Thursday, July 31, 2008

ஈரம்..!

ஒவ்வொரு இரவிலும்
என் தலையணையில்
தங்கிவிட்டு போகிறது
உன் நினைவுகளின் ஈரம்..!

Wednesday, July 30, 2008

உன்னோடு....!

உன்னோடு கொஞ்சம்
பேச வேண்டும்,
கிடைக்குமா தனிமை?
நீயும், நானுமற்ற தனிமை!

பேச்சில் கொஞ்சம்
பருக வேண்டும்,
இருக்குமா வெறுமை?
வார்த்தைகளும், வசனங்களுமற்ற வெறுமை!

வெறுமையில் கொஞ்சம்
வசிக்க வேண்டும்,
அமையுமா இனிமை?
ஆசைகளும், ஓசைகளுமற்ற இனிமை!

தனிமையில் கொஞ்சம்
தரிக்க வேண்டும்,
தகையுமா மெளனம்?
சப்தங்களும், அமைதியுமற்ற மெளனம்

உண்மையில்

அழுது கொண்டே இருக்கையில்
சிரிக்க சொல்கிறாய்
விழித்து கொண்டிருக்கையில்
கனவாய் வந்து செல்கிறாய்

விடியல் கலைந்து
இரவு தோன்ற
இது தான் உன் வாழ்க்கை
இங்கு தான் உன்
தொடக்கம் என்று
விட்டு செல்கிறாய்


கைகளிலிருந்து நழுக்கொண்டு
மீண்டும் வருவதாய்
எந்த அறிப்பும் இன்றி
இருளை உள்வாங்கிய கண்கள்
உன்னையே நோக்கி நடக்கையில்
கருமேகங்களுக்குள்
ஒளிந்து கொண்டு அழுகிறாய்


அவற்றையும் கடந்து
தொடர்கிறேன்; அழைக்கிறேன்
பார்வையில் பனித்துளிகள்
தெளித்து வழியில்
ஒதுங்கி செல்கிறாய்


இது தான் உன்
தொடக்கம் என்று
சில பூக்களை
எறிந்து செல்கிறாய்


நீ எறிந்த பூக்கள் எல்லாம்
ஏளன புன்னகை பூக்கின்றன
என் வழியெல்லாம்


உண்மையில் எல்லாம்
பொய்களென...

முதல் மழை என்னை நனைத்ததே..!

பாடலாசிரியர் : நா . முத்துக்குமார்
பாடியவர்கள் : R.பிரசன்னா, ஹரிஹரன், மஹதி

படம் : பீமா

**************************************************

முதல் மழை என்னை நனைத்ததே..
முதல் முறை ஜன்னல் திறந்ததே..
பெயரே தெரியாத பறவை அழைத்ததே..
மனமும் பறந்ததே..

இதயமும்.. ஓ.. இதமாய் மிதந்ததே..
முதல் மழை நம்மை நனைத்ததே..
மூடிவைத்த ஜன்னல் திறந்ததே..
பெயரே தெரியாத பறவை அழைத்ததே..
மனமும் பறந்ததே..

இதயமும்.. ஹ்ம்.. இதமாய் மிதந்ததே .. யீ..

கனவோடு தான் அடி நீ தோன்றினாய்..
கண்களால் உன்னைப்படம் எடுத்தேன்..
என் வாசலில் நேற்று உன் வாசனை..
நீ நின்ற இடம் இன்று உணர்தேன்..

எதுவும் புரியா புதுக்கவிதை..
அர்த்தம் மொத்தம் இன்று அறிந்தேன்..
கையை மீறும் ஒரு குடையாய்..
காற்றோடு தான் நானும் பறந்தேன்..
மழை காற்றோடு தான் நானும் பறந்தேன்..

பெயரே தெரியாத பறவை அழைத்ததே..
இதயமும்.. ஓ.. இதமாய் மிதந்ததே ..
ஓர்நாள் உன்னை நானும் காணாவிட்டால்..
என் வாழ்வில் அந்த நாளே இல்லை ..

ஓ.. ஓர்நாள் உன்னை நானும் பார்த்தேவிட்டால்..
அந்நாளின் நீளம் போதவில்லை..
இரவும் பகலும் ஒரு மயக்கம்..
நீங்காமலே நெஞ்சில் இருக்கும்..

உயிரினுள்ளே உந்தன் நெருக்கம்..
இறந்தாலுமே என்றும் இருக்குமே..
நான் இருந்தாலுமே என்றும் இருக்குமே..

Tuesday, July 29, 2008

உன் நினைவுகள்


உன் நினைவுகளைத்
தாங்கிய
என் பொழுதுகள்
விடியாமலே
இருந்திருக்கலாம்..

Monday, July 28, 2008

வார்த்தைகள்


உறுதியைத் தொலைத்து நின்ற
உன் வார்த்தைகள்
வெறும் மொழியானது இன்று
கனவுகளைத் தொலைத்த
என் விழிகளில் சில துளிகள்
கவிதையானது உன்னால்...

ஒரு தடவை ....!


மரணத்தை அணைக்கின்றாய்
தவழ்ந்து வரும் குழந்தையை
அணைப்பது போல்...


இல்லாத உலகத்திற்கு போக
தவம் கிடக்கின்றாய்
இருக்கும் உலகை விட்டு...


பிறப்பும் இறப்பும் ஒரு தடவையே
பிறந்த பயனை முழுமையாய்
அடையாமல்
குறைப் பிரவசமாய் போகத்
துடிக்கின்றாயே தோழி...

Sunday, July 27, 2008

உயிர் அழும் ஓசை

உயிர் அழும் ஓசையில்
நீ மட்டும் நிம்மதி துயில்
கொள்வதெப்படி?

என்னை விழிக்க செய்துவிட்டு
இமைகளைப் பிடுங்கி செல்கிறது
உனது மௌனம்
வலியில் அவைகள்
துடிப்பதை அறிந்தும்...

Saturday, July 26, 2008

நிழல்


எங்கு சென்றாலும்
இடைவிடாமல் தொடர்கிறது
உன் காதல்
என்னோடு விலகி
நிற்கும் நிழலைப் போல

தூரத்தில் தோழி

தனிமை ஒவ்வொரு முறையும் என்னை சூழ்ந்து கொண்டபோது
உனக்கும் எனக்குமான
கண்ணாடியில்
பிரிவின் கீறல்கள்
முகங்கள் மறைத்து
மீண்டும் சிரிக்க முயற்சிக்கின்றன
எதையும் தொடர முடியாமல்
எதுவும் தொடவும் முடியாமல்
தவிக்கும் பாதங்களுக்கிடையில்!

Friday, July 25, 2008

அன்புள்ள கடவுளுக்கு


அன்புள்ளக் கடவுளுக்கு,
இதுதான் இறுதி என்று
எழுதுகிறேன்..
எத்தனை முறை எழுதுவது
கடிதம் உனக்கு?


பிரிக்கப்படாமலும் படிக்கப்படாமலும்
கிடக்கின்றன அவை
முகவரியே நீ தான்
தர மறுக்கிறாய்
உள்ளே இருந்து கொண்டு
வர மறுக்கிறாய்


நீ யார் என்ற போருக்குள்
யார் நீ என்ற கேள்விகளுக்குள்
விரிந்துகொண்டே போகிறாய்


அழுகையை மட்டும்
உனக்கும் எழுதிவைக்கிறேன்
நீ தான் பொறுப்பென்று
சுகத்தை எனக்குள்
பதுக்கி வைக்கிறேன்


நிரந்தரமென்று
எதையும் பொருட்படுத்தாத
உன் மௌனத்தைக் கண்டு
என் பேனா முனைகள்
உடைகின்றன
தூர வீசுகின்றேன்


கோபம் களைந்து
மீண்டும் எழுதுகிறேன்
உன் மௌனத்தைக் கலைக்க
ஒரு கடிதம்
இதுதான் இறுதியென்று...


இப்படிக்கு,
என்றும் நான்

காற்றினிலே வரும் கீதம்

படம்: மீரா
இசை: S V வெங்கட்ராமன்
பாடியவர்: M S சுப்புலக்ஷ்மி

******************************

காற்றினிலே வரும் கீதம் காற்றினிலே வரும் கீதம்
கண்கள் பனித்திடப் பொங்கும் கீதம்
கல்லும் கனியும் கீதம் - காற்றினிலே

பட்டமரங்கள் தளிர்க்கும் கீதம் பண்ணொலி கொஞ்சிடும் கீதம்
காட்டு விலங்கும் கேட்டே மயங்கும் மதுரமோஹன கீதம்
நெஞ்சினில் இன்பக்கனலை எழுப்பி நினைவழிக்கும் கீதம் - காற்றினிலே

சுனை வண்டுடன் சோலைக்குயிலும் மனங்குவிந்திடவும்
வானவெளிதனில் தாராகணங்கள் தயங்கி நின்றிடவும்
ஆ! என் சொல்வேன்! மாயப்பிள்ளை வேய்ங்குழல் பொழிகீதம் - காற்றினிலே


நிலா மலர்ந்த இரவினில் தென்றல் உலாவிடும் நதியில்
நீல நிறத்துப் பாலகன் ஒருவன் குழல் ஊதி நின்றான்
காலமெல்லாம் அவன் காதலை எண்ணி உருகுமோ என் உள்ளம்- காற்றினிலே

Wednesday, July 23, 2008

நட்பு

அன்பின் பறிமாற்றத்தில்
ஆழத்தின் தாழ் திறப்பு
காதல் என்றால்
கதவடைப்பு பிரிவா?

இவை இரண்டிற்கும்
நூலிழையில் ஒர்
அழகிய திரை
நட்பா?

இதயத்தின்
வாசிப்பு மட்டும் தொடர்கிறது
நம் அன்பின்
கை கோர்ப்பில்
கேள்விகளைக் கடந்து...

இமை ஓர கனவுகள்

உன்னிடம் பேச
என்னிடம் மொழிகள் இல்லை
சில மௌனங்களே
எஞ்சி உள்ளன.

அதைக் கொண்டு
பேசுகிறேன்! பேசுகிறேன்!
பேசிக் கொண்டே இருக்கிறேன்.

மொழிகளை கடந்து
அசைகின்றன உதடுகள்
விழிக்கின்றன உனக்கான
என் கனவுகள் இமையோரத்தில்!

Tuesday, July 22, 2008

கண்ணீர்


இறுதி

இறுதியில் மரணத்திற்காகவே
எஞ்சியுள்ளது
இந்த வாழ்க்கை
எல்லாம் மரணித்துப்போன
பயணங்களுக்கிடையில்

Thursday, July 17, 2008

சிரிப்பு


காதலின் மொழி

எத்தனை தரம் கேட்டாலும்
அலுத்து போவதில்லை - நீ
என்னுடன் பேசிக்கொண்டிருக்கும் மௌனம் !

தொலைக்கப்பட்ட காதல் ..

கல்லூரி விடுமுறையில் - வகுப்பறை
முழுதும் நிறைந்து கிடக்கிறது,
படித்தவர்கள் தொலைத்துச் சென்ற காதல்..!

நட்பின் சுவடுகள்

நாம் கொண்ட லட்சியங்கள் தோற்றிருக்கலாம்,

பிரிந்தபோது எழுதிய முகவரிகள் மாறியிருக்கலாம்,

கனவுகள் பகிர்ந்தித்தளித்த நண்பர்முகம் மறந்திருக்கலாம்,

காலத்தின் பிணைக்கைதியாய் காதலை கடந்திருக்கலாம்,

உலகில் புதிதாய் பல உறவுகள் கிடைத்திருக்கலாம்,

எங்கு வாழ்கிறோமென்று ஒருவருக்கொருவர்

அறியாமலிருக்கலாம்,அனுபவங்கள் கடந்ததால்,

வாழ்வின் அர்த்தம் புரிந்திருக்கலாம்,

ஆனால் கல்லூரி நினைவுகள் கொடுத்துச் சென்ற ,

நட்பெனும் தழும்பு மட்டும் என் நெஞ்சில் அப்படியே..!

Sunday, July 13, 2008

பாதாம் பருப்பு

பாதாம் பருப்பு சாப்பிடுவதால் உடலுக்கு அதிகமான புரதச்சத்து கிடைக்கும். அதுமட்டுமின்றி பாதாம் பருப்பு சாப்பிடுவதால் நமது ஜீரண சக்தி அதிகரிக்கும் என்பதை ஆய்வாளர்கள் கண்டறிந்து உள்ளனர். நமது பெருங்குடலில் நன்மை செய்யும் பாக்டீரியாக்கள் ஏராளமாக இருக்கின்றன. இவை தீமை செய்யும் பாக்டீரியாக்களை அழித்து, உணவு செரிமாணத்தை அதிகபடுத்தும் தன்மை வாய்ந்தவை. இதனால், செரிமாணக் கோளாறு உள்ளவர்களுக்கு நன்மை செய்யும் பாக்டீரியாக்களின் வளர்ச்சியை ஊக்குவிக்கும் வேதிப்பொருட்களை உணவுடன் அளிப்பது உண்டு.

பாதாம் பருப்பு சாப்பிட்டால், வேதிப்பொருட்கள் அளிக்க வேண்டிய அவசியம் இருக்காது. பாதாம்பருப்பு நமது இரைப்பையை தாண்டி பெருங்குடலுக்கு சென்று, அங்குள்ள பாக்டீரியாக்களின் வளர்ச்சியை ஊக்குவிக்கின்றது என்பதை கண்டறிந்து உள்ளனர். இதனால் செரிமாணக் கோளாறுகள் ஏற்படும் வாய்ப்பு குறைகிறது. எனவே செரிமாணப் பிரச்சினை இருப்பவர்கள் மட்டுமின்றி உடல் ஆரோக்கியத்தை விரும்பும் அனைவரும் பாதாம் பருப்பு சாப்பிடலாம்.

Friday, July 11, 2008

மோனம்

ஒரு துளியாய் வீழ்ந்தப் போது
தெரியவில்லைசேரப்போவது ஒரு சமுத்திரமென
அலைஅலையாய் அலைகிறேன்
அகண்டு கிடக்கிறது கடலென அறியாமல்
கரையிலே ஒதுக்கிப் போடும்
உன்கரங்களை இறுகப் பற்றிக் கொள்கிறேன்
உள்ளே இழுத்துச் செல்.

நன்றி ரேவதி

பொம்மையின் ஞாபகம்

வாசலைத் திறந்து
செல்ல முடியாத
பொம்மை
எல்லோரும்
வெளியேறிச் சென்றபின்
தனித்திருக்கிறது
குழந்தையின் ஞாபகங்களுடன்

Thursday, July 10, 2008

மௌனம்

ஒரு எந்திரம் மிக நன்றாக வேலை செய்யும் நிலையில் இருக்கும் போது சத்தம் மிகக் குறைவாகவே இருக்கும். அதன் வேலை செய்யும் திறன் பழுதுபடும் போது தான் சத்தம் அதிகரிக்கத் துவங்கும். இது எந்திரத்திற்கு மட்டுமல்ல மனிதர்களுக்கும் பொருந்தும். நிறைய சாதித்தவர்களின், மனித சமுதாயத்தில் தங்கள் காலடித் தடங்களைப் பதித்து விட்டுப் போனவர்களின் வாழ்க்கைகளை ஆராய்ந்தோமானால் அவர்கள் ஓயாமல் பேசுபவர்களாக இருப்பதில்லை.
வம்பு பேசுபவர்களாகவோ அடுத்தவர்களின் தனிப்பட்ட வாழ்க்கை குறித்து அலசுபவர்களாகவோ, விமரிசித்து மகிழ்பவர்களாகவோ இருப்பதில்லை. அவர்களுக்கென்று வாழ்க்கையில் குறிக்கோள் இருக்கிறது. அதில்தான் அவர்களுக்கு முழுக்கவனமும் இருக்கிறது. அவர்களிடம் தேவையற்ற பேச்சுகளுக்கு நேரமோ மனமோ இருப்பதில்லை.அமைதியாக இருக்கும் போதுதான் தெளிவாக சிந்திக்க முடிகிறது.
தெளிவான சிந்தனைக்குப் பின் பிறக்கும் செயல்களே சிறப்புறுகின்றன. எதிலும் நமது முழுத் திறமையும் வெளிப்பட வேண்டுமானால் மனதை ஒழுங்குபடுத்தி, அனைத்து சக்திகளையும் நாம் ஒருமுகப்படுத்த வேண்டும். இது பேசிக் கொண்டே இருக்கும் சந்தர்ப்பங்களில் சாத்தியமாவதில்லை. மௌனம் நமது சக்திகளை விரயமாக்காமல் சேமிக்க உதவுகிறது. ஓயாமல் பேசிக் கொண்டிருக்கையில் நமது நேரத்தையும், சக்திகளையும் விரயமாக்குவதுடன், அடுத்தவர்களைத் தொந்தரவும் செய்கிறோம்.
சொல்லத் தேவையில்லாத, பின்னால் நம்மை வருந்த வைக்கிற எத்தனையோ விஷயங்களைச் சொல்லியும் விடுகிறோம்.ஒரு கிரேக்க ஞானி சொன்னதைப் போல் "உங்கள் பேச்சு மௌனத்தை விடச் சிறப்பாக இருக்குமானால் மட்டுமே பேசுங்கள். இல்லையேல் மௌனமே நல்லது". உண்மையில் மேற்போக்காக நாம் வாழும் போது தான் அதிகமாய் வாக்குவாதங்களில் ஈடுபடுகிறோம்; அடுத்தவர்களை விமரிசிக்கிறோம்; சண்டை சச்சரவுகளில் ஈடுபடுகிறோம். சொன்னதையே திரும்பத் திரும்ப சொல்கிறோம். ஆனால் வாழ்க்கையில் ஆழமான நிலைகளை அடையும் போது இயல்பாகவே பேச்சு குறைந்து விடுகிறது.பலரும் மௌனம் என்று குறிப்பிடுவது வாய் மூடியிருப்பதையே என்றாலும் இது ஒரு ஆரம்பம் மட்டுமே. இதைக் காட்டிலும் உயர்ந்த மௌனம் இன்னொன்று உள்ளது. அது உள்ளே நிகழும் மௌனம். மனமும் அமைதியடையும் போதே அந்த மௌனம் சாத்தியமாகிறது. வாய் மூடி இருந்தாலும் மனம் ஓயாமல் ஏதாவது சொல்லிக் கொண்டிருந்தால் வெளிப்புற மௌனத்தால் பெரிய அளவு பலன்களை நாம் எதிர்பார்க்க முடியாது. உட்புறமும் மௌனத்தை அனுசரிக்க முடிந்தால் அதனால் கிடைக்கும் பலன்கள் அளவில்லாதவை. இந்த உள்புற மௌனத்தை அடைய தியானம், ஆத்மவிசாரம் ஆகியவை உதவுகின்றன.ஒவ்வொரு முக்கியமான செயலைச் செய்யும் முன்னும் ஓரிரு நிமிடங்கள் மௌனமாய் இருப்பது சிதறும் சக்திகளைச் சேர்த்து ஒழுங்குபடுத்த உதவுகிறது. இப்படி ஒழுங்குபடுத்தப்பட்ட சக்திகளை முறையாகப் பயன்படுத்தி ஒரு செயலைச் செய்யும் போது அது மிகச் சிறப்பாக அமைவதில் ஆச்சரியமில்லை.
மேலும் எல்லா புதிய பரிமாணங்களும், ஆழமான அர்த்தங்களும் நமக்குப் புலனாவது நாம் இப்படி மௌனமாக இருக்கும் போது தான். நம் உண்மையான தேவை என்ன, அதற்கு என்ன செய்ய வேண்டும், எப்படி செய்ய வேண்டும் என்ற கேள்விகளுக்கு குழப்பமில்லாமல் தெளிவாக விடை காண்பது இந்த ஆழமான மௌனத்தின் போது எளிதாகிறது. அதற்கான பெரும் சக்தியும் இந்த மௌனத்தில் நம்முள் பிறக்கிறது.
ஒரு பெரும் சூறாவளியின் சகல சக்திகளுக்கும் மூலம் அதன் அமைதியான மையத்தில் இருப்பது போல எல்லா சாதனைகளையும் புரியத் தேவையான மகா சக்தியை நம்முள்ளே பிறக்கும் அந்த மௌனத்தில் நாம் காண முடியும்

Saturday, July 05, 2008

குழந்தை பெற்றெடுத்த ஆண்....!

அமெரிக்காவின் ஓரிகான் மருத்துவமனையில், பெண்ணாக இருந்து பின்னர் ஆணாக மாறியவருக்கு அழகான பெண் குழந்தை பிறந்துள்ளது.

அந்த அதிசய பிறவியின் பெயர் தாமஸ் பீட்டி. இவருக்கு 34 வயதாகிறது. இயற்கையில் பெண்ணாக பிறந்தவர்தான் தாமஸ் பீட்டி. ஆனால் பின்னர் ஹார்மோன் சிகிச்சை மற்றும் அறுவைச்சிகிச்சை மூலம் 10 ஆண்டுகளுக்கு முன்பு ஆணாக மாறி விட்டார். ஆணாகவே தற்போது வாழ்ந்தும் வருகிறார்.

இவருக்கு அறுவைச் சிகிச்சை உள்ளிட்டவை நடந்த போதிலும் இவரிடம் பெண்ணுக்குரிய இனப்பெருக்க உறுப்புகள் அப்படியேதான் இருந்தன. இந்த நிலையில் செயற்கை கருவூட்டல் மூலம் கருத்தரித்தார் தாமஸ் பீட்டி.

இன்னொருவரின் விந்தை எடுத்து, தாமஸ் பீட்டியின் கரு முட்டைகளுடன் சேர்த்து கருத்தரிக்கப்பட்டது. கர்ப்பமடைந்த தாமஸ் பீட்டிக்கு ஜூன் 290ம்தேதி அழகான பெண் குழந்தை பிறந்தது. தாமஸும், சேயும் நலம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. குழந்தை நல்ல ஆரோக்கியத்துடன் உள்ளதாம்.

இயற்கையான முறையில் பிரசவம் நடந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இப்போது தாமஸுக்கு இருக்கும் ஒரே பெரிய வருத்தம் என்னவென்றால், குழந்தைக்கு பால் கொடுக்க முடியாதே என்பதுதானாம்.

கடந்த ஏப்ரல் மாதம்தான் தான் ஆணாக மாறியது எப்படி என்பதை ஓப்ரா வின்பிரே ஷோவில் விளக்கியிருந்தார் தாமஸ்.

2 ஆண்டுகளுக்கு முன்புதான் குழந்தை பெறும் ஆசை வந்தது தாமஸுக்கு. இதையடுத்து மாதந்தோறும் இருமுறை எடுத்துக் கொள்ளும் ஹார்மோன் ஊசியை நிறுத்தினார். இதையடுத்து அவருக்கு மாத விடாய் சுழற்சி திரும்ப வந்தது.

பீட்டிக்கு ஒரு மனைவியும் உண்டு. அவரது பெயர் நான்சி (46). ஐந்து ஆண்டுகளுக்கு முன்புதான் நான்சியை மணந்தார் பீட்டி. அவருக்கு கருத்தரிக்க முடியாமல் போய் விட்டது. அதனால்தான் மனைவிக்காக பீட்டி கர்ப்பமடைந்தாராம்.

நான்சிக்கு முதல் திருமணம் மூலம் 2 பெரிய மகள்கள் இருக்கிறார்களாம்.
குழந்தையை எப்படி வளர்க்கப் போகிறீர்கள் என்று ஷோவின்போது வின்பிரே கேட்டபோது, வழக்கம் போலத்தான். அவர்தான் தந்தையாக இருப்பார். நான் தாயாக இருப்பேன் என்று கூறினார் நான்சி.

தாமஸ் பேசாமல் தனது பெயரை ‘தாயுமானவன்’ என்று மாற்றிக் கொள்ளலாம்!

Wednesday, July 02, 2008

'உடம்பை இளைக்க, சாப்பிடுவதைக் குறைக்காதீர்'

'எனது பருமனான உடம்பை இளைக்கச் செய்வதற்காக, குறைவாகவே சாப்பிடுகிறேன்' என்று சொல்வதை நிறுத்திக்கொள்வது சாலச் சிறந்தது.

பருமனான உடலை இளைக்க வைப்பதற்கும், அன்றாடம் உண்ணும் உணவைக் குறைத்துக் கொள்வதற்கும் சம்மந்தமே இல்லை.

இதையே ஆஸ்திரேலிய மருத்துவ ஆய்வு ஒன்று ஆதாரத்துடன் எடுத்துரைக்கிறது.

நியூகாஸ்டில் மருத்துவ ஆய்வுக் குழு ஒன்று, உடல் பருமனுக்கும், அன்றாட உணவைக் குறைப்பதற்கும் தொடர்பு உண்டா என்பதை உடல் பருமனான 179 பேரைக் கொண்டு ஆய்வு செய்தது.

இவர்களில் பாதிபேருக்கு கட்டுப்பாட்டு உணவாக, மூன்று வேளை மட்டுமே சாப்பாடு அளிக்கப்பட்டது. எஞ்சிய பாதி பேருக்கு மூன்று வேளை உணவுடன் வழக்கம் போல் நொறுக்குத் தீனிகளும் கொடுக்கப்பட்டது.

ஒரு குறிப்பிட்ட கால இடைவெளிக்குப் பிறகு, ஆய்வின் முடிவில் சாப்பாடு குறைக்கப்பட்டவர்கள் எவ்வித மாற்றமுமின்றி பருமனாகவே இருப்பது தெரியவந்தது.

மேலும், பருமனான நபர் அன்றாடம் எவ்வளவு சாப்பிடுகிறார் என்பது முக்கியமல்ல; எந்த வகையான உணவுப் பொருட்களை உட்கொள்கிறார் என்பதே முக்கியம் என ஆய்வாளர்கள் தெரிவித்தனர்.

எனவே, உடம்பை இளைப்பதற்காக சாப்பிடுவதைக் குறைத்துக் கொள்ளாமல், கொழுப்பு போன்றவை குறைவாகவுள்ள பொருட்களைத் தேர்ந்தெடுத்து சாப்பிடுவது நன்மை பயக்கும்.

ஆயுளை அதிகரிக்கும் காபி!

காபி குடித்தால் இருதயம் தொடர்பான நோய்கள் நெருங்காது என்று ஆய்வில் தெரியவந்துள்ளது.

இதுகுறித்து லண்டன் விஞ்ஞானிகள் ஆராய்ச்சி நடத்தினர். நாள் ஒன்றுக்கு 6 முறை காபி அருந்தும் 41 ஆயிரம் ஆண்கள் மற்றும் 84 ஆயிரம் பெண்கள் ஆகியோரிடம் கடந்த 20 ஆண்டுகளாக ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டது.

காபி அருந்துபவர்களின் புகைப்பிடிக்கும் பழக்கமும் கண்காணிக்கப்பட்டது.

ஆராய்ச்சியின் முடிவில், புகை மற்றும் மது பழக்கத்தினால் காபி அருந்தாதவர்களின் உடல்நிலை பாதிக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. அவர்களுக்கு இருதய நோய் அறிகுறிகளும் தென்பட்டன.

ஆனாலும், தினமும் காபி அருந்தியவர்களின் உடல்நிலையில் பெரிய அளவிலான பாதிப்புகள் ஏற்படவில்லை.

அதிலும் குறிப்பாக, காபி அருந்தும் பெண்களுக்கு மற்றவர்களை காட்டிலும் இருதய நோய், பக்கவாதம் போன்றவற்றுக்கான அறிகுறிகள் 25 சதவீதம் குறைவாக இருந்தது.

இதன் மூலம், 'காபி அருந்தாதவர்களுடன் ஒப்பிடுகையில், காபி அருந்துபவர்களுக்கு ஆயுள் அதிகம் என ஆய்வு முடிவுகள் உறுதி செய்வதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

எனை நட்பில் வென்றாயே!

ஒரே ஒரு வார்த்தைப் பேசி விட
எண்ணி ஒரு மணி நேரம்
எனக்குள்பேசிக் கொண்டிருந்தேன்
நட்பு எனக்குள் மட்டும் தானா
உனக்குள் இல்லையா
நான் ஏன் முதலில் பேச வேண்டுமென்று
பழகிய நாளை
அதில் இளகிய மனதை
நீ நோகடித்தது நினைவில்லையா?
நெஞ்சுக்குள் ஏனோ
திடீரென்று ஒரு புழுக்கம்
ஏனோ மனக் குழப்பம்
நமக்குள் என்ன தான் நிகழ்ந்தது
உனை எனக்குப் புரியலையா?
எனை உனக்குப் புரியலையா?
இருந்தும் ஏன் மௌனம்
சொல்லுக்கு நம் நட்பு பழகலையா
என்னில் முதல் கண்ணீரை
வரவழைத்த நட்பு உனதே!
என்னில் முதல் மௌனத்தை
வரவழைத்த உறவும் உனதே!
உயிர் போகும் நாளிலும்
அழ வைத்த உணர்வு
மனம் விட்டு அகலுமொ
அதுவும் உயிரான நட்பில்
என் அருகில் நீ வந்து
நின்ற நிமிடம்
என் மனக்குழப்பம் தவிர்த்து
பேச வாய் திறந்த வேளை
நீ கண் கலங்கி நின்றாயே!
எனை நட்பில் வென்றாயே!

Tuesday, July 01, 2008

கேள்விகள்

கேள்விகள் ஒளிந்திருக்கும்
ஒவ்வொரு தருணமும்
கடினமானவைதான்!!

காலத்தின் கைகளில்
ஒப்படைக்கும்
கேள்விகள்,
விடையறியாதவை…

விடைகள் காத்திருக்கும்
கேள்விகளோ,
கேட்கப்படாமலேயே
காலத்தைக்
கடந்துவிடுபவை….

புருவங்கள் உயர்த்தி
விழிகள் உதிர்க்கும்
கேள்விகள்,
மனதினை தைப்பவை….

உள்ளத்தில் கள்ளமின்றி
மழலைகள் தெறிக்கும்
கேள்விகளோ,
விடையறிந்தும்
விளக்க இயலாதவை…

எண்ணற்ற கேள்விகள்,
ஒவ்வோர் மனதிலும்….
நியாயமானவை,
ஆதாரமற்றவை,
இயல்பானவை,
தேவையற்றவை,
சிந்திக்க வைப்பவை…
மொத்தத்தில்,
விசனப்படவே வைக்கின்றன
அத்தனை கேள்விகளும்!!

உறவுகள்

காலையில் மலர்ந்து மாலையில் உதிரும் மலர்களைப் போலத் தான் உறவுகளும்.. நாம் அடுத்த பருவத்தை எட்டும் பொழுது தடுக்க இயலாமல் சில உறவுகள் தானாக உத...