Wednesday, November 26, 2008

இடைவெளி

மிக அற்புதமான கவிதையாக
இருந்திருக்கலாம்
மனதுக்குள்ளேயே தொலைத்துவிட்டேன்.

பணிக்கும் துன்பத்திற்கும் இடையில்
எப்போதாவது எட்டிப் பார்க்கும் கவிதை

தாளைத் தேடி தடம் பதிக்கும்
வேளை வரும் முன் தொலைந்துவிடுகிறது
அல்லது உருமாறி
ஒவ்வாமையாகி விடுகிறது.

எப்போதோ உடன் படித்த நண்பர்கள்
முகம் நின்று பெயர் மறைந்து போவது போல்
கருத்தில் எழுந்து
இருட்டில் மறைந்திருக்கிறது...
கவிதை!

அது புதிதாக ஒன்றைச் சொல்ல வந்திருக்கலாம்
யாராவது புகழும்படியாக
ஏதாவது கொண்டு வந்திருக்கலாம்
குறைந்தபட்சம்
எனக்கு மட்டும் இன்பத்தைக் கொடுத்திருக்கலாம்
பாவம்

இடைவெளிக் குறைவில்
சிக்கிச் சாவது கவிதையும்தான்!

No comments:

உறவுகள்

காலையில் மலர்ந்து மாலையில் உதிரும் மலர்களைப் போலத் தான் உறவுகளும்.. நாம் அடுத்த பருவத்தை எட்டும் பொழுது தடுக்க இயலாமல் சில உறவுகள் தானாக உத...