எனக்கென்று யாருமில்லை
என்னைத்தவிர...
அவ்வப்போது முகம் காட்டிச் செல்லும்
இருள் சூழ்ந்த சில நினைவுகள்.
இருத்தலின் எச்சமாய்
கிறுக்கிச் செல்லும் சில வார்த்தைகள்
என் நாட்குறிப்பின் பக்கங்களை..
நீ வந்து சென்ற நாளொன்றின்
பின்புலப் பொழுதுகளில் தனிமைக்குத்
துணையாய் வீற்றிருக்கும் என் கவிதை.
கலைக்க விரும்பாத தவமாய்
நீண்டு கொண்டே செல்லும்
என் மெளனமும்...
புலன்களுக்கு சிக்காத இறுதிப்புள்ளி நோக்கி.
No comments:
Post a Comment