Wednesday, May 28, 2008

போகமுடியாத பாதை

தனிமையின் காடு அடர்ந்தது
மழைமூடும் மாலைகளோ
வெனில்பொட்டு வெளிச்சமுமற்ற
இருள் திண்மம்.

விழுதெனப் பற்றியதெல்லாம்
பாம்பெனச் சீறும் அடர்வனத்தில்
முள்கிழிக்க அலைகின்றேன்.
சூரியன் உட்புகா
விசும்பல்கள் வெளியேறா
இலைச்செறிவு விலக்கி
வானம் பார்த்தல்
சாத்தியமற்றிருந்தது நேற்றுவரை.

தனிமையின் பயம் தணிக்க
தனக்குத் தான் பேசியபடி
நடந்துகொண்டிருக்கிறது நதி.
அதனருகில்
ஊர்சேர்க்கும் ஒற்றையடிப்பாதையொன்று
மெலிந்து செல்லப் பார்த்தேன்

போயிருக்கலாம் அதனூடு.
விலங்குகள் காட்டினில் மட்டுமிருந்தால்.

1 comment:

Unknown said...

தனிமை எங்கேயும் இல்லை. காட்டில் கூட விலங்குகள் இருக்கும். தனிமை மனதில் உள்ளது

உறவுகள்

காலையில் மலர்ந்து மாலையில் உதிரும் மலர்களைப் போலத் தான் உறவுகளும்.. நாம் அடுத்த பருவத்தை எட்டும் பொழுது தடுக்க இயலாமல் சில உறவுகள் தானாக உத...