Monday, June 30, 2008

பயணம்

என்ன காரணம்
என்று சரியாகத் தெரியவில்லை
எப்போதும் சண்டைபோடுவது
ஜன்னலோர இருக்கைக்காக மட்டுமே…
பேருந்திலும்
இரயில் பயணத்திலும்.
எப்போதும் தேவைப்படுகிறது
ஜன்னலோர இருக்கை…

பயணத்தின் வேகத்தை
உணர்த்துவதாலோ,
அல்லது
கண்களை கலங்க வைக்கும்
காற்றின் வாசனையை
முகர்வதாலோ,
அல்லது
ஓயாது ஓடிக்கொண்டிருக்கும்
சிந்தனைத் தேரின்
ஓட்டத்தை அதிகரிப்பதாலோ,
தெரியவில்லை….
ஜன்னலோர இருக்கையே
பிடித்தலாக இருக்கிறது….
பயணங்கள் என்றுமே
சலிப்பதில்லை…
ஜன்னல் இருக்கும்வரையாவது….

3 comments:

g said...

உங்களை மாதிரியே எல்லாரும் ஜன்னல் ஓர இருக்கையா எதிர்பார்த்தா எப்படி? நல்லவேளை டிரைவருடைய இருக்கையை கேட்கவில்லை!

Anonymous said...

//ஜன்னலோர இருக்கையே
பிடித்தலாக இருக்கிறது….
பயணங்கள் என்றுமே
சலிப்பதில்லை…
ஜன்னல் இருக்கும்வரையாவது…//

எனக்கும் அப்படிதான் :) அதனாலேயே குறிப்பிட்ட நேரத்திற்கு முன்பாகவே சென்று விடுவதும். அதிலும் தொலை தூர பயணங்களில் இந்த ஜன்னல் இருக்கைத்தான் அலாதி இன்பம். ஆனால் நாமே காரோட்டும் போது இந்த இன்பம் அதிகம் கிடைப்பதில்லை...

Anonymous said...

ஜிம்ஷா, புனிதா என் வலைதளத்தை பார்வையிட்டு பின்னூட்டமிட்டதற்கு நன்றி.

ஏன் ஜிம்ஷா உங்களுக்கு ஜன்னலோர இருக்கை பிடிக்காதா என்ன?

உறவுகள்

காலையில் மலர்ந்து மாலையில் உதிரும் மலர்களைப் போலத் தான் உறவுகளும்.. நாம் அடுத்த பருவத்தை எட்டும் பொழுது தடுக்க இயலாமல் சில உறவுகள் தானாக உத...