எனக்கான என் உலகில்
வட்டமாய் என்னை சுற்றி
வரையப்பட்ட கோடும் நானும் மட்டும்
வெளியில் செல்லும் ஆசைகள்
பாதிக்கோட்டை அழிக்க ஆரம்பித்தன
என்னை யாரும் காண வந்தால்
கோடு சற்று பெரிதானது
என் உலகம் சொற்களால் ஆனது
வட்டத்துக்குள் அடங்காமல் சொற்கள் அங்கங்கே திமிறும்.. அலையும்
ஆசைகள் அழித்த கோட்டை தாண்டி
சொற்கள் நீராவியாய் மாறி மறைந்து சென்றது
இங்கு நான் புது உலகை காணவா
தொலைந்த சொற்களை தேடவா
அலைந்த சொற்களில் ஒன்றிரண்டு காயம்பட்டு திரும்பின
என்னை சுற்றி புதிய உலகம் வரையப்பட்டது
நான் அவசரமாய் என் வட்டத்தில் சென்று அமர்ந்து கொண்டேன்
புதிதாய் கோட்டையும் அழுத்தமாய் வரையத்தொடங்கினேன்
என்னைத்தாண்டி சென்ற சொற்கள்
அலைகிறது வெளியெங்கும் என்னைத்தேடி.
Subscribe to:
Post Comments (Atom)
உறவுகள்
காலையில் மலர்ந்து மாலையில் உதிரும் மலர்களைப் போலத் தான் உறவுகளும்.. நாம் அடுத்த பருவத்தை எட்டும் பொழுது தடுக்க இயலாமல் சில உறவுகள் தானாக உத...
-
எழுதப்படும் எல்லா வார்த்தைகளும் பகிர்ந்து கொள்ளப்படுவதில்லை எல்லோருடனும் சில அனைவருக்காக சில சிலருக்காக பல எனக்காக மிகப்பல உனக்காக...
-
உள்ளத்தின் ஓர் மூலையில் நாளாந்தம் ஏதோ ஓர் தேடல்! கண்ணில் காணும் ஒவ்வொரு மனிதர்களுக்குள்ளும் மனிதத்தைத் தேடும் என் விழிகள். ஒவ்வொரு தேடலுக்கு...
1 comment:
:-)
பிடிச்ச கவிதைகளை சேகரிச்சு வைக்குறது ரொம்ப நல்ல விசயம்தான். ஆனாலும் இதை யார் எழுதியது, எங்கேர்ந்து எடுத்தீங்கன்னு நீங்க குறிப்பிட்டு இருந்தீங்கன்னா உங்க மூலமா இந்தக் கவிதைய எழுதுன என் பதிவுக்கும் சில பேர் வந்து பார்த்துருப்பாங்க.
-சென்ஷி
Post a Comment