Monday, March 24, 2008

நிசப்தம்


நிலையான ஒலியின் சங்கமம் - இது
எத்தனை சலனங்கள் கலந்தாலும் - என்றும்
கனவாகிக் கலையாத உலகம்.

கவியென்னும் கலையாத மொழியூடே - கலந்திடும்
மகிழ்வான மனதொன்றின் சிறிய சப்தம்.
வைகறையின் நிசப்தம் விடியலின் தேடல்
இரவின் நிசப்தம் ஒளியின் தேடல்

ஒளியின் நிசப்தம் இரவின் தேடல்
மழையின் நிசப்தம் வெயிலின் தேடல்

வெயிலின் நிசப்தம் மழையின் தேடல்
அலையின் நிசப்தம் கரையின் தேடல்
கவிஞனின் நிசப்தம் உயிரான கவியொன்றின் தேடல்
குரலின் நிசப்தம் கானத்தின் தேடல்
அழுகையின் நிசப்தம் ஆறுதலின் தேடல்

இம் மனதின் தேடல்
இங்கு நிசப்தமாய்..
நினைவுகளின் தேடலாய்...
உணர்வுகளின் தேடலாய்...

1 comment:

சத்தியா said...

கவிதைகளை சொந்தமாக எழுத முயற்சி செய்யுங்கள். எனது கவிதைகளை உங்கள் கவிதையாக போடாதீர்கள்

உறவுகள்

காலையில் மலர்ந்து மாலையில் உதிரும் மலர்களைப் போலத் தான் உறவுகளும்.. நாம் அடுத்த பருவத்தை எட்டும் பொழுது தடுக்க இயலாமல் சில உறவுகள் தானாக உத...