தொடக்கப் புள்ளியும் தெரியவில்லை
போய்ச்சேரும் புள்ளியும் தெரியவில்லை
கரைகளைத் தழுவிக்கொண்டு ஓடுகிறது
காட்டாறு
வெறியின் கர்ஜனையில் வெளிப்படுகிறது
வெல்லமுடியாத வேகம்
கரையில் கால்நீட்டி அமர்ந்த
பாறைமீது நின்று பார்க்கிறேன்
நான்குநாள் முன்புவரைக்கும்
மணல்புழுதியாகக் கிடந்த இடம்
நம்ப முடியாதவகையில் மாறிவிட்டது
அடங்க மறுக்கிற சீற்றத்தோடு
ஆற்றின் வேகம் பெருகியபடி இருக்கிறது
கண்ணுக்கெட்டும் தூரம்வரைக்கும்
கருமேங்கள் நிறைந்திருக்கின்றன
எந்தக் கணமும்
அவை தீண்டப்பட்டு
பொழிவதற்குக் காத்திருக்கின்றன
வெளிச்சம் தன்னை மறைத்துக்கொள்கிறது
சூரியனின் அச்சம்
ஆச்சரியமாக இருக்கிறது
தற்செயலான ஒரு கணத்தில்
விசைபெற்ற கணைபோல இறங்கிய மழை
உடம்பை நனைத்து வழிகிறது
ஒவ்வொரு நீர்முத்தும்
பளிரென மோதி உடைகிறது
கண்களில் மின்னல் கூசும் கணத்தில்
உணரமுடிகிறது
மழையின் இருப்பை
யாரோ துணைக்கு நிற்பதைப்போல
Subscribe to:
Post Comments (Atom)
உறவுகள்
காலையில் மலர்ந்து மாலையில் உதிரும் மலர்களைப் போலத் தான் உறவுகளும்.. நாம் அடுத்த பருவத்தை எட்டும் பொழுது தடுக்க இயலாமல் சில உறவுகள் தானாக உத...
-
எழுதப்படும் எல்லா வார்த்தைகளும் பகிர்ந்து கொள்ளப்படுவதில்லை எல்லோருடனும் சில அனைவருக்காக சில சிலருக்காக பல எனக்காக மிகப்பல உனக்காக...
-
உள்ளத்தின் ஓர் மூலையில் நாளாந்தம் ஏதோ ஓர் தேடல்! கண்ணில் காணும் ஒவ்வொரு மனிதர்களுக்குள்ளும் மனிதத்தைத் தேடும் என் விழிகள். ஒவ்வொரு தேடலுக்கு...
No comments:
Post a Comment