Monday, March 24, 2008

சத்தமின்றி ஒரு யுத்தம் !

உன் மனதிலும்
என் மனதிலும்
அன்பின் நிழல்கள் காவி...

எளிமையும் பரிசுத்தமும்
நிரம்பியதாய்
விழும்வார்த்தைகளின்
ஒத்தடங்கள்...

சின்னச் சின்னச் சண்டைகள்
சிந்தி விழும் மன்னிப்புக்கள்...

இவையெல்லாம்
காலப் பெருஞ் சுழியில்
காணாமல் போனதேனோ?

இப்போதெல்லாம்
உன்னைக் காணும்போது...

வெறுமையாய் ஓர் புன்னகை...
சின்னதாய் ஓர் நலம் விசாரிப்பு...

இவற்றோடு மட்டும்
விலகிக் கொண்டாலும்
உள்ளிருக்கும் இதயம்
மெளனமாய் யுத்தம் செய்து
இரத்தம் சிந்துகிறது.

துயரோடு பிறக்கும்
கவிதைவழி முழுதும்
என்னோடு துணைக்கு வர

கிழிக்கப் படாத
நாட் காட்டியின்
துயரம் போல்

மனதுக்குள்
சத்தமின்றி ஓர் யுத்தம் செய்ய
சொல்லிக் கொடுத்திருக்கிறது காலம்!

3 comments:

சத்தியா said...

இது என் கவிதை அல்லவா?

சத்தியா said...

இது என் கவிதை அல்லவா?

சத்தியா said...

இது என் கவிதை அல்லவா?

உறவுகள்

காலையில் மலர்ந்து மாலையில் உதிரும் மலர்களைப் போலத் தான் உறவுகளும்.. நாம் அடுத்த பருவத்தை எட்டும் பொழுது தடுக்க இயலாமல் சில உறவுகள் தானாக உத...