
இருவருக்கும் இடையில்
கூப்பிடு தூரந்தான் இடைவெளி- இருந்தும்
எதுவுமே பேசவில்லை
இதுவரையில் நாம்
குரல்நாண்களின்
வேலை நிறுத்தத்தால்
வெப்பக்காற்று மட்டும்
வெளியேறிக் கொண்டிக்கிறது
பெருமூச்சாகசுற்றி நின்றவர் பேசினர்
தூரத்தில் குயில் கூவியது
வாகனங்கள் இரைந்தன
வாலாட்டியபடி வந்த நாய்
சும்மா குரைத்துப்போனது
இன்னும் எத்தனையோ
இரைச்சல்களுக்கு மத்தியில்
எந்தவித ஒலியும்
எழுப்பத் திரணியற்றவர்களாய்
உறைந்திருக்கிறோம் நாம்
நினைத்துப் பார்க்கிறேன்
நிறையவே நாம் பேசியிருக்கிறோம்
வருந்தியதும் உண்டு
சொல்லிய சில வார்த்தைகளுக்கும்
சொல்லாமல் விட்ட வார்த்தைகளுக்கும்.....!
No comments:
Post a Comment