Wednesday, July 30, 2008

உன்னோடு....!

உன்னோடு கொஞ்சம்
பேச வேண்டும்,
கிடைக்குமா தனிமை?
நீயும், நானுமற்ற தனிமை!

பேச்சில் கொஞ்சம்
பருக வேண்டும்,
இருக்குமா வெறுமை?
வார்த்தைகளும், வசனங்களுமற்ற வெறுமை!

வெறுமையில் கொஞ்சம்
வசிக்க வேண்டும்,
அமையுமா இனிமை?
ஆசைகளும், ஓசைகளுமற்ற இனிமை!

தனிமையில் கொஞ்சம்
தரிக்க வேண்டும்,
தகையுமா மெளனம்?
சப்தங்களும், அமைதியுமற்ற மெளனம்

1 comment:

நாணல் said...

உங்க தேடல் வெற்றி பெற வாழ்த்துக்கள்..
கவிதை நல்லா இருக்கு.. வித்தியாசமா யோசிச்சிருக்கீங்க... வாழ்த்துக்கள் :-)

உறவுகள்

காலையில் மலர்ந்து மாலையில் உதிரும் மலர்களைப் போலத் தான் உறவுகளும்.. நாம் அடுத்த பருவத்தை எட்டும் பொழுது தடுக்க இயலாமல் சில உறவுகள் தானாக உத...