Wednesday, March 26, 2008
சும்மா
செல்லுல balance இல்லனா கால் பண்ண முடியாது, ஆனா… மனுஷனுக்கு கால் இல்லன்னா balance பண்ண முடியாது.
பஸ் போய்ட்டா பஸ் stand அங்கயே தான் இருக்கும் , ஆனா சைக்கிள் போய்ட்டா சைக்கிள் stand கூடவே வரும்.
Filesன்னா ஒக்காந்து பாக்கணும் ,ஆனா Pilesன்னா பாத்து ஒக்காரணும்.
கட்டில் ஒடஞ்சா படுக்க முடியாது, கண்ணாடி ஒடஞ்சா பாக்க முடியாது, ஆனா முட்டை ஒடஞ்சா தான் ஆம்லெட் போட முடியும்.
வாயால நாய்ன்னு சொல்ல முடியும் ,ஆனா நாயால வாய்ன்னு சொல்ல முடியுமா?
பானை காலியா இருந்தாலும் ஓட்ட இல்லாம இருந்தாதான் மதிப்பு.
ஒரு கடலே இருந்தாலும் கையில டம்ளர் இருந்தா ஒரு டம்ளர் தான் புடிக்க முடியும்.
நேரம் சரியில்லன்னா ஒட்டகத்து மேல ஒக்காந்தாலும் நாய் கடிச்சு வைக்குமாம்.
Tuesday, March 25, 2008
என்று தொலைந்தோம்..???

பாரபட்சமின்றி பண்போடு
புன்னகை சிந்தும் உதடுகள்....
கண்ணில் காணும் காட்சிகள்
யாவும் ரசித்த மனம்...
அறிந்தவர் எல்லாம் அன்பான
நண்பராய் ஏற்ற மனம்....
நிலா முதல் காக்கை வரை
நெஞ்சில் நிறைத்த மனம்....
மலர்,மரம்,ஆகாயம் எனப் பரந்த
பார்வை கொண்ட மனம்...
நாளை பற்றிய பயமும்
நேற்றைய கவலையும்
மறந்த மனம்...
இன்றைய இன்பத்தை
முழுதும் உள்வாங்கி
அனுபவிக்கும் மனம்...
என்று தொலைத்தோம் இவைகளை ..???
குழந்தையும் தெய்வமும் ஒன்றாம்..!!!!!!!!!
என்று தொலைத்தோம் நாம்
தெய்வத் தன்மையை......????
கூட்டிக் கழிக்கும் குணம்
கொத்திச் சென்றதோ???
ஆன்மாவையே மறைத்த மதியீனங்கள்
அழித்து விட்டனவோ???
காண்பதில் எல்லாம் பணப்பார்வை படிய
பரந்த பார்வை மங்கிப் போயிற்றோ???
மனம் சுருங்கி அங்கே
வறுமை குடிகொண்டதால்
தெய்வம் வெளியேறியதோ???
என்று தொலைத்தோம்
தெய்வத் தன்மையை......????
என்று தொலைந்தோம் நாம்???
அன்புத் தோழி...
சிரித்தால் சிரிப்பதற்குபலர் உண்டு ..
பொழுது போக்கவே
கூடி சிரிக்கவும்
பலர் உண்டு..
இன்பத்தை மட்டுமே
பகிர முடிந்தது அங்கு !!
இதயத்தை பகிர்ந்துகொள்ள
நீ மட்டும் தான்
என் அன்புத் தோழி !
சுயம் மறந்து
நேசிப்பவர் நலம் நாடிய
பல தருணங்களில்
ஆழமான நட்பு நம்முள் அரங்கேறியது !!!
எதையும் இழக்கச் சம்மதிக்கும்
ஆழமான அன்பினால்
வேறூன்றியது அது !!!
எத்தனை எத்தனை உறவுகள் வந்தாலும்
உள்ளம் திறந்து உண்மை வடித்து
உணர்வுகள் கொட்டி தோள் சாய்ந்திட
உனையே நாடும் என் மனம் !!!!!
வருடங்கள் பல கடந்து
சந்திக்கும் போதும்
சிறுதயக்கமும் இன்றி
உள்ளன்போடு உறவாடும்
அன்யோன்யம்
உன்னிடம் மட்டுமே !
சுகத்தைப் பகிர மறந்தாலும்
சோகத்தைப் பங்குபோடத் துடிக்கும்
என் உயிர்த் தோழி !
நெஞ்சில் நன்றி சுரக்க
கண்ணில் நீர் வடிய
கை கூப்புகிறேன் மனதில்...
உன் நட்பும்
உன் நட்பின் பாதிப்பும்
வாழ்நாள் முழுதும்
என்னோடு நடை போடும் !!!
எதிர் கொள் !

உயிர் துறக்க ஒரு
சில நிமிடங்கள் போதும்..
உயிர் கொடுக்க ஒவ்வொரு
அன்னையும் மறுபிறவி எடுப்பதை
எண்ணிப் பார் !
நீ வெறுமையைக் கொண்டாடுகிறாய்...
வாழ்வை மரணத்தின் கையில் கொடுக்கிறாய்...
நம்பிக்கை எனும் சிறகை உணர் !
கண்ணீர்த் துளிகளை
வார்த்தைகளாக்கி வாதாடு !
துணி்ந்தால் கடல்நம்
காலைத் தொட்டுக் கும்பிடும் !
பயந்தால்
பனித்துளி கூட
மூழ்கடித்து விடும் !
எதிர்கொள் !!!
மரணத்தின் முன் உன்
இறுதி நேர துணிவை
வாழ்வின் மீது திருப்பு !
வாழ்க்கை நாட்கணக்கல்ல..
செயல் கணக்கு...
நல்லதும் கெட்டதும்
உலகத்தில் இல்லை
உள்ளத்தில் தான் !!!
இதயத்துள் நீ !
நீ என் இதயத்தில்
வார்த்தை
முட்களை விதைக்கிறாய் !
வருத்தமாக இருக்கிறது..!
எனக்கு வலிப்பதால் அல்ல!
நீ
முதன்முதலில்
உன் பாதம் பதித்து வரும்போது..
உனக்கு வலிக்குமே என்று ...!
கண்ணீர் துளிகளோடு

வேர் விட்டு விழுது பரப்பி
விருட்சமாய் மனதினிலே
வெறுமைகள் வாட்ட...
வானத்தை நானும்
அண்ணாந்து பார்க்கின்றேன்
அங்கே
மின்னிடும் நட்சத்திரங்கள் எல்லாம்
என்னைப் பார்த்து
மௌனமாய்
கண் சிமிட்டி மறைகின்றன.
விழி மூடித் தூங்குகிறோம்
விடியல் கூட
எமக்கு நிரந்தரமா...?
கதறும் மனதிலிருந்து
சிதறிடும் சில துளியாய்
விரக்தி ஒன்று
விசும்பலாய் விழுகிறது.
கல்லான மனதில்தான்
கருணையும் இல்லை
கண்கள் இரண்டிருந்தும்
காட்சியுமா தெரியவில்லை...?
ஓ...!
உயிரான ஓவியம் ஒன்று
உருக்குலைந்து போனது ஏன்...?
உள்ளே அழும் மனது
உயிர் வலிக்கக் கேட்கிறது.
அல்லும் பகலும்
ஆலம் விழுதாய்
அடி மனதில்
அசையாமல் வளர்த்த
அந்த ஆழமான நம்பிக்கை
இன்று அடியோடு சாய...
இமயத்தின் உச்சியாய்
இதயத்தில் வளர்த்த
நம்பிக்கைச் சின்னமொன்று
சிதைந்து சின்னாபின்னமாக...
அசையாமல் இன்றுவரை
அணையாத தீபமொன்று
ஆடும் காற்றோடு
அணைந்தே போக...
மனதுக்கு
மௌனப் பூட்டுப் போட்டபடி...
காலம் எனக்கு
கற்றுத் தந்த பாடமாய்...
கண்ணோரம் துளிர்க்கும்
கண்ணீர்த் துளிகளோடு...
நானும்
கையசைத்து விடைபெறுகிறேன்.
வேதனை சுமக்கும் இரவுகள் !
கடைசியாகச் சொல்லிச் செல் !

இல்லையே!
நீயாகத் தானே வந்தாய்.
வந்தாய்
அன்பாய் கதைத்தாய்...
பாசமாய் பழகினாய்...
நட்பாய்
நாள் தோறும் நாவினிக்கப் பேசினாய்...
அன்புக்கு
ஆயிரம் அர்த்தங்கள் சொன்னாய்...
பாசத்துக்கு
பல்லாயிரம் கதைகள் சொன்னாய்...
உறவுக்கு
ஓராயிரம் உதாரணங்கள் சொன்னாய்...
தனிமையின் சோகம்
தலை சாய்த்துக் கொண்டேன்.
காதோரம் ஒலித்த
கனிவான வார்த்தைகள் எல்லாம்
இன்னும் என் மனதில்
அடி மனதை நிறைத்து
ஞாபகத் தூறலாய்...
ஓ.....!
இறுதியில் நீயும் கூட
சராசரி மனிதனைப் போலவே
சத்தங்கள் எதுவுமின்றி
சாதாரணமாய் மறைந்து விட்டாய்.
பாசத்துக்கு ஏங்கிய மனசு
பாதி உயிர் போவதாய்
பாரம் சுமந்து தவிக்கிறது.
வலிகளை என்னால்
வார்த்தைகளால்
வடிக்க முடியவில்லை.
ம்.....
பட்டாம் பூச்சியாய்
தொடுவானம் தொடுவதற்காய்
விரித்த சிறகுகளை எல்லாம்
திரும்ப இழுத்து
கூட்டுக்குள் அடைத்து
தாழ் போட்டுக் கொள்கின்றேன்.
ஆனாலும்...
இறுதியாக
உன்னிடம் ஒரே ஒரு வேண்டுகோள்...
நேசத்தின் முகத்தில்
நிறமாற்றம் வந்தது ஏன்?
விடை தெரியாமல்
மூச்சுத் திணறுகின்றேன்...
தொடர்ந்தும்
நிசப்த அலைவரிசைகளில்
மௌனங்களால் மட்டும்
எனக்கு
தீர்ப்புச் சொல்லிச் செல்லாதே
தாங்காது என் இதயம்.
ம்....
மறைக்காமல்
காரணத்தை மட்டும்
கடைசியாகச் சொல்லிச் செல்.
Monday, March 24, 2008
என் நெஞ்சோடு கலந்திடு...
ஒரு யுகசோகத்தின் கண்ணீர்
உனக்குள்ளே ஆர்ப்பரிக்கிறது.
உன் மனதில்
அடிக்கடி புகுந்து
ஆழமாய் வாட்ட
உனக்கு அப்படி என்ன
சோகத்தின் கீறல்கள்?
ஊமையின் கனவுகளாய்
உன் சோகங்களையும்
பூட்டி வைத்துத் துவளாதே!
முத்து முத்தாய்
விழும் துளிகளை
நீயும் ஏன் சேமிக்கத் துடிக்கிறாய்?
அந்தச் சூரியன்
மாலையில் அஸ்தமிப்பதாய்
உன் உள்ளத்தில் உதித்த
அந்த சோகங்கள் கூட
இன்றே அஸ்தமித்துப் போகட்டும்.
வடியாத வெள்ளம் இல்லை
நாளைய பொழுதும்
புதிதாய் மலரட்டும்.
தனிமையாய், வெறுமையாய்
இருண்ட அறையினில்
நீயும் மௌனமாய்க் கரைகின்றாய்.
உனக்காய் யாருமில்லை என்று
இல்லாத ஓர் வேலியை
உன்னைச் சுற்றிப் போடுகிறாய்.
நீ போட்ட வேலியை
தகர்த்து எறிந்து விடு.
சிறு ஆலம் விதை கூட
முழைத்து
பாறையை பிளப்பதை
நீ பார்க்கவில்லையா?
வசந்தமாய் வாழ்ந்திடலாம்.
வா இப்போதே
உன்னோடு நானும்
உறுதியான நட்புடன்.
வலி சுமக்கும்
சோகத்தின் சுமைகளை....
கண்ணீர் ஊறிய
உன் கடந்த காலத் தடயங்களை
புதிய இலட்சியங்களின் புழுதியினால்
தூர்த்து விடச் செய்கின்றேன்.
உன் சோகம் பகிர்ந்து
உன் விழி துடைப்பதற்கு
உண்மையான நட்புடன் நான்.
நீ சிந்தும் சந்தோசக் கண்ணீரில்
உன்னுடன் சேர்ந்து
நானும் நனைவதற்கு
உறுதியான நட்புடன் நான்.
என் நெஞ்சோடு கலந்திடு
இனிய உறவாக.
நிசப்தம்

எத்தனை சலனங்கள் கலந்தாலும் - என்றும்
கனவாகிக் கலையாத உலகம்.
மகிழ்வான மனதொன்றின் சிறிய சப்தம்.
மழையின் நிசப்தம் வெயிலின் தேடல்
அலையின் நிசப்தம் கரையின் தேடல்
குரலின் நிசப்தம் கானத்தின் தேடல்
அழுகையின் நிசப்தம் ஆறுதலின் தேடல்
இங்கு நிசப்தமாய்..
நினைவுகளின் தேடலாய்...
உணர்வுகளின் தேடலாய்...
எழுது ! ..... எழுது !
எழுது! ..... எழுது!ஓர் கவிதை எழுது
எனக்காக - நீ
ஓர் கவிதை எழுது.....
என்னை மட்டும் நேசிப்பதாய்
எழுதாவிடிலும் பறவாயில்லை என்னையும் நேசிப்பதாய்
ஓர் கவிதை எழுது.....
தூர்ந்த என் விழிகளுக்கு - ஓர்
ஆறுதலாய் நாலு வார்த்தை...
சோர்ந்த என் இதயத்துக்கு
இதமாக இரண்டு வார்த்தை...
ஓர் கவிதை எழுது
எனக்காக - நீ
ஓர் கவிதை எழுது!
புதிய உலகம்

என்றும்
பசுமையாய் வளர்கிறது
புதிதான மனங்களின் மலர்சியால்.......
நான்
என்றோ தேடிய
முடியாத இன்பம் - இன்று
இங்கே கிடைத்தது
இனிய வரமாக.
தவித்த உள்ளத்தின்
தீராத தவிப்புக்கள் உடைந்தன
அன்பென்ற அழகிய கற்களால்.
பாவிகள் புடைசூளும்
பாழடைந்த மாளிகையில்- இனி
காவிகள் மட்டுமே
என் சொந்தமென்ற
அழியா வடுக்களை
அடியோடு அழிந்தது- இந்த
புதிய உலகம்.
புரியவில்லை ஏனென்று
புதுமைகள் பல என் நெஞ்சில்
தெரியவில்லை யாரிங்கு
பூ வீசிச் சிரிப்பதென்று.
புதுமையாய்ப் பார்க்கின்றேன்
நான் வாழ்ந்த உலகத்தை
பூரித்துப் போகிறேன்
புதினமாய், புனிதமாய்.
மாயமாய், மந்திரமாய்,
விந்தையாய்,தெரியவில்லை
இது எனக்கு.
என் மனம் அறிந்த
மனமென்றின்
மகிழ்வான வரவு.
கலைந்த கனவுகளும்
கடந்த முட்பாதைகளும்
கனமான கவிகளாய் மாறியது.
இன்று
கிடைத்த சுகங்களும்
கிளர்ந்த நினைவுகளும்- என்றோ
ஆகிவிடும் காவியமாய்....
இவ்வுலகின் ஓவியமாய்.
கவியினைக் காதலித்து
கவலைகள் களைந்திட்ட
கன்னியின் காலைகள்
புலரட்டும் என்றென்றும்.
இளமையாய்.......
இனிமையாய்.......
இதமாக.....
இதமான இசையாக......
தனிமையிலே சில நிமிடம் !
போட்டியும் இல்லைபொறாமையும் இல்லை
இனிமேல்
சாதிக்க வேண்டுமென்று
மனதில்
சத்தியமாய் எதுவுமில்லை.
சின்னச் சின்ன
ஆசையெல்லாம்
நெஞ்சுக்குள்ளே கருக்கட்டி
சிறகடிக்க முடியாமல்
சிதைந்து போனதுண்டு.
தனிமையையும்
வெறுமையையும்
சற்றே தணித்து
இளைப்பாற மட்டுமே
இங்கே என் கால் தடங்கள்.
இத்தனை வலிகள்...?
அழுது கொண்டு பிறந்தேனா...?
அழுகையிலேயே
அடிக்கடி நனைகின்றேனா...?
ஓயாது துரத்தி
தொலைக்க நினைப்பவை எல்லாம்
தொடர்ந்து வருவதும் ஏன்...?
அழுது அழுது தோற்ற விழிகள்....
சோர்ந்து போன விரல்கள்...
நடை தளர்ந்த கால்கள்...
சொல்ல நினைக்கின்றேன்
சொல்ல நினைத்தாலும்
கேட்பதற்கு யாருமில்லாமல்
என்னோடு புதைந்து கொள்ளும்
என் சோக முகவரிகள்...
இருட்டோடு சில நிமிடம்
தனிமையிலே சில நிமிடம்
என்னையே நானும்
எரித்துக் கொள்கின்றேன்.
சத்தமின்றி ஒரு யுத்தம் !
என் மனதிலும்
அன்பின் நிழல்கள் காவி...
எளிமையும் பரிசுத்தமும்
நிரம்பியதாய்
விழும்வார்த்தைகளின்
ஒத்தடங்கள்...
சின்னச் சின்னச் சண்டைகள்
சிந்தி விழும் மன்னிப்புக்கள்...
இவையெல்லாம்
காலப் பெருஞ் சுழியில்
காணாமல் போனதேனோ?
இப்போதெல்லாம்
உன்னைக் காணும்போது...
வெறுமையாய் ஓர் புன்னகை...
சின்னதாய் ஓர் நலம் விசாரிப்பு...
இவற்றோடு மட்டும்
விலகிக் கொண்டாலும்
உள்ளிருக்கும் இதயம்
மெளனமாய் யுத்தம் செய்து
இரத்தம் சிந்துகிறது.
துயரோடு பிறக்கும்
கவிதைவழி முழுதும்
என்னோடு துணைக்கு வர
கிழிக்கப் படாத
நாட் காட்டியின்
துயரம் போல்
மனதுக்குள்
சத்தமின்றி ஓர் யுத்தம் செய்ய
சொல்லிக் கொடுத்திருக்கிறது காலம்!
Thursday, March 13, 2008
புத்தர் சிரித்தார்
அன்பு குறைந்துபோய்
இப்போதெல்லாம்
ஹைட்ரஜனோடு
ஐக்கியமாகி விட்டோம்
புத்தர் சிரித்தார் என்று
நாமும் சிரித்து வைத்தோம்
அணுக்குண்டுகளைக்
கக்கத்தில் இடுக்கிக் கொண்டு
மனித நேயத்தை
ஏவு கணையில்
ஏற்றி அனுப்பி விட்டார்களே
என்ற உதைப்பின் ஊடாக..
Wednesday, March 12, 2008
வாழ்க்கை
சிற்பங்களைப் பரிசளிக்கலாம்,
ஆனால்
தோல்விகள் மட்டுமே உனக்கு
உளிகள் வழங்கும்
என்பதை உணர்ந்துகொள்...
மழை, நதி, விதை
விழுவதால் எழுபவை இவை..
நீ மட்டுமேன்
விழுந்த இடத்திலேயே
உனக்கு கல்லறை கட்டுகிறாய்....
உன் சுவடுகள்
சிறைப்பிடிக்கப்படலாம்,
உன் பாதைகள்
திருடப்படலாம்,
பாதுகாத்துக்கொள்
உன் பாதங்களை...
உன் வழிகளெங்கும் தூண்டில்கள் விழுந்திருக்கலாம்,
நீந்த முடியாதபடி வலைகள் விரித்திருக்கலாம்.
தண்ணீராய் மாறித் தப்பித்துக் கொள்..
தங்க மீனாய்த்தான் இருப்பேன்...
என தர்க்கம் செய்யாதே....
நீ
வெற்றி பெற்றதாய் நினைக்கும்
பல இடங்களில்
தோல்விதான் அடைந்திருப்பாய்...
நீ
தோற்றுப் போனதாய்
நினைக்கும்
பல தருணங்களில்
வெற்றிதான் பெற்றிருப்பாய்...
உணர்ந்துகொள்
நீ தோல்வியுற்றது
வாழ்க்கையிலல்ல
வாழ்க்கையை புரிதலில்...
இழப்பு
உள்ளம் உறங்கிப் போகும்......
உணர்வுகளின் கொந்தளிப்பில்,
உதடுகள் கூட ஊமையாகிடும்......
நெஞ்சுக் குழிக்குள்ளே,
நிஜங்களைத் தொலைத்துவிட்ட
நினைவுப் போராட்டம்....
நிழலாய் தொடரும்.....
கனவுகளும் கூட,
கற்பனைகள் இல்லாமல்,
கலங்கிப்போய்,
கண் மூடி கிடக்கும்....
கண்களில் கண்ணீரும்,
காய்ந்து போய் விடும்......
இரவுகளுக்கும், பகல்களுக்கும்,
இடைவெளியே இல்லை,
இரவிலும் உறக்கமில்லை,
இருளே பகலிலுமாய்,
மனம் விரும்பாவிட்டாலும்,
மௌனம் நம்மை,
தனதாக்கிக் கொள்ளும்....
மண்டியிட்டு மௌனம்
மனதுக்குள் உட்கார்ந்து
மங்காத நிகழ்வுகளை
மலை போல காட்டும்....
பரிச்சயமற்ற மௌனத்தால்,
பாறாங்கல்லாய்,
பாரம் ஏறும்...
உடலிலும், உணர்விலும்,
விழுதலில் இருந்து,
எழுவதற்காய்,
மௌனத்தை கேட்க வேண்டும்....
ஏ... மௌனமே பேசி விடு!!!!!
மனச்சாட்சி பொய் சொல்லுமா?
எல்லாம் என் மனச்சாட்சி அறியும் என்கிறாய்
மனச்சாட்சியையும் ஏன்
உன் தவறுகளுக்கு
துணைக்கு அழைக்கிறாய்
உனக்குத்தான் பொய் பேச தெரியும்
என்று எண்ணி இருந்தேன்
எப்போது உன் மனச்சாட்சியும்
பொய் பேச ஆரம்பித்தது.
வாழ்வு ஒரு வானவில்
எண்ணங்கள் இனிக்கும்....
மனம் தயங்கி நின்றாலும்
மயங்கி நிற்கும் இதயம்....
கண் மூடி அனுபவிக்கும்
கலங்கி பரதவிக்கும்....
கண் விழித்து பார்க்கையில் தெரியும்
காண்பது வானவில் என்று
புரியும் அப்போது...
வானவில்லின் இயல்பு
வருவதும் மறைவதும் என்று
எது நிரந்தரம்....
அதை புரிந்து கொண்டால்...
வாழ்வு சுகம் தரும்......
வாழ்வு ஒரு வானவில்!!!
மெளனமும் ஒரு மொழி!
இதழ்களை
இறுக மூடி
இதயத்தால் பேசும்
மொழியே மெளனம்
காதலில் மெளனம்,
அழகாய் பேசும்,
ஆயிரமாயிரம்,
கதை பல பேசும்...
அழுகையில் மெளனம்,
சோகத்தை பேசும்,
சொந்தங்கள் மறந்து,
ஆரவாரமாய் பேசும்....
கோபத்தில் மெளனம்,
சினத்தை பேசும்,
சீண்டிப் பார்த்தால்,
கொந்தளித்து பேசும்....
அன்பில் மெளனம்,
உள்ளத்தில் பேசும்,
ஊமையாய் இருந்து,
ஆழமாய் பேசும்.....
வார்த்தைகள் அற்ற
புத்தகம் மெளனம் - ஆனாலும்
வாசிக்க வாசிக்க
வாக்கியங்கள் ஆயிரம்
இன்பத்தில் மெளனம்
இதயத்தால் சுவாசிக்கும்,
துன்பத்தில் மெளனம்
துயரங்களை மூடும்
பேசாத மெளனத்தில் அர்த்தமில்லை,
எனினும்... மெளனமும் பேசும்.....
மெளனம் ஒரு தவம்
ஆழ்ந்து போனால் அமைதி கிட்டும
Monday, March 10, 2008
முடியாத முடிவுகள்
சுபம் போட்ட பின்னும்
தொடர்கின்றன..
தொடரும் என
அறிவித்தும்
முடிந்து போகின்றன…
கதைகளைப் போலில்லை
வாழ்க்கை
Monday, March 03, 2008
பணம்.
தேடுவது...
நெஞ்சம் எதைத்...
தேடுகின்றது
யதார்த்தமான
வார்த்தைகளை.
பொய்மையும்... தீ..மையும்
இல்லா.....நேசங்களை.
வங்சனை செய்யா..
மனிதர்களை.
சிந்திப்போம்..நில்லுங்கள் .
எதையும் முடிப்பேன் என்ற என்னம்
மனதில் எழுந்தால் அதை முடிக்கும்
திறமை உன்னிடம் உண்டு.
வாழ்கையை நேசிக்க வேண்டும்
அப்போதுதான் வாழ்கை இன்பமாகும்.
சந்தேகம் தான் வாழ்கை என்றால்
வாழ்கையே..கேள்விக்குறியாகிவிடும்
பழகும் விதம் கண்டு சந்தேகம் கொள்.
சந்தேகிக்கும் குணம் இருந்தால்
உன்னை அறியாமலே கொஞ்சம்
கொஞ்சமாக அழித்துக்கொண்டே..இருக்கும்.
உள்ளத்தில் கருணையில்லாவிட்டாலும்
வார்த்தையில் பண்பு வேண்டும்.
Sunday, March 02, 2008
புரியவில்லை
புரியவில்லை !முன்பு
ஒரு நாள்
சந்தித்த உன்னை
ஏன் பல நாட்கள்
சிந்தித்தேன் ?
புரியவில்லை !
பேச வந்ததை
விட்டு பலமுறை
பேசியிருக்கிறேன்
மணிகணக்கில்
புரியவில்லை !
நீ
பேசிய போதெல்லாம்
நான் நினைத்ததை எதிர்பார்த்து
நீ சொன்ன பலவற்றை
தலை ஆட்டி மறந்து போனேன்
புரியவில்லை !
அறியா பருவத்தே உருவான
மன எழுச்சி
என தீர்ப்பளித்து
கைதான உன் நினைவுக்கு
விடுதலை தந்தேன்
புரியவில்லை !
தொண்டி எடுத்த நிலத்தினில்
முளைக்கத்தான் செய்தன
புது நினைவுகள்
என் மனதில் மட்டும்
எத்தனை வசந்த காலங்கள் !
புரியவில்லை !
விதைத்த பயிர் விளைவதர்குள்
பலமுரை பயிரிட நினைத்தேன்
இந்த
பக்குவமற்ற விவசாயி,
இத்தனையும்
உன் முன்னிலையில்,
சிரித்தாய் சினேகத்துடன்
புரியவில்லை !
இன்று
விவசாயத்தை விட்டுவிட்டேன்
வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறேன்
ஆனால்
'என்றோ பயிர் செய்தது
இன்று விளைந்து நிற்கிறது
அதை பயிரிட்டவன் நீ
அருவடையும் செய்வாயா '
- சட்டென்று நீ கேட்டது
ஏன் கேட்டாய், புரியவில்லை
அன்று,
ஏன் கேட்கவில்லை, புரியவில்லை
புரியவில்லை !
மறுத்தேன் மென்மையாக
மறக்க மாட்டேன் என்கிறாய்
தகுதியற்றவன் என்றேன்
காரணம் கேட்கிறாய்
தோன்றியது..
ஏன் தோன்றியது
புரியவில்லை !
சிந்தனைகளையும்
சேர்த்து பெருக்கும்
காலத்தை நம்பி இருக்கிறேன்
நிச்சயம் தெளிவு பெருவாய்
நம்பி மீண்டும்
'நட்போடு ' காத்திருக்கிறேன்
கரம் சேர்ப்பாயா ?
புரியவில்லை !
தினந்தோறும்
உறங்க பிடிக்கவில்லை
விடிந்த பிறகும்
இமை திறக்க பிடிக்கவில்லை
சுத்தமாக நீராடி
உடுத்தி
சுகமாக பயணம் செய்து
எதிர்பார்ப்பு இல்லாமல்
கணிப்பொறியின் முன்
இயங்குகின்ற
மனிதப்பொறி
பணி முடியும் சமயம்
ஆம்
மாலையிலும் காலையிலும்
கடிகாரம் என்னை இயக்கியது
அது ஏனோ கடிகாரத்தை
7-க்கும் 5-ந்திற்கும் இடையில்
பார்ப்பதும் இல்லை !
உருவாக்குதல் கடினம்
உணவு எனில் மிகவும்
ஆனால்
வயிற்றுக்குத் தொிவதில்லை
மாறும் வாழ்வில்
என்றும் மாரா ஓர் அம்சம் - பசி.
மீண்டும் முதல் பத்தி -
எதிர்பார்ப்புகள் புாியவில்லை
கடிகாரத்தின் முட்களோடு
போட்டியிடுகிறேன்
காரணங்கள் தொியவில்லை
ஆதவனை ஆவலுடன்
எதிர்பார்ப்போர் யார் ?
நிலவும் அன்றாட நிகழ்வாகி போனது
நிலை மாற்றம்,
இட மாற்றம்,
மனது மட்டும் மாராமல்
குழம்பியே இருக்கிறது
படுக்கையில் கிடந்தபடி
உறங்க நினைக்கிறேன்
அவையங்கள் அனைத்தும் இந்த
தினப்படி அட்டவணையை முடித்தால்
சோர்வுற்றிருக்க
ஏனோ மனது உறங்க மறுக்கிறது.
இந்த நிகழ்வுகள் தினந்தோறும்.
காதலும் கணினியும்
இரண்டுமே அவரவர் அறிந்து உணரும் வரை ஒர் ஆச்சிாியமான விஷயம்தான்.
இரண்டிலும் காலம் நேரம் மனது உணராது
இரண்டையும் கையாள தனித்திறமை வேண்டும்.
அவரவருக்கு அவரவரே வல்லுநர் - இரண்டிலும்!
மிஞ்சினால் கெஞ்சுவது கெஞ்சினால் மிஞ்சுவது-இரண்டிலும் உண்டு
இரண்டில் எது நின்றாலும் உலக இயக்கம் தடைபடும்
இரண்டிற்கும் மொழியோ எண்ணற்றவை -அறிந்தோருக்கே வெளிச்சம்
இரண்டின் மோகமும் கொல்லாமல் கொல்லும்
இரண்டின் வளர்ச்சிக்கும் முடிவும் இல்லை,எல்லையும் இல்லை.
இரண்டையும் முழுதுணர ஜென்மம் ஒன்று போதாது.
இரண்டின் தாக்கத்திலிருந்தும் விடுபடுவது கடினம்
இன்றும் பாரதத்தில் இவ்விரண்டிற்கும் மதிப்பு உயர்வு
இவ்விரண்டின் சுகத்தையும் பெற்று இழந்து நிலை தடுமாறினோர் அநேகம்
பலாின் எதிர்காலம் இவ்விரண்டின் கையில் தான்.
எப்பொழுது மேலுயர்த்தும்.எப்பொழுது வீழச் செய்யும்-யாரும் அறியர்
இரண்டிலும் இன்று போலிகள் வர அதன் தூய்மை கெட்டது.
எது போலி எது நிஜம் என பிாித்தறிவது கடினம்தான்.
இரண்டுமே- சிலருக்கு பொழுதுபோக்கு
சிலருக்கு கடமை சிலருக்கு புாியயாத புதிர்
சிலருக்கு அதுவே உலகம்
ஒரே வித்தியாசம்-'பழையன கழிதலும் புதியன புகுதலும் '-கணினியில் இயல்பு
'பழையன கழிந்தாலும்,உயிரை கிழித்தாலும் அதன் நினைவுடனே வாழ்வது காதலில் சால்பு!! '
பழக்கமாகும்வரை...
இரத்தம் சிந்த வேண்டியிருந்தது
சைக்கிள் பழகும்வரை.
மூழ்கித் திணறி
மூச்சுத் தேடி
அப்பாவை இறுக்கிக் கொள்ள நேர்ந்தது
நீச்சல் பழகும்வரை.
முதன்முதலாய் வீட்டைப் பிாிந்தது
வேதனை தந்தது
கல்லூாி விடுதி பழக்கமாகும்வரை.
இரைச்சல் அணிந்த சாலைகளும்
இதயம் கழற்றிய மனிதர்களும்
வெறுப்பு வளர்த்தன
நகரம் பழக்கமாகும்வரை.
எல்லா சிரமங்களும்
பழக்கமாகும்வரைதான்.
எனவே கவலையில்லை,
பழகிவிடும்...
நீயற்ற மிச்ச வாழ்வும்.
சில நேரங்களில்
சில நேரங்களில் நெருப்பாய் எரிக்கின்றாய்.
சில நேரங்களில் மார்கழிப் பனியாகவும்
சில நேரங்களில் சுட்டெரிக்கும் வெய்யிலாகவும் இருக்கின்றாய்.
சில நேரங்களில் பெளர்ணமி நிலவாக குளிர்கின்றாய்
சில நேரங்களில் வெப்ப கதிர்களாய் சுடுகின்றாய்.
சில நேரங்களில் புதிருக்கு விடையாகவும்
சில நேரங்களில் விடையில்லா புதிராகவும் இருக்கின்றாய்.
சில நேரங்களில் யாருமறியாமல் பார்க்கின்றாய்.
சில நேரங்களில் கண்டும் காணாமல் செல்கின்றாய்.
புரியாத புதிராக இருப்பவளே!!
சீக்கிரம் சொல்லிவிடு - உன் மெளனத்திற்கு
உன் அகராதியில் அர்த்தம் தான் என்ன ? ? ? ? ?
திறந்த புத்தகம்
யாராலும் திருப்பிப் பார்க்க முடியாத
பக்கங்களுடன்
தாய்க்கு ஒரு பக்கம்
தந்தைக்கு ஒரு பக்கம்
தோழனுக்கொரு பக்கம்
தோழிக்கொரு பக்கம்
கணவருக்கொருபக்கம்
உறவுக்கொருபக்கம்
ஊருக்கொருபக்கம்
ஒருவர் பக்கம்
அடுத்தவர் காண முடியா
ரகசிய தன் முதுகாய்
எப்பொழுதும் அவள்
திறந்த புத்தகமாகவே யாராலும்
திருப்பிப்பார்க்க முடியாத பக்கங்களுடன்
வாசிக்க முடியாத கிறுக்கல்களுடன்
காக்கைக் கூடென
கருவேலமுட்களும்
குச்சிகளும் நாரும் நிறைந்த
சிடுக்குகளுடன்
குத்தும் முட்களிருப்பினும்
குஞ்சுகள் தாங்கும்
நெஞ்சமுடன் அவள் மனமும்
நிழல்களில் வாழுகின்றோம்
நகரத்து வயல் வெளியில்
மரங்களெல்லாம்
களைகளாய்,
வீடு கட்டி வாழ்வை
விாித்து கொள்ள எண்ணி
கூடுகட்டி குடும்பம் நடத்தும்
கூட்டுப் பறவைகளை மறந்தபடி
வெட்டிய மரத்துண்டுகளில்
காலை நேரக்கணங்களிலிவை
கூட்டிய காணங்களும்
துண்டாடப்பட்டபடி
கானக் குயில்களின் இசையில்
கண்விழித்ததை விட்டு
கனரக வாகனங்களின் இரைச்சலில்
கனவு தொலைந்தபடி
அழைப்பு மணியோசையிலும்
அதிகாலை எழுப்பும் மணியோசையிலும்
குயிலின் கீதத்தை
கானப்பறவைகளின் இன்னிசையை
உயிரற்ற 'செல் 'களினால்
உயிர்ப்பித்தபடி
நிஜங்களைத் தொலத்து விட்டு
நிழல்களில் வாழ்ந்தபடி ? ?
இருத்தல்
இருந்தால்.......
மென் ரோஜா மொட்டொன்றில்
பூவாய் அமர்ந்துக்
கதிரவனைத் தன்னுள் பூட்டியிருக்கும்
ஒரு பனித்துளியாய்......
கோடைக்காலத் தாகத்தில்
உதட்டின் மேல்
லேசாய் வந்துவிழும்
ஒரு மழைத்துளியாய்.....
.............................................இருத்தல் வேண்டும்.
எண்ணங்கள் தேக்கி
எட்டி நடக்கையில்
தன் இருத்தலைத் தெரிவிக்கத்
தொலைவிருந்த நீர்வீழ்ச்சி
மயிலிறகாய் முகத்தில் தெறித்துது
ஒரு துளி நர்......
சிறகடிக்கும் கண் மூடித்
துடிக்கும் இதயம் அடக்கி
இத்துளியை ஸ்பரிசித்த ஒரு நொடியில்
அனைத்தும் அடைந்துவிட்ட
ஒரு பரிபூரணம்
இனி இருத்தலில்
தான் என்ன அவசியம் ?
ததும்பி வந்து
இமை உறுத்திப் பிரித்துத்
தன் இருப்பை உணர்த்தி
என் இருத்தலின் அவசியத்தை
உறுதிப்படுத்தியது
ஒரு துளிக் கண்ணீர்.......
கடந்த காலக் கனவு
What happens to a dream deferred ?
Does it dry up
like a raisin in the sun ?
Or fester like a sore-
And then run ?
Does it stink like a rotten meat ?
Or crust and sugar over-
like a syrupy sweet ?
Maybe it just sags
like a heavy load.
Or does it explode ?
முகம்
தொலைந்த முகத்தைத்
தடவித் தேடுகிறேன்
தட்டுப் படுவது
முகம்தானா என்றறிய
தொலைக்கும் முன்
ஒரு முறையேனும்
தன் முகத்தை உணர்ந்திருக்கவேண்டும்
மோனம்
உயிர் சுவாசிக்கும்..
எனக்கும்
நடுவில்...
வெறுமை.
எதனையிட்டும்
நிரப்ப இயலா
வெட்ட வெளி.
ஏனிப்படி ?
எதற்கு வந்ததிது ?
உப்புக்காற்றாய்
நெஞ்சுகாிக்கச்செய்யும்
கேள்விக்கணைகள்.
அடிக்கடி நிகழும்
நலம் விசாாிப்புகளில் கூடப்
பாதாளக் கொலுசிற்கு
அகப்படாத
கிணற்றுப்பாத்திரமாய்
வார்த்தைகள்.
- அவைகளுக்கான தேடல்கள்.
சிக்கிய வார்த்தைகளிலோ
காய்ந்து,
கரை ஒதுங்கிய
கடற்பாசியாய்
உயிரற்ற உரையாடல்கள்.
ஒவ்வொரு முறை
சந்திக்கும் பொழுதும்
துள்ளிப் பாய்ந்து
அலை மோதும்
கடலாய் உன
ஞாபக ஈரம் மட்டும்
இன்னும் என்னுள்...
அவ்வப்பொழுது
நீ அளித்த
சிப்பிப்பாிசுகள்
என் காலடியில்
பொக்கிஷமாக...
இன்றும்
பத்திரமாக...
சந்தோஷப் பெளர்ணமிகளில்
நிலவின் ஸ்பாிசம் பட்டதில்,
மேனியெல்லாம்
பொங்கிய பூாிப்பால் நீ,
என் மோனத்துயில் களைத்துச்,
செல்லமாய் அடித்தெழுப்பிச்
சொன்ன கதைகள்
சுமந்த கரையோரக்
கற்பாறையிது.
இன்றோ..
உன் மனது இங்குக்
கல்லாகிப்போனது.
துக்கச் சூறாவளிகளில்
சிக்குண்ட போதெல்லாம்
ஆளுயரத்திற்கு
அலைமுடிகள் பறக்கத்
தலைவிாி கோலமாய்,
நீ என் தோள் பிடித்து,
அழுதரற்றிய கண்ணீர் -
இன்னும்..
சொட்டிக்கொண்டிருக்கிறது
என்மேல்.
உள்ளம் கலந்து,
சுகதுக்கம் பகிர்ந்து,
கருத்துக்கள் பாிமாறிக்,
கற்பனைகள் ரசித்து,
அற்புதங்கள் வியந்து
நீ என்னிலும்,
நான் உன்னிலும் ஆழ்ந்த
அந்த நட்புக்கணங்கள்
இன்று..
தூரத்தில் தொடுவானமாய்.
வாழ்க்கைச் சூாியனின் வெப்பத்தில்
அன்றாட அவசரங்களில்
நீராவியாக
நீ தொலைத்த அந்நினைவுகள் -
என்னுள் மட்டும்
ஏதோ ஒரு மூலையில்
சிறைப்பட்ட
கல்தேரைகளாக....
Saturday, March 01, 2008
தொலைபேசி
எல்லா தொலைபேசி அழைப்புகளும்
விருப்பு வெறுப்புகள் எதுவுமின்றி...
பின்பு ஒரு பட்டன் அழுத்தலில்
நடந்தேறும் இணைப்பும் துண்டிப்பும்!
இணைந்திருந்தவை துண்டிக்கப்பட்டதாகவும்
துண்டிக்கப்பட்டவை இணைந்ததாகவும்
இணைப்பும் துண்டிப்புக்குமான
இடைவெளி நிரம்பும்!
அந்த இடைவெளியில் தீர்மானிக்கப்பட்டதுதான்
அகண்ட வீதி இடைவெளியாய் இருக்கக்கூடும்
காற்றில் கலந்து விடாவண்ணம்
மனிதச்சொல் சேகரித்து
மீண்டும், மீண்டும்
ஒரு மாதிரிதான் வருகின்றன
சுயசரிதை எழுதுதல்
எளிதாக எழுத இயலாமல்போன
அடித்து அடித்து
எழுதப்பட்ட
சுயசரிதைக்குள்
நான் அடைந்துகொண்டேன்
கடைசியில் ஒரு குறிப்புடன்,
இது வளைந்து நெளிந்து செல்லும்
நேரான பாதை.
கேள்வி பதில்களற்ற உலகம்
நீண்டு கொண்டே சென்றது மாலை
ஆதியில் ஒரே ஒரு கேள்வியில்தான் தொடங்கியது அம்மாலை
முடிவற்றுத் திரியும் கேள்விகளுக்குள்ளே
விரவிக் கிடந்த பதில்களைத் தேடியபோது
திறந்துகொண்டது பதில்களாலான உலகம்
ஆதியில் அங்கேயும் ஒரே ஒரு பதிலே இருந்தது
கேள்வியும் பதிலும்
தொடர்ச்சியாக
ஒன்றையொன்று நிரப்பிக்கொண்டபோது
ஒலி இழந்தன வார்த்தைகள்
வெறும் திட்டுத் திட்டாய்
தெறித்துவிழும் மௌனத்தில்
ததும்பும் சங்கேதங்களில்
முற்றுப்பெறுகிறது இவ்வுலகு
உறவுகள்
காலையில் மலர்ந்து மாலையில் உதிரும் மலர்களைப் போலத் தான் உறவுகளும்.. நாம் அடுத்த பருவத்தை எட்டும் பொழுது தடுக்க இயலாமல் சில உறவுகள் தானாக உத...
-
எப்போதும் போலவே சந்திப்புக்கள் சத்தத்தோடும் பிரிவுகள் மௌனத்தோடும் அரங்கேறிப் போனது.
-
நாகரீகம் வளர்ந்தும் நாடோடி வாழ்க்கை வாழ்கிறான் மனிதன். வாழ்வை உணராத வரையில்!









