
மௌனம்
வார்த்தைகளற்றது
தூரத்து தேசங்களையும் கடக்கிறது
தன்னிலை மாறாமலேயே.
நெருக்கத்திலும்
நேசத்திலும் நெருக்கமாகி
புரிதலின் ஆழத்திற்கு
அழைத்து செல்கிறது.
மௌனத்தைவிட
தனிமை அழகென்றாலும்
தனிமைக்கு துணைசேர்ப்பது
மௌனம்.
வீட்டுமாடி நிலா வெளிச்சத்திலும்
வானம் பார்த்து ப்ரியநேசத்தை
அசைபோடுவதிலும்
மணம் நிறைக்கின்றன
மௌன மல்லிகைகள்.
No comments:
Post a Comment