Tuesday, November 04, 2008

கண் பேசும் வார்த்தைகள்

காதலும் காற்றைப் போலத்தான்.அது கதவைத் தட்டி அனுமதி கேட்டுவிட்டு உள்ளே வருவதில்லை. சொல்லபோனால் காற்று நுழையாத இடத்தில் கூட காதல் நுழைந்துவிடும். ஒரு வழிப்போக்கன் போல் வரும் காதல் உரிமையாளன் போல் வீட்டுக்குள் தங்கிவிடுகிறது. காலம்காலமாக இந்த மண்ணில் ஜெயித்த காதலைவிட தோல்வியுற்ற காதலும் ஒரு தலைக் காதலுமே காவியமாகி நம் மனதில் இடம் பெற்றிருக்கின்றன.

"இந்த சோகம்கூட சுகமானது.ஏனென்றால் இது நீ தந்தது" என்கிறான் ஒரு உருதுக் கவிஞன்.தண்ணீரை விடவும் இரத்தததை விடவும் அடர்த்தியானது கண்ணீர்த் துளி.இதயத்தின் அறைகளில் இமயத்தின் பாரத்தை எடுத்து வைப்பவை காதல் தோல்விப் பாடல்கள். அப்படி முத்துக்குமார் எழுதிய ஒருப் பாடல்தான் "7ஜி ரெயின்போ காலனி" என்ற படத்தில் வந்த "கண் பேசும் வார்த்தைகள்". இந்தப் பாடலை எப்போது கேட்டாலும் அதன் உள்ளே ஊடாடிக்கொண்டிருக்கும் வலி நம் உயிருக்குள் ஊஞ்சலாடும்.

பல்லவி

கண் பேசும் வார்த்தைகள் புரிவதில்லை
காத்திருந்தால் பெண் கனிவதில்லை
ஒரு முகம் மறைய மறு முகம் தெரிய‌
கண்ணாடி இதயமில்லை‍ கடல்
கை மூடி மறைவதில்லை!!

காற்றில் இலைக‌ள் ப‌ற‌ந்த‌ பிற‌கும்
கிளையில் த‌ழும்புக‌ள் அழிவ‌தில்லை
காயம் நூறு கண்ட பிறகும்
உன்னை உள்மணம் மறப்பதில்லை!
ஒருமுறைதான் பெண் பார்ப்பதினால்
வருகிற வலி அவள் அறிவதில்லை!
கனவினிலும் தினம் நினைவினிலும்
கரைகிற ஆண்மணம் புரிவதில்லை!

சரணம் 1

காட்டிலே காயும் நிலவை
கண்டுகொள்ள யாருமில்லை!
கண்களின் அனுமதி வாங்கி
காதலும் இங்கே வருவதில்லை!

தூரத்தில் தெரியும் வெளிச்சம்
பாதைக்குச் சொந்தமில்லை!
மின்னலின் ஒளியைப் பிடிக்க‌
மின்மினிப் பூச்சிக்கு தெரியவில்லை!

விழி உனக்குச் சொந்தமடி
வேதனைகள் எனக்குச் சொந்தமடி!
அலை க‌ட‌லை க‌ல‌ந்த‌ப் பின்னே
நுரைக‌ள் ம‌ட்டும் க‌ரைக்கே சொந்த‌மடி!

சரணம் 2

உலகத்தில் எத்தனை பெண் உள்ளது
மனம் ஒருத்தியை மட்டும் கொண்டாடுது!
ஒரு முறை வாழ்ந்திட திண்டாடுது
இது உயிர் வரை பாய்ந்து பந்தாடுது!

பனித்துளி வந்து மோதியதால்
இந்த முள்ளும் இங்கே துண்டானது!
பூமியிம் உள்ள பொய்களெல்லாம்
அட புடவை கட்டிப் பெண்ணானது!

புயல் அடித்தால் மலை இருக்கும்
மரங்களும் பூக்களும் மறைந்து விடும்!
சிரிப்பு வரும் அழுகை வரும்
காதலில் இரண்டுமே கலந்து வரும்!

No comments:

உறவுகள்

காலையில் மலர்ந்து மாலையில் உதிரும் மலர்களைப் போலத் தான் உறவுகளும்.. நாம் அடுத்த பருவத்தை எட்டும் பொழுது தடுக்க இயலாமல் சில உறவுகள் தானாக உத...