வாழ்வை இனியதாக்கும் பொருட்டு
கனவுப் பாசறைகளில் உலாவத் தொடங்கி
கனவுகள் சமைப்பது மட்டுமே
வாழ்க்கையாகியிருக்கிறது
எல்லாமே சூன்யமாயிருக்கையில்
எங்கு தொடங்கி எதில் முடிக்க??
இருத்தலும் இல்லாதிருத்தலுக்குமான
அடையாளங்கள் அழிந்தொழிந்தபின்
எதைத் தொடர எதை விட??
சுவாசித்தல் மட்டுமே
உயிரோடிருப்பதைப் பறைசாற்றுகையில்
வாழ்தலுக்கான சாத்தியப்புள்ளிகளை
தேடியலைகிறது மனம்
எக்கணத்திலேனும்
அவை கிடைக்கப்பெறலாமென..
No comments:
Post a Comment