என்றாவது
தேடல்கள் இல்லாதிருப்பேன்.
தேவை இன்றி அல்ல...
தேவையே இல்லாமல்...
என்னுடைய வாழ்க்கை
தேவை
தேடல் என
சுவாரஸ்யமாக இருக்கிறது.
தேவையின் அவசரம்
தேடலை முடுக்குகிறது.
கிடைத்ததன் திருப்தி
இன்றுவரை இல்லை...
அடுத்த தேடலை நோக்கியே
அவசர வாழ்க்கை...
ஆசை என்றில்லாமல்
அவசியம் என்றே
தீர்மானிக்கப்படுகின்றன
தேடல்கள் அனைத்தும்.
மனமென்ற குரங்கு
தாவிக்கொண்டே இருக்கிறது
இருப்பினும்
என்றாவது
தேடல்கள் இல்லாதிருப்பேன்.
தேவை இன்றி அல்ல...
தேவையே இல்லாமல்...
Subscribe to:
Post Comments (Atom)
உறவுகள்
காலையில் மலர்ந்து மாலையில் உதிரும் மலர்களைப் போலத் தான் உறவுகளும்.. நாம் அடுத்த பருவத்தை எட்டும் பொழுது தடுக்க இயலாமல் சில உறவுகள் தானாக உத...
-
போரிஸ் கிப்ரியானோவிச் – இந்த சிறுவன் ரஷ்யாவில் மிகப் பிரபலம். செவ்வாயில் ஒருகாலத்தில் வசித்ததாகச் சொல்லும் இச் சிறுவன் சொல்லும் கதைகள் வியப்...
-
உன் மனதிலும் என் மனதிலும் அன்பின் நிழல்கள் காவி... எளிமையும் பரிசுத்தமும் நிரம்பியதாய் விழும்வார்த்தைகளின் ஒத்தடங்கள்... சின்னச் சின்னச் சண்...
-
எதை எதைப் பற்றியோ பேசிக் கொண்டோம் நாம் யார் யாரோ பேசிக்கொண்டார்கள் நம்மைப் பற்றி நம் பேச்சில் பெரிதாக சுவாரசியம் இல்லை உண்மை இருந்தது அவர்கள...
No comments:
Post a Comment