நேற்று இரவு வழக்கம்போல் மெல்லிய சத்தத்தில் பாடல்கள் ஒலிக்க தூங்கப் போன்னே. வழக்கமாய் கேட்ட பாடல்களே வந்துக் கொண்டிருக்க, திடிரென இது வரை கேட்டிராத பாடல் ஒன்று வந்தது. ஆரம்பமே ஏனோ வெகுவாய் கவர்ந்தது. பாம்பே ஜெயஷ்ரீயின் குரலோ என் நினைக்கத் தோண்றியது.. பாடலிலும் ஹாரீஸின் வாசனை அடித்தாலும் ஒரு சந்தேகம். சுகமா சோகமா எனப் புரியாமால் அந்த இசையில் லயிக்கத் தொடங்கினேன்.
"அனல் மேலே பனித்துளி
அலைபாயும் ஒரு கிளி
மரம் தேடும் மழைத்துளி
இவைதானே இவள் இனி
இமை இரண்டும் தனி தனி
உறக்கங்கள் உறைபனி
எதற்காக தடை இனி....."
கண் மூடி கேட்டேன். யாரோ ஒருவர் இதயத்தை கசக்கி ரத்தத்தை பிழிவது போல் ஒரு வலி. கண்திறந்தேன். மயான அமைதி. ஊர் முழுவதும் கண்ணயர்ந்த நேரம் ,வெகு நாட்களுக்கு பின் கண்கலங்கினேன். இது சோகமா சுகமா புரியவில்லை. எழுதியவர் மீது அளவில்லா கோபம். தாமரையாகத்தான் இருக்க முடியும். ஒரு பெண்ணின் உணர்வை இத்துனை வீரியத்துடன் பதிவு செய்யும் ஆண்கவிஞன் இன்னும் வரவில்லை. இருந்தால் அது முத்துக்குமாராகத்தான் இருக்க முடியும். வலையில் வந்து மேய்ந்தால் தாமரைதான்.. ஆனால் குரல், சுதா ரகுனாதன். எத்துனை முறை ரிப்பீட் செய்தேன் என நினைவில்லை.
"எந்தக் காற்றின் அளாவலில்
மலர் இதழ்கள் திறந்திடுமோ
எந்தத் தேவ வினாடியில்
மன அறைகள் திறந்திடுமோ.. "
சொக்கிப் போனேன். கண்ணுக்கு எட்டிய வரை யாருமில்லா இரவு. தவளைகளும் எனக்காக அமைதி காத்தன. சுவரில் சாய்ந்து நானும் பாடத் தொடங்கினேன். தூரத்தில் நிலா என்னைபோல தனியாக. யாரும் இல்லை என்றாலும் அழகாய் பொழிந்து கொண்டிருந்தது. என்னைப் பார்த்ததும் எனதருகில் வந்து என்னை மடியில் ஏந்திக் கொண்டது. எனக்காக ஒரு கதை சொன்னது. ஆறுதலாய் உணர்ந்தேன். பின் ஏனோ விலகி சென்றது. இத்தனை நாள் இந்த அழகிய இரவையும், நிலாவையும் ரசிக்காமால் வீணடித்ததை நினைத்து நொந்தேன். இவை அழகா, இல்லை இந்தப் பாடல் எல்லாவற்றையும் அழகாக்கியதா? சுதாவின் குரலில் இன்னும் மயங்கியே இருந்தேன். அதிலும் அந்தப் பாடல் முடிவடையும் நேரம் ஒரு ஆண்குரல் அந்த மெட்டை ஹம் செய்யும்.. கேட்டுப் பாருங்கள். ரொம்ப நாளாச்சு.. தாங்க்ஸ் ஹாரீஸ் மற்றும் குழு...
பல்லவி
அனல் மேலே பனித்துளி
அலைபாயும் ஒரு கிளி
மரம் தேடும் மழைத்துளி
இவைதானே இவள் இனி
இமை இரண்டும் தனி தனி
உறக்கங்கள் உறைபனி
எதற்காக தடை இனி....."
சரணம் -1
எந்தக் காற்றின் அளாவலில்
மலர் இதழ்கள் திறந்திடுமோ
எந்தத் தேவ வினாடியில்
மன அறைகள் திறந்திடுமோ..
ஒரு சிறு வலி இருந்ததுவே
இதயத்திலே இதயத்திலே..
உனதிரு விழி தடவியதால்
அழித்துவிட்டேன் மயக்கத்திலே..
உதிரட்டுமே உடலின் திரை
இதுதானே இனி நிலாவின் கறை கறை..
சரணம் -2
சந்தித்தோமே கனாக்களில்
சில முறையா பல முறையா!
அந்தி வானில் உலாவினோம்
அது உனக்கு நினைவில்லையா?
இரு கரைகளை உடைத்திடுவே
பெருகிடுமா கடலலையே
இரு இரு உயிர் தத்தளிக்கயில்
வழி சொல்லுமா கலங்கரையே
உனதலைகள் எனையடிக்க
கரை சேர்வதும் கனாவில் நிகழ்ந்திட..
Subscribe to:
Post Comments (Atom)
உறவுகள்
காலையில் மலர்ந்து மாலையில் உதிரும் மலர்களைப் போலத் தான் உறவுகளும்.. நாம் அடுத்த பருவத்தை எட்டும் பொழுது தடுக்க இயலாமல் சில உறவுகள் தானாக உத...
-
எழுதப்படும் எல்லா வார்த்தைகளும் பகிர்ந்து கொள்ளப்படுவதில்லை எல்லோருடனும் சில அனைவருக்காக சில சிலருக்காக பல எனக்காக மிகப்பல உனக்காக...
-
உள்ளத்தின் ஓர் மூலையில் நாளாந்தம் ஏதோ ஓர் தேடல்! கண்ணில் காணும் ஒவ்வொரு மனிதர்களுக்குள்ளும் மனிதத்தைத் தேடும் என் விழிகள். ஒவ்வொரு தேடலுக்கு...
No comments:
Post a Comment