ஒரே ஒரு வார்த்தைப் பேசி விட
எண்ணி ஒரு மணி நேரம்
எனக்குள்பேசிக் கொண்டிருந்தேன்
நட்பு எனக்குள் மட்டும் தானா
உனக்குள் இல்லையா
நான் ஏன் முதலில் பேச வேண்டுமென்று
பழகிய நாளை
அதில் இளகிய மனதை
நீ நோகடித்தது நினைவில்லையா?
நெஞ்சுக்குள் ஏனோ
திடீரென்று ஒரு புழுக்கம்
ஏனோ மனக் குழப்பம்
நமக்குள் என்ன தான் நிகழ்ந்தது
உனை எனக்குப் புரியலையா?
எனை உனக்குப் புரியலையா?
இருந்தும் ஏன் மௌனம்
சொல்லுக்கு நம் நட்பு பழகலையா
என்னில் முதல் கண்ணீரை
வரவழைத்த நட்பு உனதே!
என்னில் முதல் மௌனத்தை
வரவழைத்த உறவும் உனதே!
உயிர் போகும் நாளிலும்
அழ வைத்த உணர்வு
மனம் விட்டு அகலுமொ
அதுவும் உயிரான நட்பில்
என் அருகில் நீ வந்து
நின்ற நிமிடம்
என் மனக்குழப்பம் தவிர்த்து
பேச வாய் திறந்த வேளை
நீ கண் கலங்கி நின்றாயே!
எனை நட்பில் வென்றாயே!
Subscribe to:
Post Comments (Atom)
உறவுகள்
காலையில் மலர்ந்து மாலையில் உதிரும் மலர்களைப் போலத் தான் உறவுகளும்.. நாம் அடுத்த பருவத்தை எட்டும் பொழுது தடுக்க இயலாமல் சில உறவுகள் தானாக உத...
-
எழுதப்படும் எல்லா வார்த்தைகளும் பகிர்ந்து கொள்ளப்படுவதில்லை எல்லோருடனும் சில அனைவருக்காக சில சிலருக்காக பல எனக்காக மிகப்பல உனக்காக...
-
உள்ளத்தின் ஓர் மூலையில் நாளாந்தம் ஏதோ ஓர் தேடல்! கண்ணில் காணும் ஒவ்வொரு மனிதர்களுக்குள்ளும் மனிதத்தைத் தேடும் என் விழிகள். ஒவ்வொரு தேடலுக்கு...
2 comments:
எல்லா கவிதைக்கும் பின்னூட்டம் போட ஆசைதான் ...ஆனா நேரம்தான் பற்றாக்குறை :)
வாருங்கள் புனிதா. தங்கள் கவிதை சிலவற்றையும் சேர்த்திருக்கிறேன்.
Post a Comment