Monday, June 30, 2008
பயணம்
என்று சரியாகத் தெரியவில்லை
எப்போதும் சண்டைபோடுவது
ஜன்னலோர இருக்கைக்காக மட்டுமே…
பேருந்திலும்
இரயில் பயணத்திலும்.
எப்போதும் தேவைப்படுகிறது
ஜன்னலோர இருக்கை…
பயணத்தின் வேகத்தை
உணர்த்துவதாலோ,
அல்லது
கண்களை கலங்க வைக்கும்
காற்றின் வாசனையை
முகர்வதாலோ,
அல்லது
ஓயாது ஓடிக்கொண்டிருக்கும்
சிந்தனைத் தேரின்
ஓட்டத்தை அதிகரிப்பதாலோ,
தெரியவில்லை….
ஜன்னலோர இருக்கையே
பிடித்தலாக இருக்கிறது….
பயணங்கள் என்றுமே
சலிப்பதில்லை…
ஜன்னல் இருக்கும்வரையாவது….
Sunday, June 29, 2008
உண்மை
மறைக்கப்படும்போதும்
மறுக்கப்படும்போதும்
கொதித்தெழுகிறேன் உண்மைகளுக்காக...
இதில்,
எனக்கானவை
கிடைக்கப்பெற்றால் கூட
ஊமையாகிப்போகிறேன்
உண்மைகளுடன் சேர்ந்து
நானும்...
Saturday, June 28, 2008
தெருவோரப் பூக்கள்
யாருக்காக
எதற்காக
ஏன் பூத்திருக்கின்றன
இந்த பூக்கள்...
எங்கோ விழுந்து
ஏனோ முளைத்து
எப்படியோ வளர்ந்து
பூத்து நிற்கின்றன...
எத்தனையோ
பாதங்கள் கடந்திருக்கும்
கண்கள் பார்த்திருக்கும்
இந்த செடியை...
பார்க்காத கண்களும்
கடந்து போன பாதங்களும்
அவகாசம் கேட்கின்றன.
இந்த மலரை பார்க்கவோ?...
பறிக்கவோ?...
Friday, June 27, 2008
தேடல்
சூழ்நிலைகள்
சூழ்ந்து கொண்டு
சூட்சுமம் செய்கிறது.
கருணையே இல்லாது
கற்பனை கனவுகள்
விரட்டுகிறது.
உயிர் தரிக்கும் உணர்வுகள்
முட்டி மோதி
உடைகிறது.
தேடலில் உள்ள சுகத்திற்காக
இல்லாத ஒன்றை
தேடுகிறது.
எங்கு இருக்கிறாய் நீ
என்பது
இதுவரைப் புலப்படவில்லை.
வருவாய் - வந்து
குறை தீர்ப்பாய் என்ற
ஏக்கங்கள்.
ஒரு நாள் நீயும் வருவாய்
இதே போல
இன்னொரு கவிதையுடன் !
மனிதர்கள்
பணம் குவிக்கக் கடன்படுகிறர்கள்
புகழ் ஈட்ட நாணம் இழக்கிறார்கள்
அதிகாரம் பெற அடிமைகள் ஆகிறார்கள்
உலகை வெல்ல உலகை அழிக்கிறார்கள்
உயிர் வாழ உயிரை விடுகிறார்கள்
Thursday, June 26, 2008
சிறு வயது பேனா
சிறு வயதுப் பேனாவை
அற்புதமான பேனா அது
விரல்களுக்கேற்ற கனபரிமாணம் உடையது
தாளில் வழுக்கிக் கொண்டு ஓடும் அழகே தனி
என் முக்கிய கணங்களில் உடனிருந்திருக்கிறது
பத்தாவது பரிட்சைகூட அதில்தான் எழுதிய ஞாபகம்
இலக்கியத்தின் வீச்சை
நட்பின் வகசிப்பை
ப்ரியமானவர்களின் ஆதுரத்தை
என எல்லாவற்றையும் அதில் கண்டிருக்கிறேன்
எங்கு தேடியும் கிடைக்கவில்லை
இப்போது வேறு பேனா வந்து விட்டபோதும்
சிறுவயதுப் பேனாவை ஏனோ மறக்க முடியவில்லை
Wednesday, June 25, 2008
உன் நினைவு...
ஆம்!கொஞ்ச நாட்களாய் தான்
எந்த சூழ்நிலையில்
எப்படி இருந்தாலும்
'அந்த' பாடலை கேட்கும் போது
நீ தான்
நீ மட்டும் தான்
மனதில் தோன்றி
மறையாமல் நிற்கிறாய்...
விழுங்க முடியாத வேதனையில்
தவிக்கிறேன்
துடிக்கிறேன்.
தொலைவில் இருந்து கொண்டு
தொல்லைதான் தருகிறாய்
நினைவில்...
இம்சையாய் இருக்கின்ற போதும்
மீண்டும் மீண்டும் கேட்கிறேன்...
பாடல் முழுவதையும்
கேட்க வேண்டுமென
ஆசைதான்.
ஆனால்
முதல் வரியின் தொடக்கத்திலேயே
உன்னில் மூழ்கி
பாடலை மறக்கிறேன்.
மீண்டும் கேட்க எத்தனிக்கையில்
மீண்டும்
அதே தொடக்கம்
அதே உன் நினைவு....
Tuesday, June 24, 2008
முடிவு தரும் மரணம்
தேடல்கள் இல்லாதிருப்பேன்.
தேவை இன்றி அல்ல...
தேவையே இல்லாமல்...
என்னுடைய வாழ்க்கை
தேவை
தேடல் என
சுவாரஸ்யமாக இருக்கிறது.
தேவையின் அவசரம்
தேடலை முடுக்குகிறது.
கிடைத்ததன் திருப்தி
இன்றுவரை இல்லை...
அடுத்த தேடலை நோக்கியே
அவசர வாழ்க்கை...
ஆசை என்றில்லாமல்
அவசியம் என்றே
தீர்மானிக்கப்படுகின்றன
தேடல்கள் அனைத்தும்.
மனமென்ற குரங்கு
தாவிக்கொண்டே இருக்கிறது
இருப்பினும்
என்றாவது
தேடல்கள் இல்லாதிருப்பேன்.
தேவை இன்றி அல்ல...
தேவையே இல்லாமல்...
Monday, June 23, 2008
செவ்வாயில் பனி படிகத் துகள்
செவ்வாய்க் கிரகத்தின் மேற்பரப்பு குறித்து ஆராய்ந்து தகவல் வெளியிட்டு வருகின்ற நாசா நிறுவனத்தின் ஃபீனிக்ஸ் விண்கலம், அங்கு பனிப் படிகங்கள் இருப்பதை வெளிப்படுத்தியிருக்கிறது என்று தாம் நம்புவதாக அமெரிக்க விஞ்ஞானிகள் கூறுகிறார்கள்.
இந்த வார முற்பகுதியில் செவ்வாயின் துருவப் பகுதியில், தனது இயந்திரக் கரத்தினால், சிறிய அளவிலான அகழ்வு ஒன்றை மேற்கொண்ட ஃபீனிக்ஸ் விண்கலம், அதிலிருந்து பல பிரகாசமான துகள்களை வெளியே எடுத்தது.
அவை உப்பாக இருக்கலாம் என்று முன்னர் நம்பப்பட்டது, ஆனால், வியாழனளவில் அவை மறைந்துவிட்டன.
உப்பு ஆவியாகாது என்றும், தாம் கண்டுபிடித்தது பனிக்கட்டிதான் என்பதற்கு இது ஒரு ஏற்புடைய ஆதாரம் என்றும், இந்த ஃபீனிக்ஸ் விண்கலத் திட்டத்தின் தலைமை விஞ்ஞானியான அரிசோனா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பீட்டர் ஸ்மித் கூறியுள்ளார்.
மாறாத ஒரு புன்னகை
தவிப்போஎவ்வித சோகமோ இல்லாமல்
இனிமையாகவே அமைந்துவிடும்
தொடக்கங்களாக
எதிர்பார்க்கிறேன்
பிரிவிலும் ஒரு புன்னகை...
உறுதியான முடிவுகளும்
பொருளுணர்ந்த பிரிவுகளும்
சூழ்நிலையில்
துயரமாகவே அமைய
கை கோர்த்து நடந்த தருணங்களையும்
பேசிச் சிரித்த பொழுதுகளையும்
நினைத்து சிரிக்க முற்படுகையில்
உனை
பார்வையிலிருந்து
மறைக்கிறது கண்ணீர்...
எல்லாம் மறைத்து
கை கொடுத்து
வழி அனுப்பும் வேளையில்
எதையோ உணர்த்த
கையில் பட்டு தெறிக்கிறது
கண்ணீர்...
நினைப்பது போல்
அமைவதில்லை வாழ்க்கை
கவிதையும் கூட.
காணாமல் போன மொழி
இடைவெளி
அதிகரித்துக் கொண்டேயிருக்கிறது
மௌனத்தை
உடைத்து கொண்டு
வெளிக் கிளம்பிய
வார்த்தைகள் வஞ்சித்து விட்டன
அலுவலகக் கடித மொழி
சூழ்ந்து கொண்டு
என் மொழியை
விரட்டி விட்டது
வார்த்தைகளற்ற வனாந்தரத்தில்
வசித்துக் கொண்டிருக்கிறேன்
உனக்கான
மொழியின்மையோடு
கணக்குப் போட்டு
காய் நகர்த்துகிறாய்
போதும் போதுமென்றாலும்
போதுமே போதுமா
எல்லாவற்றிலிருந்தும்
வெளிவர முடியுமென்றிருந்த
இறுமாப்பு சிதைந்து விட்டது
இருளோடு செய்யும்
யுத்தம் போல் இருக்கிறது
இப்போதென் வாழ்வு
புலம்பல்களாய்ச்
சிறுத்துப் போன
என் மொழியை
மீட்டெடுப்பேன்
Friday, June 20, 2008
நீ வேண்டும்
நகர மறுத்த நாட்களையெல்லாம்மூட்டை கட்டி தூர வீசினேன்
இன்று வந்த நாளை மட்டும்
என்னுள் மறைத்து ஒளித்து வைக்கிறேன்
கூடி கழிந்து நின்ற நாட்கள்
உன் வரவை எனக்கு உறுதி செய்தன
அர்த்தமற்ற உலகம்கூட
உன் வரவால் இன்று அர்த்தமாகுது
மரித்து கிடந்த வாழ்வும் இன்று
உயிர்த்தெழுந்து வாழ சொல்லுதே
துடிக்க மறுத்த இதயம்கூட
இரண்டாய் துடிக்க இன்று கேட்கிறேன்
சீக்கிரம் வா எந்தன் உயிரே
என் பெண்மை உன்னால் முழுமை பெறட்டும்....
நன்றி: புனிதா
Thursday, June 19, 2008
வார்த்தைகள் தளும்பிய நேரம்
வட்டமாய் என்னை சுற்றி
வரையப்பட்ட கோடும் நானும் மட்டும்
வெளியில் செல்லும் ஆசைகள்
பாதிக்கோட்டை அழிக்க ஆரம்பித்தன
என்னை யாரும் காண வந்தால்
கோடு சற்று பெரிதானது
என் உலகம் சொற்களால் ஆனது
வட்டத்துக்குள் அடங்காமல் சொற்கள் அங்கங்கே திமிறும்.. அலையும்
ஆசைகள் அழித்த கோட்டை தாண்டி
சொற்கள் நீராவியாய் மாறி மறைந்து சென்றது
இங்கு நான் புது உலகை காணவா
தொலைந்த சொற்களை தேடவா
அலைந்த சொற்களில் ஒன்றிரண்டு காயம்பட்டு திரும்பின
என்னை சுற்றி புதிய உலகம் வரையப்பட்டது
நான் அவசரமாய் என் வட்டத்தில் சென்று அமர்ந்து கொண்டேன்
புதிதாய் கோட்டையும் அழுத்தமாய் வரையத்தொடங்கினேன்
என்னைத்தாண்டி சென்ற சொற்கள்
அலைகிறது வெளியெங்கும் என்னைத்தேடி.
Wednesday, June 18, 2008
அன்பின் அர்த்தங்கள்
நன்றி: புனிதா
Tuesday, June 17, 2008
எனக்காகவே நான்
தொடும் எல்லைகள்
தாண்டியும்
சில புள்ளிகள்
செல்கின்றன.
சில கோலங்களுக்குள் அடங்கும்
புள்ளிகள் சொல்கின்றன..
நான் ரொம்ப சௌக்கியம்.
நீ?..
புரிதலுக்கான தேடல்களில்தான்
இந்த தேசம்
தொலைந்து போகின்றது.
வரப்போகும் நாட்களுடன்
நான் வாழ
எனக்கான வாழ்க்கை
கிடைப்பதில்லை.
ஆனாலும்,
எனக்கான
என் வாழ்க்கை
இனிமேல்
எந்த தேதியில் வரும்....!
Sunday, June 15, 2008
தனிமை
எதுவும் தனியே
கிடைப்பதில்லை.
உண்மை
ஒரு பொய்யோடும்
மனது
கொஞ்சம் காயங்களோடும்
தனிமை
பல பிரியங்களோடும்......
ஆயினும்,
நான் இன்னும்
தனிமையில் உள்ளேன்!
Friday, June 13, 2008
Wednesday, June 11, 2008
Monday, June 09, 2008
What I observe is not what I see
சாலையில் கண்டெடுக்கப்படும் எந்த ஒரு
கிழிந்த கவிதைக்காகிதமும்
அதன் காகிதத்திற்கப்பாலான ஒரு வடிவத்தில் தான்
மூளையில் பதிகின்றன.
Sunday, June 08, 2008
பேசப்படாதவள்
பூக்கள் இறைந்த கனவின் வழியில்இதழ்பிரியச் சிரித்த முகம்விலக்கி
இருளுள் கரைகிறான் சித்தார்த்தன்
அரசமரத்தடியில் நெடிய இமையிறுக்கி
மறந்துபோகிறான் துணையை
அவன் தேர் நகர்ந்த வீதியும்
நெகிழ்ந்ததோ…! நனைந்ததோ…!
சாளரத்தின் ஊடே அனுப்பிய
யசோதரையின் விழிகள்
திரும்பவேயில்லை
பௌர்ணமி நாளொன்றில்
அவன் புத்தனாயினான்
அவள் பிச்சியாகினாள்
“அன்பே! என்னோடிரு... என்னோடிரு…!”
கண்ணீரில் நெய்த குரலை
அரண்மனைச்சுவர்கள் உறிஞ்ச
வரலாற்றிலிருந்தும் போனாள்
அவளும் போனாள்!!!
சுழலும் ஒளிவட்டங்களின்
பின்னால்தானிருக்கிறது
கவனிக்கப்படாத இருட்டும்.
Friday, June 06, 2008
நீ தீண்டாத என் உயிர்
விவரிப்புகளில் அடங்கிவிடாத வலியோடு அழுத்துகிறது மனதைபுதிதாக வரையப்பட்ட எல்லைக்கோடு
இமைகளை மூட விடாது அச்சமூட்டுகிறது
விலக்கி வைக்கப்பட்டதான மாயபிம்பம்
தடுக்கவியலாது நடந்துவிடுகிறது உயிர்வதை
பெயர் மாற்றி உச்சரித்த கணங்களில்
பாதுகாப்பகவே வைக்கப்பட்டாலும்
அந்நியமாகவே மிதக்கிறது கண்ணாடி கூடுக்குள்
நீ தீண்டாத என் உயிர்
Thursday, June 05, 2008
நிறமற்று
நமக்கிடையே நிரந்திரமாக,
இதுவரை பிரித்திடவில்லை என்பதால்
அதன் மீது ஆர்வமேதும் இல்லை
அதைப்பற்றியும் பேசுவதேயில்லை
முரண்களாகவே இருந்தாலும்
நிறமற்று கரைந்து போகிறோம்
நமக்கான அன்பில்!
Wednesday, June 04, 2008
மெளனமாய்
நேசத்தின் பயணமாக நீள்கிறது
பிரிவின் முற்றுப்புள்ளிகள்!
இடைவெளிகளெங்கும்
அன்பை நிறைத்திட்ட
இதயம் துடிக்கிறது
மெளனமாய்!!
Tuesday, June 03, 2008
Mind
The mind that has perceived the leaf
Before the world
Invented language
In what wavelength or tongue
Would it have mused over it?
It is impossible to know.
In my mind what covers
And shrouds verse
With numerous tongues
Every day,
Will there appear
A way to pluck and bring that
Tongueless leaf
Within the lapse of my time?
Monday, June 02, 2008
Once in a while
I don’t regret
To be of no use
To this world
For a few seconds.
The heart stands in penance
Longing to lie awake
Between life and death
In the light sans history
Discarding for a moment
The life
That jumps on my back
And rides me incessantly.
Sunday, June 01, 2008
மன அடுக்குகள்
உறைந்து போன நிறங்களாய்
என் மனது
சிலபிம்பங்கள்,
சில மயக்கங்கள்,
சில தேடல்கள்,
சில தவிப்புகள்,
சில தெளிவுகள் என
மனதின் அடுக்குகளெங்கும்
திரைகளாய்
வெவ்வேறு முகங்கள்..
யாரும் பார்த்திடா
அடுக்குகளில்
வடிகட்டப்படாது
வலியோடு மிதக்கிறதென்
சுயம்
நிர்வாணத்தை தேடுகிறேன் நானும்
உடைகளிணிந்து...
உறவுகள்
காலையில் மலர்ந்து மாலையில் உதிரும் மலர்களைப் போலத் தான் உறவுகளும்.. நாம் அடுத்த பருவத்தை எட்டும் பொழுது தடுக்க இயலாமல் சில உறவுகள் தானாக உத...
-
எழுதப்படும் எல்லா வார்த்தைகளும் பகிர்ந்து கொள்ளப்படுவதில்லை எல்லோருடனும் சில அனைவருக்காக சில சிலருக்காக பல எனக்காக மிகப்பல உனக்காக...
-
உள்ளத்தின் ஓர் மூலையில் நாளாந்தம் ஏதோ ஓர் தேடல்! கண்ணில் காணும் ஒவ்வொரு மனிதர்களுக்குள்ளும் மனிதத்தைத் தேடும் என் விழிகள். ஒவ்வொரு தேடலுக்கு...
