வட்டத்துக்குள் இருக்கப்பழகிக் கொள்ளவில்லை
இடைஞ்சலாயிருக்கிறது
இச்சிறிய வட்டம்
மூச்சு விட இயலவில்லை
வெட்டவெளியெனினும்
துரத்தி விளையாட முடியவில்லை
செளகரியத்திற்காகவோ
எல்லை தாண்டவில்லையென்ற
மறைமுக உணர்த்தலுக்காகவோ
வரைந்து கொள்ளலாம் இவ்வட்டத்தை
பெரிதாய்..
சற்றே பெரிதாய்..
இன்னும் பெரியதாய்..
No comments:
Post a Comment