Sunday, March 02, 2008

இருத்தல்


இருந்தால்.......

மென் ரோஜா மொட்டொன்றில்
பூவாய் அமர்ந்துக்
கதிரவனைத் தன்னுள் பூட்டியிருக்கும்
ஒரு பனித்துளியாய்......
கோடைக்காலத் தாகத்தில்
உதட்டின் மேல்
லேசாய் வந்துவிழும்
ஒரு மழைத்துளியாய்.....
.............................................இருத்தல் வேண்டும்.
எண்ணங்கள் தேக்கி
எட்டி நடக்கையில்
தன் இருத்தலைத் தெரிவிக்கத்
தொலைவிருந்த நீர்வீழ்ச்சி
மயிலிறகாய் முகத்தில் தெறித்துது
ஒரு துளி நர்......

சிறகடிக்கும் கண் மூடித்
துடிக்கும் இதயம் அடக்கி
இத்துளியை ஸ்பரிசித்த ஒரு நொடியில்
அனைத்தும் அடைந்துவிட்ட
ஒரு பரிபூரணம்

இனி இருத்தலில்
தான் என்ன அவசியம் ?

ததும்பி வந்து
இமை உறுத்திப் பிரித்துத்
தன் இருப்பை உணர்த்தி
என் இருத்தலின் அவசியத்தை
உறுதிப்படுத்தியது
ஒரு துளிக் கண்ணீர்.......

No comments:

உறவுகள்

காலையில் மலர்ந்து மாலையில் உதிரும் மலர்களைப் போலத் தான் உறவுகளும்.. நாம் அடுத்த பருவத்தை எட்டும் பொழுது தடுக்க இயலாமல் சில உறவுகள் தானாக உத...