Monday, May 05, 2008

நம் பையில் சில ஓட்டைகள்

நம் பையில் சில ஓட்டைகள்

அதன்வழி
உறவுகள்
விழுந்து தொலைகின்றன

நான்
பார்த்துக் கொண்டு
ஒன்றும் செய்யாமலிருக்கிறேன்

முடிவில்
எஞ்சியிருக்கும் நீயும்
தொலைந்து போகலாம்

அப்போதும்
நான் ஒன்றும்
செய்யாமலிருப்பேன்
என்றே தோன்றுகிறது

வெளிச்சம் தின்று
நீள்கிற இருளின் பாதையில்
தொடர்கிறது
நம் பயணம்

நம் கைகளில்
இருக்கும் பைகள்
‘எல்லாம்’
இழந்த போதிலும்
கனக்கின்றன!

No comments:

உறவுகள்

காலையில் மலர்ந்து மாலையில் உதிரும் மலர்களைப் போலத் தான் உறவுகளும்.. நாம் அடுத்த பருவத்தை எட்டும் பொழுது தடுக்க இயலாமல் சில உறவுகள் தானாக உத...