Thursday, October 10, 2013

உறவுகள்

காலையில் மலர்ந்து
மாலையில் உதிரும்
மலர்களைப் போலத் தான் உறவுகளும்..
நாம் அடுத்த பருவத்தை
எட்டும் பொழுது தடுக்க இயலாமல்
சில உறவுகள்
தானாக உதிர்ந்து போகலாம் ....!

Wednesday, October 09, 2013

நாட்கள்

நாட்கள்
ஒரு பயணம் போலவே!!!!!
நிஜங்களும் பொய்களும்
அருகிலேயேப் பயணிக்கும்.
இறுதியில் கிடைப்பதோ
பொய்களின் படிப்பினையும்,
நிஜங்களின் நேசமும்.
இரண்டுமே வேண்டப்படுவது.
"என்ன சொல்லி என்ன
என்ன எழுதி என்ன
நான் சொல்ல வருவதைத் தவிர
எல்லாம் புரிகிறது உனக்கு!"

Thursday, October 03, 2013

என் கனவுகள்
அடங்கிய
சிந்தனை பேழை
இங்கே
நீர்க்குமிழி போல்
சுக்கல்சுக்கலாக
உடைந்த
வருத்தம்……..
விரலாய் விடியல்

Wednesday, October 02, 2013

மனம்

ஒன்றும் பேசாமல் கேட்டுக் கொண்டிருந்தேன்
என் மனம் பேசுவதை! அப்போது...
மேல் சொன்னதை சொன்னது என் மனம்!
இதில் நான் யார், என் மனம் எது?

Sunday, August 02, 2009

நட்பு

எதை எதைப் பற்றியோ
பேசிக் கொண்டோம் நாம்

யார் யாரோ பேசிக்கொண்டார்கள்
நம்மைப் பற்றி

நம் பேச்சில் பெரிதாக
சுவாரசியம் இல்லை
உண்மை இருந்தது

அவர்கள் பேச்சில்
சுவாரசியம் நிறைய இருந்தது
ஆனால்
உண்மை இல்லை

தோழி

முன்னறிவிப்புகள்
எதுவும் இன்றி
ஒரு மழைநாளில்
வாழ்வில் வந்து சேர்ந்தாள்
தோழி என்றொரு
தேவதை !

காத்திருந்தது போல
சிறகுகளை
சிருஸ்டித்து கொண்டு
உடன் பயணமாக
தயாராகி இருந்தது
எனக்கு முன்
என் மனது...!

Tuesday, January 20, 2009

பாட்டியின் கதை

கதைச் சொல்லிக்கொண்டே
வந்த பாட்டி
தூங்கிப்போனாள்


விழித்திருக்கிறது குழந்தை
கதாபாத்திரங்களுடன்.

Friday, January 09, 2009

இன்னும் ஓர் இரவு...!

சலனமற்று துவங்குகிறது மற்றுமொரு காலை...
யாருமற்ற மேசையில் தனியே
உணவருந்த வேண்டும் என்கிற நினைவே....
காலை உணவை மறுக்க செய்கிறது...

நினைவில் வர மறுக்கும் நேற்றைய கனவுகளை
தேடி தேடியே தொலைந்து போகிறது
எனது பகலும் சில நினைவுகளும்...

யாருமற்று கழியும் மாலை பொழுதுகள்...
இரவு நேர மயானமாய்
இரைச்சல் நிறைந்த மனதின்
தனிமையை போக்க முயல்கிறேன்...
சில நேரம் வண்ணங்கள் கொண்டும்..
வண்ணங்கள் வாய்க்காத தருணங்களில் உதிரம் கொண்டும்...

உறங்கி போனதாய் நினைக்கும் வேளையில்...
மூடிய இமைகளின் வழியே வெளியேறும்...
சிறு கண்ணீரும் சில கனவுகளும்...

எஞ்சிய எனது கருப்பு வெள்ளை கனவுகளும்
குருதி பாய்ந்து வண்ணமாகிறது...
திடுக்கிட்டு எழுகையில் கடந்து போகிறது...
உறக்கம் தொலைத்த இன்னும் ஓர் இரவு...

உறவுகள்

காலையில் மலர்ந்து மாலையில் உதிரும் மலர்களைப் போலத் தான் உறவுகளும்.. நாம் அடுத்த பருவத்தை எட்டும் பொழுது தடுக்க இயலாமல் சில உறவுகள் தானாக உத...