ஆம்!கொஞ்ச நாட்களாய் தான்
எந்த சூழ்நிலையில்
எப்படி இருந்தாலும்
'அந்த' பாடலை கேட்கும் போது
நீ தான்
நீ மட்டும் தான்
மனதில் தோன்றி
மறையாமல் நிற்கிறாய்...
விழுங்க முடியாத வேதனையில்
தவிக்கிறேன்
துடிக்கிறேன்.
தொலைவில் இருந்து கொண்டு
தொல்லைதான் தருகிறாய்
நினைவில்...
இம்சையாய் இருக்கின்ற போதும்
மீண்டும் மீண்டும் கேட்கிறேன்...
பாடல் முழுவதையும்
கேட்க வேண்டுமென
ஆசைதான்.
ஆனால்
முதல் வரியின் தொடக்கத்திலேயே
உன்னில் மூழ்கி
பாடலை மறக்கிறேன்.
மீண்டும் கேட்க எத்தனிக்கையில்
மீண்டும்
அதே தொடக்கம்
அதே உன் நினைவு....
No comments:
Post a Comment