திறந்த புத்தகமாகவே அவள்
யாராலும் திருப்பிப் பார்க்க முடியாத
பக்கங்களுடன்
தாய்க்கு ஒரு பக்கம்
தந்தைக்கு ஒரு பக்கம்
தோழனுக்கொரு பக்கம்
தோழிக்கொரு பக்கம்
கணவருக்கொருபக்கம்
உறவுக்கொருபக்கம்
ஊருக்கொருபக்கம்
ஒருவர் பக்கம்
அடுத்தவர் காண முடியா
ரகசிய தன் முதுகாய்
எப்பொழுதும் அவள்
திறந்த புத்தகமாகவே யாராலும்
திருப்பிப்பார்க்க முடியாத பக்கங்களுடன்
வாசிக்க முடியாத கிறுக்கல்களுடன்
காக்கைக் கூடென
கருவேலமுட்களும்
குச்சிகளும் நாரும் நிறைந்த
சிடுக்குகளுடன்
குத்தும் முட்களிருப்பினும்
குஞ்சுகள் தாங்கும்
நெஞ்சமுடன் அவள் மனமும்
No comments:
Post a Comment