...


காதல் செய்தால் மட்டுமே
கவிதைகள் தோன்றுமாயின்
எங்களின் எழுத்துக்களில்
காதல் இல்லை...

Thursday, August 14, 2008

கடவுள்

உள்ளே
வைத்துக்கொண்டு
உலகமெல்லாம்...
தேடுகின்றான்
மனிதன்...!

Monday, August 11, 2008

பள்ளங்கள்

உடற்பயிற்சி
செய்யாமலே
இளைத்தேன்
சாலைகளால்!
அதில் உள்ள
பள்ளங்களால்

Tuesday, August 05, 2008

இருளும் வெளிச்சமும்

இருளின் விரல்கள் நீண்டு
எடுத்துக் கொள்கிறது
ஒளியின் கைகளில்,
நிறைந்திருக்கும் நம்பிக்கை வெளிச்சத்தை!

இதயத்தின் இடுக்குகளிலிருந்து
எண்ணம் நீளுகிறது,
உன் இதமான புன்னகையின்
கதகதப்பைத் தேடி.

Saturday, August 02, 2008

நினைவுகள்

காணாமல்போன என் கவிதைப்
புத்தகத்தை தேடுகிறேன்
மறந்து போன என் நினைவுகளை
மீட்பதற்கு ........!

Friday, August 01, 2008

மனம்

முடிவிலி வரை

என் மனம் சென்றாலும்

முடிவது உன்னிடம் தான் ......!

Thursday, July 31, 2008

ஈரம்..!

ஒவ்வொரு இரவிலும்
என் தலையணையில்
தங்கிவிட்டு போகிறது
உன் நினைவுகளின் ஈரம்..!

Wednesday, July 30, 2008

உன்னோடு....!

உன்னோடு கொஞ்சம்
பேச வேண்டும்,
கிடைக்குமா தனிமை?
நீயும், நானுமற்ற தனிமை!

பேச்சில் கொஞ்சம்
பருக வேண்டும்,
இருக்குமா வெறுமை?
வார்த்தைகளும், வசனங்களுமற்ற வெறுமை!

வெறுமையில் கொஞ்சம்
வசிக்க வேண்டும்,
அமையுமா இனிமை?
ஆசைகளும், ஓசைகளுமற்ற இனிமை!

தனிமையில் கொஞ்சம்
தரிக்க வேண்டும்,
தகையுமா மெளனம்?
சப்தங்களும், அமைதியுமற்ற மெளனம்

உண்மையில்

அழுது கொண்டே இருக்கையில்
சிரிக்க சொல்கிறாய்
விழித்து கொண்டிருக்கையில்
கனவாய் வந்து செல்கிறாய்

விடியல் கலைந்து
இரவு தோன்ற
இது தான் உன் வாழ்க்கை
இங்கு தான் உன்
தொடக்கம் என்று
விட்டு செல்கிறாய்


கைகளிலிருந்து நழுக்கொண்டு
மீண்டும் வருவதாய்
எந்த அறிப்பும் இன்றி
இருளை உள்வாங்கிய கண்கள்
உன்னையே நோக்கி நடக்கையில்
கருமேகங்களுக்குள்
ஒளிந்து கொண்டு அழுகிறாய்


அவற்றையும் கடந்து
தொடர்கிறேன்; அழைக்கிறேன்
பார்வையில் பனித்துளிகள்
தெளித்து வழியில்
ஒதுங்கி செல்கிறாய்


இது தான் உன்
தொடக்கம் என்று
சில பூக்களை
எறிந்து செல்கிறாய்


நீ எறிந்த பூக்கள் எல்லாம்
ஏளன புன்னகை பூக்கின்றன
என் வழியெல்லாம்


உண்மையில் எல்லாம்
பொய்களென...

முதல் மழை என்னை நனைத்ததே..!

பாடலாசிரியர் : நா . முத்துக்குமார்
பாடியவர்கள் : R.பிரசன்னா, ஹரிஹரன், மஹதி

படம் : பீமா

**************************************************

முதல் மழை என்னை நனைத்ததே..
முதல் முறை ஜன்னல் திறந்ததே..
பெயரே தெரியாத பறவை அழைத்ததே..
மனமும் பறந்ததே..

இதயமும்.. ஓ.. இதமாய் மிதந்ததே..
முதல் மழை நம்மை நனைத்ததே..
மூடிவைத்த ஜன்னல் திறந்ததே..
பெயரே தெரியாத பறவை அழைத்ததே..
மனமும் பறந்ததே..

இதயமும்.. ஹ்ம்.. இதமாய் மிதந்ததே .. யீ..

கனவோடு தான் அடி நீ தோன்றினாய்..
கண்களால் உன்னைப்படம் எடுத்தேன்..
என் வாசலில் நேற்று உன் வாசனை..
நீ நின்ற இடம் இன்று உணர்தேன்..

எதுவும் புரியா புதுக்கவிதை..
அர்த்தம் மொத்தம் இன்று அறிந்தேன்..
கையை மீறும் ஒரு குடையாய்..
காற்றோடு தான் நானும் பறந்தேன்..
மழை காற்றோடு தான் நானும் பறந்தேன்..

பெயரே தெரியாத பறவை அழைத்ததே..
இதயமும்.. ஓ.. இதமாய் மிதந்ததே ..
ஓர்நாள் உன்னை நானும் காணாவிட்டால்..
என் வாழ்வில் அந்த நாளே இல்லை ..

ஓ.. ஓர்நாள் உன்னை நானும் பார்த்தேவிட்டால்..
அந்நாளின் நீளம் போதவில்லை..
இரவும் பகலும் ஒரு மயக்கம்..
நீங்காமலே நெஞ்சில் இருக்கும்..

உயிரினுள்ளே உந்தன் நெருக்கம்..
இறந்தாலுமே என்றும் இருக்குமே..
நான் இருந்தாலுமே என்றும் இருக்குமே..

Tuesday, July 29, 2008

உன் நினைவுகள்


உன் நினைவுகளைத்
தாங்கிய
என் பொழுதுகள்
விடியாமலே
இருந்திருக்கலாம்..

Monday, July 28, 2008

வார்த்தைகள்


உறுதியைத் தொலைத்து நின்ற
உன் வார்த்தைகள்
வெறும் மொழியானது இன்று
கனவுகளைத் தொலைத்த
என் விழிகளில் சில துளிகள்
கவிதையானது உன்னால்...

ஒரு தடவை ....!


மரணத்தை அணைக்கின்றாய்
தவழ்ந்து வரும் குழந்தையை
அணைப்பது போல்...


இல்லாத உலகத்திற்கு போக
தவம் கிடக்கின்றாய்
இருக்கும் உலகை விட்டு...


பிறப்பும் இறப்பும் ஒரு தடவையே
பிறந்த பயனை முழுமையாய்
அடையாமல்
குறைப் பிரவசமாய் போகத்
துடிக்கின்றாயே தோழி...

Sunday, July 27, 2008

உயிர் அழும் ஓசை

உயிர் அழும் ஓசையில்
நீ மட்டும் நிம்மதி துயில்
கொள்வதெப்படி?

என்னை விழிக்க செய்துவிட்டு
இமைகளைப் பிடுங்கி செல்கிறது
உனது மௌனம்
வலியில் அவைகள்
துடிப்பதை அறிந்தும்...

Saturday, July 26, 2008

நிழல்


எங்கு சென்றாலும்
இடைவிடாமல் தொடர்கிறது
உன் காதல்
என்னோடு விலகி
நிற்கும் நிழலைப் போல

தூரத்தில் தோழி

தனிமை ஒவ்வொரு முறையும் என்னை சூழ்ந்து கொண்டபோது
உனக்கும் எனக்குமான
கண்ணாடியில்
பிரிவின் கீறல்கள்
முகங்கள் மறைத்து
மீண்டும் சிரிக்க முயற்சிக்கின்றன
எதையும் தொடர முடியாமல்
எதுவும் தொடவும் முடியாமல்
தவிக்கும் பாதங்களுக்கிடையில்!

Friday, July 25, 2008

அன்புள்ள கடவுளுக்கு


அன்புள்ளக் கடவுளுக்கு,
இதுதான் இறுதி என்று
எழுதுகிறேன்..
எத்தனை முறை எழுதுவது
கடிதம் உனக்கு?


பிரிக்கப்படாமலும் படிக்கப்படாமலும்
கிடக்கின்றன அவை
முகவரியே நீ தான்
தர மறுக்கிறாய்
உள்ளே இருந்து கொண்டு
வர மறுக்கிறாய்


நீ யார் என்ற போருக்குள்
யார் நீ என்ற கேள்விகளுக்குள்
விரிந்துகொண்டே போகிறாய்


அழுகையை மட்டும்
உனக்கும் எழுதிவைக்கிறேன்
நீ தான் பொறுப்பென்று
சுகத்தை எனக்குள்
பதுக்கி வைக்கிறேன்


நிரந்தரமென்று
எதையும் பொருட்படுத்தாத
உன் மௌனத்தைக் கண்டு
என் பேனா முனைகள்
உடைகின்றன
தூர வீசுகின்றேன்


கோபம் களைந்து
மீண்டும் எழுதுகிறேன்
உன் மௌனத்தைக் கலைக்க
ஒரு கடிதம்
இதுதான் இறுதியென்று...


இப்படிக்கு,
என்றும் நான்

காற்றினிலே வரும் கீதம்

படம்: மீரா
இசை: S V வெங்கட்ராமன்
பாடியவர்: M S சுப்புலக்ஷ்மி

******************************

காற்றினிலே வரும் கீதம் காற்றினிலே வரும் கீதம்
கண்கள் பனித்திடப் பொங்கும் கீதம்
கல்லும் கனியும் கீதம் - காற்றினிலே

பட்டமரங்கள் தளிர்க்கும் கீதம் பண்ணொலி கொஞ்சிடும் கீதம்
காட்டு விலங்கும் கேட்டே மயங்கும் மதுரமோஹன கீதம்
நெஞ்சினில் இன்பக்கனலை எழுப்பி நினைவழிக்கும் கீதம் - காற்றினிலே

சுனை வண்டுடன் சோலைக்குயிலும் மனங்குவிந்திடவும்
வானவெளிதனில் தாராகணங்கள் தயங்கி நின்றிடவும்
ஆ! என் சொல்வேன்! மாயப்பிள்ளை வேய்ங்குழல் பொழிகீதம் - காற்றினிலே


நிலா மலர்ந்த இரவினில் தென்றல் உலாவிடும் நதியில்
நீல நிறத்துப் பாலகன் ஒருவன் குழல் ஊதி நின்றான்
காலமெல்லாம் அவன் காதலை எண்ணி உருகுமோ என் உள்ளம்- காற்றினிலே

Wednesday, July 23, 2008

நட்பு

அன்பின் பறிமாற்றத்தில்
ஆழத்தின் தாழ் திறப்பு
காதல் என்றால்
கதவடைப்பு பிரிவா?

இவை இரண்டிற்கும்
நூலிழையில் ஒர்
அழகிய திரை
நட்பா?

இதயத்தின்
வாசிப்பு மட்டும் தொடர்கிறது
நம் அன்பின்
கை கோர்ப்பில்
கேள்விகளைக் கடந்து...

இமை ஓர கனவுகள்

உன்னிடம் பேச
என்னிடம் மொழிகள் இல்லை
சில மௌனங்களே
எஞ்சி உள்ளன.

அதைக் கொண்டு
பேசுகிறேன்! பேசுகிறேன்!
பேசிக் கொண்டே இருக்கிறேன்.

மொழிகளை கடந்து
அசைகின்றன உதடுகள்
விழிக்கின்றன உனக்கான
என் கனவுகள் இமையோரத்தில்!

Tuesday, July 22, 2008

கண்ணீர்


இறுதி

இறுதியில் மரணத்திற்காகவே
எஞ்சியுள்ளது
இந்த வாழ்க்கை
எல்லாம் மரணித்துப்போன
பயணங்களுக்கிடையில்

Thursday, July 17, 2008

சிரிப்பு


காதலின் மொழி

எத்தனை தரம் கேட்டாலும்
அலுத்து போவதில்லை - நீ
என்னுடன் பேசிக்கொண்டிருக்கும் மௌனம் !

தொலைக்கப்பட்ட காதல் ..

கல்லூரி விடுமுறையில் - வகுப்பறை
முழுதும் நிறைந்து கிடக்கிறது,
படித்தவர்கள் தொலைத்துச் சென்ற காதல்..!

நட்பின் சுவடுகள்

நாம் கொண்ட லட்சியங்கள் தோற்றிருக்கலாம்,

பிரிந்தபோது எழுதிய முகவரிகள் மாறியிருக்கலாம்,

கனவுகள் பகிர்ந்தித்தளித்த நண்பர்முகம் மறந்திருக்கலாம்,

காலத்தின் பிணைக்கைதியாய் காதலை கடந்திருக்கலாம்,

உலகில் புதிதாய் பல உறவுகள் கிடைத்திருக்கலாம்,

எங்கு வாழ்கிறோமென்று ஒருவருக்கொருவர்

அறியாமலிருக்கலாம்,அனுபவங்கள் கடந்ததால்,

வாழ்வின் அர்த்தம் புரிந்திருக்கலாம்,

ஆனால் கல்லூரி நினைவுகள் கொடுத்துச் சென்ற ,

நட்பெனும் தழும்பு மட்டும் என் நெஞ்சில் அப்படியே..!

Sunday, July 13, 2008

பாதாம் பருப்பு

பாதாம் பருப்பு சாப்பிடுவதால் உடலுக்கு அதிகமான புரதச்சத்து கிடைக்கும். அதுமட்டுமின்றி பாதாம் பருப்பு சாப்பிடுவதால் நமது ஜீரண சக்தி அதிகரிக்கும் என்பதை ஆய்வாளர்கள் கண்டறிந்து உள்ளனர். நமது பெருங்குடலில் நன்மை செய்யும் பாக்டீரியாக்கள் ஏராளமாக இருக்கின்றன. இவை தீமை செய்யும் பாக்டீரியாக்களை அழித்து, உணவு செரிமாணத்தை அதிகபடுத்தும் தன்மை வாய்ந்தவை. இதனால், செரிமாணக் கோளாறு உள்ளவர்களுக்கு நன்மை செய்யும் பாக்டீரியாக்களின் வளர்ச்சியை ஊக்குவிக்கும் வேதிப்பொருட்களை உணவுடன் அளிப்பது உண்டு.

பாதாம் பருப்பு சாப்பிட்டால், வேதிப்பொருட்கள் அளிக்க வேண்டிய அவசியம் இருக்காது. பாதாம்பருப்பு நமது இரைப்பையை தாண்டி பெருங்குடலுக்கு சென்று, அங்குள்ள பாக்டீரியாக்களின் வளர்ச்சியை ஊக்குவிக்கின்றது என்பதை கண்டறிந்து உள்ளனர். இதனால் செரிமாணக் கோளாறுகள் ஏற்படும் வாய்ப்பு குறைகிறது. எனவே செரிமாணப் பிரச்சினை இருப்பவர்கள் மட்டுமின்றி உடல் ஆரோக்கியத்தை விரும்பும் அனைவரும் பாதாம் பருப்பு சாப்பிடலாம்.

Friday, July 11, 2008

மோனம்

ஒரு துளியாய் வீழ்ந்தப் போது
தெரியவில்லைசேரப்போவது ஒரு சமுத்திரமென
அலைஅலையாய் அலைகிறேன்
அகண்டு கிடக்கிறது கடலென அறியாமல்
கரையிலே ஒதுக்கிப் போடும்
உன்கரங்களை இறுகப் பற்றிக் கொள்கிறேன்
உள்ளே இழுத்துச் செல்.

நன்றி ரேவதி

பொம்மையின் ஞாபகம்

வாசலைத் திறந்து
செல்ல முடியாத
பொம்மை
எல்லோரும்
வெளியேறிச் சென்றபின்
தனித்திருக்கிறது
குழந்தையின் ஞாபகங்களுடன்

Thursday, July 10, 2008

மௌனம்

ஒரு எந்திரம் மிக நன்றாக வேலை செய்யும் நிலையில் இருக்கும் போது சத்தம் மிகக் குறைவாகவே இருக்கும். அதன் வேலை செய்யும் திறன் பழுதுபடும் போது தான் சத்தம் அதிகரிக்கத் துவங்கும். இது எந்திரத்திற்கு மட்டுமல்ல மனிதர்களுக்கும் பொருந்தும். நிறைய சாதித்தவர்களின், மனித சமுதாயத்தில் தங்கள் காலடித் தடங்களைப் பதித்து விட்டுப் போனவர்களின் வாழ்க்கைகளை ஆராய்ந்தோமானால் அவர்கள் ஓயாமல் பேசுபவர்களாக இருப்பதில்லை.
வம்பு பேசுபவர்களாகவோ அடுத்தவர்களின் தனிப்பட்ட வாழ்க்கை குறித்து அலசுபவர்களாகவோ, விமரிசித்து மகிழ்பவர்களாகவோ இருப்பதில்லை. அவர்களுக்கென்று வாழ்க்கையில் குறிக்கோள் இருக்கிறது. அதில்தான் அவர்களுக்கு முழுக்கவனமும் இருக்கிறது. அவர்களிடம் தேவையற்ற பேச்சுகளுக்கு நேரமோ மனமோ இருப்பதில்லை.அமைதியாக இருக்கும் போதுதான் தெளிவாக சிந்திக்க முடிகிறது.
தெளிவான சிந்தனைக்குப் பின் பிறக்கும் செயல்களே சிறப்புறுகின்றன. எதிலும் நமது முழுத் திறமையும் வெளிப்பட வேண்டுமானால் மனதை ஒழுங்குபடுத்தி, அனைத்து சக்திகளையும் நாம் ஒருமுகப்படுத்த வேண்டும். இது பேசிக் கொண்டே இருக்கும் சந்தர்ப்பங்களில் சாத்தியமாவதில்லை. மௌனம் நமது சக்திகளை விரயமாக்காமல் சேமிக்க உதவுகிறது. ஓயாமல் பேசிக் கொண்டிருக்கையில் நமது நேரத்தையும், சக்திகளையும் விரயமாக்குவதுடன், அடுத்தவர்களைத் தொந்தரவும் செய்கிறோம்.
சொல்லத் தேவையில்லாத, பின்னால் நம்மை வருந்த வைக்கிற எத்தனையோ விஷயங்களைச் சொல்லியும் விடுகிறோம்.ஒரு கிரேக்க ஞானி சொன்னதைப் போல் "உங்கள் பேச்சு மௌனத்தை விடச் சிறப்பாக இருக்குமானால் மட்டுமே பேசுங்கள். இல்லையேல் மௌனமே நல்லது". உண்மையில் மேற்போக்காக நாம் வாழும் போது தான் அதிகமாய் வாக்குவாதங்களில் ஈடுபடுகிறோம்; அடுத்தவர்களை விமரிசிக்கிறோம்; சண்டை சச்சரவுகளில் ஈடுபடுகிறோம். சொன்னதையே திரும்பத் திரும்ப சொல்கிறோம். ஆனால் வாழ்க்கையில் ஆழமான நிலைகளை அடையும் போது இயல்பாகவே பேச்சு குறைந்து விடுகிறது.பலரும் மௌனம் என்று குறிப்பிடுவது வாய் மூடியிருப்பதையே என்றாலும் இது ஒரு ஆரம்பம் மட்டுமே. இதைக் காட்டிலும் உயர்ந்த மௌனம் இன்னொன்று உள்ளது. அது உள்ளே நிகழும் மௌனம். மனமும் அமைதியடையும் போதே அந்த மௌனம் சாத்தியமாகிறது. வாய் மூடி இருந்தாலும் மனம் ஓயாமல் ஏதாவது சொல்லிக் கொண்டிருந்தால் வெளிப்புற மௌனத்தால் பெரிய அளவு பலன்களை நாம் எதிர்பார்க்க முடியாது. உட்புறமும் மௌனத்தை அனுசரிக்க முடிந்தால் அதனால் கிடைக்கும் பலன்கள் அளவில்லாதவை. இந்த உள்புற மௌனத்தை அடைய தியானம், ஆத்மவிசாரம் ஆகியவை உதவுகின்றன.ஒவ்வொரு முக்கியமான செயலைச் செய்யும் முன்னும் ஓரிரு நிமிடங்கள் மௌனமாய் இருப்பது சிதறும் சக்திகளைச் சேர்த்து ஒழுங்குபடுத்த உதவுகிறது. இப்படி ஒழுங்குபடுத்தப்பட்ட சக்திகளை முறையாகப் பயன்படுத்தி ஒரு செயலைச் செய்யும் போது அது மிகச் சிறப்பாக அமைவதில் ஆச்சரியமில்லை.
மேலும் எல்லா புதிய பரிமாணங்களும், ஆழமான அர்த்தங்களும் நமக்குப் புலனாவது நாம் இப்படி மௌனமாக இருக்கும் போது தான். நம் உண்மையான தேவை என்ன, அதற்கு என்ன செய்ய வேண்டும், எப்படி செய்ய வேண்டும் என்ற கேள்விகளுக்கு குழப்பமில்லாமல் தெளிவாக விடை காண்பது இந்த ஆழமான மௌனத்தின் போது எளிதாகிறது. அதற்கான பெரும் சக்தியும் இந்த மௌனத்தில் நம்முள் பிறக்கிறது.
ஒரு பெரும் சூறாவளியின் சகல சக்திகளுக்கும் மூலம் அதன் அமைதியான மையத்தில் இருப்பது போல எல்லா சாதனைகளையும் புரியத் தேவையான மகா சக்தியை நம்முள்ளே பிறக்கும் அந்த மௌனத்தில் நாம் காண முடியும்

Saturday, July 05, 2008

குழந்தை பெற்றெடுத்த ஆண்....!

அமெரிக்காவின் ஓரிகான் மருத்துவமனையில், பெண்ணாக இருந்து பின்னர் ஆணாக மாறியவருக்கு அழகான பெண் குழந்தை பிறந்துள்ளது.

அந்த அதிசய பிறவியின் பெயர் தாமஸ் பீட்டி. இவருக்கு 34 வயதாகிறது. இயற்கையில் பெண்ணாக பிறந்தவர்தான் தாமஸ் பீட்டி. ஆனால் பின்னர் ஹார்மோன் சிகிச்சை மற்றும் அறுவைச்சிகிச்சை மூலம் 10 ஆண்டுகளுக்கு முன்பு ஆணாக மாறி விட்டார். ஆணாகவே தற்போது வாழ்ந்தும் வருகிறார்.

இவருக்கு அறுவைச் சிகிச்சை உள்ளிட்டவை நடந்த போதிலும் இவரிடம் பெண்ணுக்குரிய இனப்பெருக்க உறுப்புகள் அப்படியேதான் இருந்தன. இந்த நிலையில் செயற்கை கருவூட்டல் மூலம் கருத்தரித்தார் தாமஸ் பீட்டி.

இன்னொருவரின் விந்தை எடுத்து, தாமஸ் பீட்டியின் கரு முட்டைகளுடன் சேர்த்து கருத்தரிக்கப்பட்டது. கர்ப்பமடைந்த தாமஸ் பீட்டிக்கு ஜூன் 290ம்தேதி அழகான பெண் குழந்தை பிறந்தது. தாமஸும், சேயும் நலம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. குழந்தை நல்ல ஆரோக்கியத்துடன் உள்ளதாம்.

இயற்கையான முறையில் பிரசவம் நடந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இப்போது தாமஸுக்கு இருக்கும் ஒரே பெரிய வருத்தம் என்னவென்றால், குழந்தைக்கு பால் கொடுக்க முடியாதே என்பதுதானாம்.

கடந்த ஏப்ரல் மாதம்தான் தான் ஆணாக மாறியது எப்படி என்பதை ஓப்ரா வின்பிரே ஷோவில் விளக்கியிருந்தார் தாமஸ்.

2 ஆண்டுகளுக்கு முன்புதான் குழந்தை பெறும் ஆசை வந்தது தாமஸுக்கு. இதையடுத்து மாதந்தோறும் இருமுறை எடுத்துக் கொள்ளும் ஹார்மோன் ஊசியை நிறுத்தினார். இதையடுத்து அவருக்கு மாத விடாய் சுழற்சி திரும்ப வந்தது.

பீட்டிக்கு ஒரு மனைவியும் உண்டு. அவரது பெயர் நான்சி (46). ஐந்து ஆண்டுகளுக்கு முன்புதான் நான்சியை மணந்தார் பீட்டி. அவருக்கு கருத்தரிக்க முடியாமல் போய் விட்டது. அதனால்தான் மனைவிக்காக பீட்டி கர்ப்பமடைந்தாராம்.

நான்சிக்கு முதல் திருமணம் மூலம் 2 பெரிய மகள்கள் இருக்கிறார்களாம்.
குழந்தையை எப்படி வளர்க்கப் போகிறீர்கள் என்று ஷோவின்போது வின்பிரே கேட்டபோது, வழக்கம் போலத்தான். அவர்தான் தந்தையாக இருப்பார். நான் தாயாக இருப்பேன் என்று கூறினார் நான்சி.

தாமஸ் பேசாமல் தனது பெயரை ‘தாயுமானவன்’ என்று மாற்றிக் கொள்ளலாம்!

Wednesday, July 02, 2008

'உடம்பை இளைக்க, சாப்பிடுவதைக் குறைக்காதீர்'

'எனது பருமனான உடம்பை இளைக்கச் செய்வதற்காக, குறைவாகவே சாப்பிடுகிறேன்' என்று சொல்வதை நிறுத்திக்கொள்வது சாலச் சிறந்தது.

பருமனான உடலை இளைக்க வைப்பதற்கும், அன்றாடம் உண்ணும் உணவைக் குறைத்துக் கொள்வதற்கும் சம்மந்தமே இல்லை.

இதையே ஆஸ்திரேலிய மருத்துவ ஆய்வு ஒன்று ஆதாரத்துடன் எடுத்துரைக்கிறது.

நியூகாஸ்டில் மருத்துவ ஆய்வுக் குழு ஒன்று, உடல் பருமனுக்கும், அன்றாட உணவைக் குறைப்பதற்கும் தொடர்பு உண்டா என்பதை உடல் பருமனான 179 பேரைக் கொண்டு ஆய்வு செய்தது.

இவர்களில் பாதிபேருக்கு கட்டுப்பாட்டு உணவாக, மூன்று வேளை மட்டுமே சாப்பாடு அளிக்கப்பட்டது. எஞ்சிய பாதி பேருக்கு மூன்று வேளை உணவுடன் வழக்கம் போல் நொறுக்குத் தீனிகளும் கொடுக்கப்பட்டது.

ஒரு குறிப்பிட்ட கால இடைவெளிக்குப் பிறகு, ஆய்வின் முடிவில் சாப்பாடு குறைக்கப்பட்டவர்கள் எவ்வித மாற்றமுமின்றி பருமனாகவே இருப்பது தெரியவந்தது.

மேலும், பருமனான நபர் அன்றாடம் எவ்வளவு சாப்பிடுகிறார் என்பது முக்கியமல்ல; எந்த வகையான உணவுப் பொருட்களை உட்கொள்கிறார் என்பதே முக்கியம் என ஆய்வாளர்கள் தெரிவித்தனர்.

எனவே, உடம்பை இளைப்பதற்காக சாப்பிடுவதைக் குறைத்துக் கொள்ளாமல், கொழுப்பு போன்றவை குறைவாகவுள்ள பொருட்களைத் தேர்ந்தெடுத்து சாப்பிடுவது நன்மை பயக்கும்.

ஆயுளை அதிகரிக்கும் காபி!

காபி குடித்தால் இருதயம் தொடர்பான நோய்கள் நெருங்காது என்று ஆய்வில் தெரியவந்துள்ளது.

இதுகுறித்து லண்டன் விஞ்ஞானிகள் ஆராய்ச்சி நடத்தினர். நாள் ஒன்றுக்கு 6 முறை காபி அருந்தும் 41 ஆயிரம் ஆண்கள் மற்றும் 84 ஆயிரம் பெண்கள் ஆகியோரிடம் கடந்த 20 ஆண்டுகளாக ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டது.

காபி அருந்துபவர்களின் புகைப்பிடிக்கும் பழக்கமும் கண்காணிக்கப்பட்டது.

ஆராய்ச்சியின் முடிவில், புகை மற்றும் மது பழக்கத்தினால் காபி அருந்தாதவர்களின் உடல்நிலை பாதிக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. அவர்களுக்கு இருதய நோய் அறிகுறிகளும் தென்பட்டன.

ஆனாலும், தினமும் காபி அருந்தியவர்களின் உடல்நிலையில் பெரிய அளவிலான பாதிப்புகள் ஏற்படவில்லை.

அதிலும் குறிப்பாக, காபி அருந்தும் பெண்களுக்கு மற்றவர்களை காட்டிலும் இருதய நோய், பக்கவாதம் போன்றவற்றுக்கான அறிகுறிகள் 25 சதவீதம் குறைவாக இருந்தது.

இதன் மூலம், 'காபி அருந்தாதவர்களுடன் ஒப்பிடுகையில், காபி அருந்துபவர்களுக்கு ஆயுள் அதிகம் என ஆய்வு முடிவுகள் உறுதி செய்வதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

எனை நட்பில் வென்றாயே!

ஒரே ஒரு வார்த்தைப் பேசி விட
எண்ணி ஒரு மணி நேரம்
எனக்குள்பேசிக் கொண்டிருந்தேன்
நட்பு எனக்குள் மட்டும் தானா
உனக்குள் இல்லையா
நான் ஏன் முதலில் பேச வேண்டுமென்று
பழகிய நாளை
அதில் இளகிய மனதை
நீ நோகடித்தது நினைவில்லையா?
நெஞ்சுக்குள் ஏனோ
திடீரென்று ஒரு புழுக்கம்
ஏனோ மனக் குழப்பம்
நமக்குள் என்ன தான் நிகழ்ந்தது
உனை எனக்குப் புரியலையா?
எனை உனக்குப் புரியலையா?
இருந்தும் ஏன் மௌனம்
சொல்லுக்கு நம் நட்பு பழகலையா
என்னில் முதல் கண்ணீரை
வரவழைத்த நட்பு உனதே!
என்னில் முதல் மௌனத்தை
வரவழைத்த உறவும் உனதே!
உயிர் போகும் நாளிலும்
அழ வைத்த உணர்வு
மனம் விட்டு அகலுமொ
அதுவும் உயிரான நட்பில்
என் அருகில் நீ வந்து
நின்ற நிமிடம்
என் மனக்குழப்பம் தவிர்த்து
பேச வாய் திறந்த வேளை
நீ கண் கலங்கி நின்றாயே!
எனை நட்பில் வென்றாயே!

Tuesday, July 01, 2008

கேள்விகள்

கேள்விகள் ஒளிந்திருக்கும்
ஒவ்வொரு தருணமும்
கடினமானவைதான்!!

காலத்தின் கைகளில்
ஒப்படைக்கும்
கேள்விகள்,
விடையறியாதவை…

விடைகள் காத்திருக்கும்
கேள்விகளோ,
கேட்கப்படாமலேயே
காலத்தைக்
கடந்துவிடுபவை….

புருவங்கள் உயர்த்தி
விழிகள் உதிர்க்கும்
கேள்விகள்,
மனதினை தைப்பவை….

உள்ளத்தில் கள்ளமின்றி
மழலைகள் தெறிக்கும்
கேள்விகளோ,
விடையறிந்தும்
விளக்க இயலாதவை…

எண்ணற்ற கேள்விகள்,
ஒவ்வோர் மனதிலும்….
நியாயமானவை,
ஆதாரமற்றவை,
இயல்பானவை,
தேவையற்றவை,
சிந்திக்க வைப்பவை…
மொத்தத்தில்,
விசனப்படவே வைக்கின்றன
அத்தனை கேள்விகளும்!!

Monday, June 30, 2008

பயணம்

என்ன காரணம்
என்று சரியாகத் தெரியவில்லை
எப்போதும் சண்டைபோடுவது
ஜன்னலோர இருக்கைக்காக மட்டுமே…
பேருந்திலும்
இரயில் பயணத்திலும்.
எப்போதும் தேவைப்படுகிறது
ஜன்னலோர இருக்கை…

பயணத்தின் வேகத்தை
உணர்த்துவதாலோ,
அல்லது
கண்களை கலங்க வைக்கும்
காற்றின் வாசனையை
முகர்வதாலோ,
அல்லது
ஓயாது ஓடிக்கொண்டிருக்கும்
சிந்தனைத் தேரின்
ஓட்டத்தை அதிகரிப்பதாலோ,
தெரியவில்லை….
ஜன்னலோர இருக்கையே
பிடித்தலாக இருக்கிறது….
பயணங்கள் என்றுமே
சலிப்பதில்லை…
ஜன்னல் இருக்கும்வரையாவது….

Sunday, June 29, 2008

உண்மை

நமக்கானவை
மறைக்கப்படும்போதும்
மறுக்கப்படும்போதும்
கொதித்தெழுகிறேன் உண்மைகளுக்காக...
இதில்,
எனக்கானவை
கிடைக்கப்பெற்றால் கூட
ஊமையாகிப்போகிறேன்
உண்மைகளுடன் சேர்ந்து
நானும்...

Saturday, June 28, 2008

தெருவோரப் பூக்கள்

யாருக்காக
எதற்காக
ஏன் பூத்திருக்கின்றன
இந்த பூக்கள்...

எங்கோ விழுந்து
ஏனோ முளைத்து
எப்படியோ வளர்ந்து
பூத்து நிற்கின்றன...

எத்தனையோ
பாதங்கள் கடந்திருக்கும்
கண்கள் பார்த்திருக்கும்
இந்த செடியை...

பார்க்காத கண்களும்
கடந்து போன பாதங்களும்
அவகாசம் கேட்கின்றன.
இந்த மலரை பார்க்கவோ?...
பறிக்கவோ?...

Friday, June 27, 2008

தேடல்


சூழ்நிலைகள்
சூழ்ந்து கொண்டு
சூட்சுமம் செய்கிறது.

கருணையே இல்லாது
கற்பனை கனவுகள்
விரட்டுகிறது.

உயிர் தரிக்கும் உணர்வுகள்
முட்டி மோதி
உடைகிறது.

தேடலில் உள்ள சுகத்திற்காக
இல்லாத ஒன்றை
தேடுகிறது.

எங்கு இருக்கிறாய் நீ
என்பது
இதுவரைப் புலப்படவில்லை.

வருவாய் - வந்து
குறை தீர்ப்பாய் என்ற
ஏக்கங்கள்.

ஒரு நாள் நீயும் வருவாய்
இதே போல
இன்னொரு கவிதையுடன் !

மனிதர்கள்

மனிதர்கள் -
பணம் குவிக்கக் கடன்படுகிறர்கள்
புகழ் ஈட்ட நாணம் இழக்கிறார்கள்
அதிகாரம் பெற அடிமைகள் ஆகிறார்கள்
உலகை வெல்ல உலகை அழிக்கிறார்கள்
உயிர் வாழ உயிரை விடுகிறார்கள்

Thursday, June 26, 2008

சிறு வயது பேனா

காணாமல் போக்கியாகிவிட்டது
சிறு வயதுப் பேனாவை
அற்புதமான பேனா அது
விரல்களுக்கேற்ற கனபரிமாணம் உடையது
தாளில் வழுக்கிக் கொண்டு ஓடும் அழகே தனி
என் முக்கிய கணங்களில் உடனிருந்திருக்கிறது
பத்தாவது பரிட்சைகூட அதில்தான் எழுதிய ஞாபகம்
இலக்கியத்தின் வீச்சை
நட்பின் வகசிப்பை
ப்ரியமானவர்களின் ஆதுரத்தை
என எல்லாவற்றையும் அதில் கண்டிருக்கிறேன்
எங்கு தேடியும் கிடைக்கவில்லை
இப்போது வேறு பேனா வந்து விட்டபோதும்
சிறுவயதுப் பேனாவை ஏனோ மறக்க முடியவில்லை

Wednesday, June 25, 2008

உன் நினைவு...

ஆம்!
கொஞ்ச நாட்களாய் தான்
எந்த சூழ்நிலையில்
எப்படி இருந்தாலும்
'அந்த' பாடலை கேட்கும் போது
நீ தான்
நீ மட்டும் தான்
மனதில் தோன்றி
மறையாமல் நிற்கிறாய்...

விழுங்க முடியாத வேதனையில்
தவிக்கிறேன்
துடிக்கிறேன்.

தொலைவில் இருந்து கொண்டு
தொல்லைதான் தருகிறாய்
நினைவில்...

இம்சையாய் இருக்கின்ற போதும்
மீண்டும் மீண்டும் கேட்கிறேன்...

பாடல் முழுவதையும்
கேட்க வேண்டுமென
ஆசைதான்.
ஆனால்
முதல் வரியின் தொடக்கத்திலேயே
உன்னில் மூழ்கி
பாடலை மறக்கிறேன்.
மீண்டும் கேட்க எத்தனிக்கையில்
மீண்டும்
அதே தொடக்கம்
அதே உன் நினைவு....

Tuesday, June 24, 2008

நட்பு


முடிவு தரும் மரணம்

என்றாவது
தேடல்கள் இல்லாதிருப்பேன்.
தேவை இன்றி அல்ல...
தேவையே இல்லாமல்...


என்னுடைய வாழ்க்கை
தேவை
தேடல் என
சுவாரஸ்யமாக இருக்கிறது.


தேவையின் அவசரம்
தேடலை முடுக்குகிறது.
கிடைத்ததன் திருப்தி
இன்றுவரை இல்லை...


அடுத்த தேடலை நோக்கியே
அவசர வாழ்க்கை...
ஆசை என்றில்லாமல்
அவசியம் என்றே
தீர்மானிக்கப்படுகின்றன
தேடல்கள் அனைத்தும்.


மனமென்ற குரங்கு
தாவிக்கொண்டே இருக்கிறது
இருப்பினும்
என்றாவது
தேடல்கள் இல்லாதிருப்பேன்.
தேவை இன்றி அல்ல...
தேவையே இல்லாமல்...

Monday, June 23, 2008

செவ்வாயில் பனி படிகத் துகள்

செவ்வாய்க் கிரகத்தின் மேற்பரப்பு குறித்து ஆராய்ந்து தகவல் வெளியிட்டு வருகின்ற நாசா நிறுவனத்தின் ஃபீனிக்ஸ் விண்கலம், அங்கு பனிப் படிகங்கள் இருப்பதை வெளிப்படுத்தியிருக்கிறது என்று தாம் நம்புவதாக அமெரிக்க விஞ்ஞானிகள் கூறுகிறார்கள்.

இந்த வார முற்பகுதியில் செவ்வாயின் துருவப் பகுதியில், தனது இயந்திரக் கரத்தினால், சிறிய அளவிலான அகழ்வு ஒன்றை மேற்கொண்ட ஃபீனிக்ஸ் விண்கலம், அதிலிருந்து பல பிரகாசமான துகள்களை வெளியே எடுத்தது.
அவை உப்பாக இருக்கலாம் என்று முன்னர் நம்பப்பட்டது, ஆனால், வியாழனளவில் அவை மறைந்துவிட்டன.

உப்பு ஆவியாகாது என்றும், தாம் கண்டுபிடித்தது பனிக்கட்டிதான் என்பதற்கு இது ஒரு ஏற்புடைய ஆதாரம் என்றும், இந்த ஃபீனிக்ஸ் விண்கலத் திட்டத்தின் தலைமை விஞ்ஞானியான அரிசோனா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பீட்டர் ஸ்மித் கூறியுள்ளார்.

மாறாத ஒரு புன்னகை

தவிப்போ
எவ்வித சோகமோ இல்லாமல்
இனிமையாகவே அமைந்துவிடும்
தொடக்கங்களாக
எதிர்பார்க்கிறேன்
பிரிவிலும் ஒரு புன்னகை...

உறுதியான முடிவுகளும்
பொருளுணர்ந்த பிரிவுகளும்
சூழ்நிலையில்
துயரமாகவே அமைய
கை கோர்த்து நடந்த தருணங்களையும்
பேசிச் சிரித்த பொழுதுகளையும்
நினைத்து சிரிக்க முற்படுகையில்
உனை
பார்வையிலிருந்து
மறைக்கிறது கண்ணீர்...

எல்லாம் மறைத்து
கை கொடுத்து
வழி அனுப்பும் வேளையில்
எதையோ உணர்த்த
கையில் பட்டு தெறிக்கிறது
கண்ணீர்...

நினைப்பது போல்
அமைவதில்லை வாழ்க்கை
கவிதையும் கூட.

காணாமல் போன மொழி

உனக்கும் எனக்குமான
இடைவெளி
அதிகரித்துக் கொண்டேயிருக்கிறது
மௌனத்தை
உடைத்து கொண்டு
வெளிக் கிளம்பிய
வார்த்தைகள் வஞ்சித்து விட்டன
அலுவலகக் கடித மொழி
சூழ்ந்து கொண்டு
என் மொழியை
விரட்டி விட்டது
வார்த்தைகளற்ற வனாந்தரத்தில்
வசித்துக் கொண்டிருக்கிறேன்
உனக்கான
மொழியின்மையோடு
கணக்குப் போட்டு
காய் நகர்த்துகிறாய்
போதும் போதுமென்றாலும்
போதுமே போதுமா
எல்லாவற்றிலிருந்தும்
வெளிவர முடியுமென்றிருந்த
இறுமாப்பு சிதைந்து விட்டது
இருளோடு செய்யும்
யுத்தம் போல் இருக்கிறது
இப்போதென் வாழ்வு
புலம்பல்களாய்ச்
சிறுத்துப் போன
என் மொழியை
மீட்டெடுப்பேன்

Friday, June 20, 2008

நீ வேண்டும்

நகர மறுத்த நாட்களையெல்லாம்
மூட்டை கட்டி தூர வீசினேன்
இன்று வந்த நாளை மட்டும்
என்னுள் மறைத்து ஒளித்து வைக்கிறேன்
கூடி கழிந்து நின்ற நாட்கள்
உன் வரவை எனக்கு உறுதி செய்தன
அர்த்தமற்ற உலகம்கூட
உன் வரவால் இன்று அர்த்தமாகுது
மரித்து கிடந்த வாழ்வும் இன்று
உயிர்த்தெழுந்து வாழ சொல்லுதே
துடிக்க மறுத்த இதயம்கூட
இரண்டாய் துடிக்க இன்று கேட்கிறேன்
சீக்கிரம் வா எந்தன் உயிரே
என் பெண்மை உன்னால் முழுமை பெறட்டும்....

நன்றி: புனிதா

Thursday, June 19, 2008

வார்த்தைகள் தளும்பிய நேரம்

எனக்கான என் உலகில்
வட்டமாய் என்னை சுற்றி
வரையப்பட்ட கோடும் நானும் மட்டும்
வெளியில் செல்லும் ஆசைகள்
பாதிக்கோட்டை அழிக்க ஆரம்பித்தன
என்னை யாரும் காண வந்தால்
கோடு சற்று பெரிதானது
என் உலகம் சொற்களால் ஆனது
வட்டத்துக்குள் அடங்காமல் சொற்கள் அங்கங்கே திமிறும்.. அலையும்
ஆசைகள் அழித்த கோட்டை தாண்டி
சொற்கள் நீராவியாய் மாறி மறைந்து சென்றது
இங்கு நான் புது உலகை காணவா
தொலைந்த சொற்களை தேடவா
அலைந்த சொற்களில் ஒன்றிரண்டு காயம்பட்டு திரும்பின
என்னை சுற்றி புதிய உலகம் வரையப்பட்டது
நான் அவசரமாய் என் வட்டத்தில் சென்று அமர்ந்து கொண்டேன்
புதிதாய் கோட்டையும் அழுத்தமாய் வரையத்தொடங்கினேன்
என்னைத்தாண்டி சென்ற சொற்கள்
அலைகிறது வெளியெங்கும் என்னைத்தேடி.

Wednesday, June 18, 2008

அன்பின் அர்த்தங்கள்

அன்பின் அர்த்தங்களை வாழ்வின் எல்லை வரைச் சென்று தேடி யாசித்தாலும் ஏனோ அர்த்தமற்ற உறவுகள் மட்டுமே கண்ணில் தெரிகின்றன. ஒவ்வொரு காலை துயிலெழும்போதும் இன்றாவது வாழ வேண்டும் என்றுதான் ஆசை தோன்றுகிறது. ஆனால் அரிதாரம் பூசிய இந்த மானிட கானகத்தில் உண்மை மனிதத்தை எங்கு தேடி காண்பது. சுயநலம் பிடித்த இந்த மானுட தேசத்தில் இருந்து என்று விடைக் கிடைக்குமோ? சுயநல பேய்களின் இரும்பு பிடியில் சிக்கி பொறாமை தீயில் வெந்து அர்த்தமிழந்து போகின்றன அன்பின் அர்த்தங்கள். ஏதோ சில சமயங்களில் மயிலிறகாய் வருட நட்பு கைக்கோர்க்கும் போது அங்கும் நம்பிக்கைகள் நீர்த்துப் போகின்றன. தனிமையில் கொஞ்சம் வாழ்ந்து பார்க்க நினைத்தால் அங்கு உறவு கைக்கட்டி கேளி செய்கிறது. மரணம் ஒன்றிலாவது என்னை தொந்தரவு செய்யாதீர்கள். அடுத்த ஜென்மம் ஒன்றிலாவது பிறவியேயில்லாத பிறவி கேட்கிறேன். அது வரை நிம்மதியாய் கொஞ்சம் தூங்கிக் கொள்கிறேன்.

நன்றி: புனிதா

Tuesday, June 17, 2008

எனக்காகவே நான்

தொடும் எல்லைகள்
தாண்டியும்
சில புள்ளிகள்
செல்கின்றன.

சில‌ கோல‌ங்க‌ளுக்குள் அட‌ங்கும்
புள்ளிக‌ள் சொல்கின்ற‌ன‌..
நான் ரொம்ப சௌக்கியம்.
நீ?..

புரித‌லுக்கான‌ தேட‌ல்க‌ளில்தான்
இந்த‌ தேச‌ம்
தொலைந்து போகின்ற‌து.

வரப்போகும் நாட்களுடன்
நான் வாழ‌
என‌க்கான‌ வாழ்க்கை
கிடைப்ப‌தில்லை.

ஆனாலும்,

என‌க்கான‌
என் வாழ்க்கை
இனிமேல்
எந்த‌ தேதியில் வ‌ரும்....!

Sunday, June 15, 2008

தனிமை

என்னிடம்
எதுவும் தனியே
கிடைப்பதில்லை.
உண்மை
ஒரு பொய்யோடும்
மனது
கொஞ்சம் காயங்களோடும்
தனிமை
பல பிரியங்களோடும்......
ஆயினும்,
நான் இன்னும்
தனிமையில் உள்ளேன்!

Friday, June 13, 2008

நான்

நான் என்றும்
எனக்கான
பொழுதுகளில்
நானாகவே வாழ்கிறேன்...

சுயம் இழந்து
உருமாற்றத்தில்
பிணையும்போது
கொஞ்சம்
செத்தும் வாழ்கின்றேன்...

பயம்

வெடித்து விடுமோ
என்ற பயத்திலேயே
பெரிதாக்குவதில்லை.....
பெரும்பாலான பலூன்களையும்,
பிரச்சனைகளையும்.!!

Wednesday, June 11, 2008

மனது

அலைபாய்கின்ற மனது
எப்போதும்
தப்பிப்பதையே சிந்திக்கிறது.
எதிலிருந்து
தப்பிப்பது
என்பதை மறந்து...!

Monday, June 09, 2008

What I observe is not what I see


சாலையில் கண்டெடுக்கப்படும் எந்த ஒரு
கிழிந்த கவிதைக்காகிதமும்
அதன் காகிதத்திற்கப்பாலான ஒரு வடிவத்தில் தான்
மூளையில் பதிகின்றன.

Sunday, June 08, 2008

பேசப்படாதவள்

பூக்கள் இறைந்த கனவின் வழியில்
இதழ்பிரியச் சிரித்த முகம்விலக்கி
இருளுள் கரைகிறான் சித்தார்த்தன்
அரசமரத்தடியில் நெடிய இமையிறுக்கி
மறந்துபோகிறான் துணையை

அவன் தேர் நகர்ந்த வீதியும்
நெகிழ்ந்ததோ…! நனைந்ததோ…!

சாளரத்தின் ஊடே அனுப்பிய
யசோதரையின் விழிகள்
திரும்பவேயில்லை
பௌர்ணமி நாளொன்றில்
அவன் புத்தனாயினான்
அவள் பிச்சியாகினாள்

“அன்பே! என்னோடிரு... என்னோடிரு…!”

கண்ணீரில் நெய்த குரலை
அரண்மனைச்சுவர்கள் உறிஞ்ச
வரலாற்றிலிருந்தும் போனாள்
அவளும் போனாள்!!!

சுழலும் ஒளிவட்டங்களின்
பின்னால்தானிருக்கிறது
கவனிக்கப்படாத இருட்டும்.

Friday, June 06, 2008

நீ தீண்டாத என் உயிர்

விவரிப்புகளில் அடங்கிவிடாத வலியோடு அழுத்துகிறது மனதை
புதிதாக வரையப்பட்ட எல்லைக்கோடு
இமைகளை மூட விடாது அச்சமூட்டுகிறது
விலக்கி வைக்கப்பட்டதான மாயபிம்பம்
தடுக்கவியலாது நடந்துவிடுகிறது உயிர்வதை
பெயர் மாற்றி உச்சரித்த கணங்களில்
பாதுகாப்பகவே வைக்கப்பட்டாலும்
அந்நியமாகவே மிதக்கிறது கண்ணாடி கூடுக்குள்
நீ தீண்டாத என் உயிர்

உறவுகள்

காலையில் மலர்ந்து மாலையில் உதிரும் மலர்களைப் போலத் தான் உறவுகளும்.. நாம் அடுத்த பருவத்தை எட்டும் பொழுது தடுக்க இயலாமல் சில உறவுகள் தானாக உத...