மாறி வரும்
நகரத்து வயல் வெளியில்
மரங்களெல்லாம்
களைகளாய்,
வீடு கட்டி வாழ்வை
விாித்து கொள்ள எண்ணி
கூடுகட்டி குடும்பம் நடத்தும்
கூட்டுப் பறவைகளை மறந்தபடி
வெட்டிய மரத்துண்டுகளில்
காலை நேரக்கணங்களிலிவை
கூட்டிய காணங்களும்
துண்டாடப்பட்டபடி
கானக் குயில்களின் இசையில்
கண்விழித்ததை விட்டு
கனரக வாகனங்களின் இரைச்சலில்
கனவு தொலைந்தபடி
அழைப்பு மணியோசையிலும்
அதிகாலை எழுப்பும் மணியோசையிலும்
குயிலின் கீதத்தை
கானப்பறவைகளின் இன்னிசையை
உயிரற்ற 'செல் 'களினால்
உயிர்ப்பித்தபடி
நிஜங்களைத் தொலத்து விட்டு
நிழல்களில் வாழ்ந்தபடி ? ?
No comments:
Post a Comment