You are a pond that can drown me.
But I can perplex you with a small throw.
You don’t know anything about me.
I am circumambulating
Your shore.
Besides
I also
Don’t know anything.
Saturday, May 31, 2008
கனத்த தனிமை
என்றோ பதிந்த பிம்பத்தில்தான் மீண்டும்
தொடங்கிஇருக்கவேண்டும் உன் நினைவுகள்…
தனிமையில் கனத்த இரைச்சலாக.
காலப்போக்கில்
உன் தினந்தோர நினைவுகளில் உன்னைப்பற்றிய ஒன்றுமேயில்லை
இப்போது,
நீ இல்லாத கூனல் விழுந்த
பொழுதுகளைத் தாண்டி
கண்ணாடி பிம்பங்களில் என்
ஒருமையின் கனம் மட்டும் கூடியிருக்கிறது.
Wednesday, May 28, 2008
போகமுடியாத பாதை
தனிமையின் காடு அடர்ந்தது
மழைமூடும் மாலைகளோ
வெனில்பொட்டு வெளிச்சமுமற்ற
இருள் திண்மம்.
விழுதெனப் பற்றியதெல்லாம்
பாம்பெனச் சீறும் அடர்வனத்தில்
முள்கிழிக்க அலைகின்றேன்.
சூரியன் உட்புகா
விசும்பல்கள் வெளியேறா
இலைச்செறிவு விலக்கி
வானம் பார்த்தல்
சாத்தியமற்றிருந்தது நேற்றுவரை.
தனிமையின் பயம் தணிக்க
தனக்குத் தான் பேசியபடி
நடந்துகொண்டிருக்கிறது நதி.
அதனருகில்
ஊர்சேர்க்கும் ஒற்றையடிப்பாதையொன்று
மெலிந்து செல்லப் பார்த்தேன்
போயிருக்கலாம் அதனூடு.
விலங்குகள் காட்டினில் மட்டுமிருந்தால்.
Thursday, May 22, 2008
நீ - நான்
நான் நானாகவே இருக்கிறேன்.
ஏனென்றால் எனக்கு,
என்னைவிட உன்னைத்தான்
ரொம்ப பிடிக்கும் "
Monday, May 19, 2008
2009 ல் உலகம் அழியும் : செவ்வாய் சிறுவன் சொல்கிறான் !!!
போரிஸ் கிப்ரியானோவிச் – இந்த சிறுவன் ரஷ்யாவில் மிகப் பிரபலம். செவ்வாயில் ஒருகாலத்தில் வசித்ததாகச் சொல்லும் இச் சிறுவன் சொல்லும் கதைகள் வியப்பூட்டுகின்றன.எல்லோரையும் போல இயல்பாகவே 1996ல் பிறந்த போரிஸின் நடவடிக்கைகளில் ஏற்பட்ட அசுர மாற்றம் பெற்றோரை அதிர்ச்சிக்குள்ளாக்கியிருக்கிறது.
பிறந்த பதினைந்தாவது நாளே குப்புறப் படுத்து, நான்கு மாதத்தில் அப்பா என்று அழைக்கும் சிறுவனைக் கண்டால் யாருக்குத் தான் அதிர்ச்சியாய் இருக்காது ?
ஆறு மாதம் ஆகும்போதே வார்த்தைகள் உச்சரிக்கப் பழகிய் அவன், ஒன்றரை வயதான போது செய்தித் தாள் வாசித்தானாம் !
இரண்டு வயதில் குழந்தைகள் பள்ளிக்கூடத்தில் அவனைச் சேர்த்தனர். ஆனால் அவனுடைய நடவடிக்கைகளும், அறிவும் எல்லோரையும் வியப்பிலாழ்த்தியதுடன் பயத்தையும் கொடுத்திருக்கிறது.
திடீரென எங்கேயோ பார்த்து எதையோ வாசிப்பான், திடீரென அமர்ந்து செவ்வாய் கிரகம் குறித்து விளக்குவான், கேட்டால் நான் அங்கே தான் வாழ்ந்தேன் என்பான் – என்கிறார் போரீஸின் தாய்.
தனது மகன் சாதாரணமாய் இல்லையே எனும் கவலை அவனுடைய பெற்றோரின் உரையாடலில் எப்போதுமே வெளிப்படுகிறது.
தனது மூன்றாவது வயதில் கிரகங்களையும், விண்வெளியையும் குறித்துச் சொன்ன தகவல்களைச் சரிபார்த்து உண்மை என்று வியக்க பெற்றோருக்கு பல நூலகங்கள் அலைய வேண்டியிருந்திருக்கிறது. விண்வெளி குறித்து இவன் சொன்ன தகவல்கள் எல்லாம் உண்மை என்பதே பல சுவாரஸ்யமான கற்பனைகளுக்கு வழி வகுத்திருக்கிறது.
இவன் இப்படி அதிகப்பிரசங்கியாய் திரிகிறானே என்று ஆலயத்தில் திருமுழுக்கு கொடுத்திருக்கின்றனர். பையன் உடனே தெருவில் இறங்கி எல்லோரையும் பாவத்தைக் குறித்து எச்சரிக்கை செய்யவும், அழிவு வரப் போகிறது என எச்சரிக்கை செய்யவும் துவங்கினானாம்.
தான் செவ்வாய் கிரகத்தில் வசித்ததாகவும், செவ்வாயில் ஏற்பட்ட ஒரு அணு ஆயுதப் போரினால் செவ்வாய் மாபெரும் அழிவைச் சந்தித்தாதாகவும், இப்போதும் மக்கள் அங்கே தரையின் கீழே வசித்து வருவதாகவும் இவன் சொல்வது ஹாலிவுட் அறிவியல் படங்களை தூக்கிச் சாப்பிடுகிறது.
லெமூரியா காலத்தைக் குறித்து (7,00,000 ஆண்டுகளுக்கு முந்தையது) ஏதோ நேற்று நடந்ததைப் போல இவன் விளக்குவதையும், அதுகுறித்த படங்களைப் பார்த்து ஏதேனும் கருத்துக்களைச் சொல்வதும் என புல்லரிக்க வைக்கிறான் இந்தச் சிறுவன்.
லெமூரியர்கள் ஒன்பது மீட்டர் உயரம், லெமூரியாவின் அழிவிற்கு நான் கூட ஒருவகையில் காரணம் என அவன் சிலிர்க்க வைக்கிறான்.
இவனுடைய அதிமேதாவித் தனம் இவனை பள்ளிக்கூடத்திலிருந்து வீட்டுக்கு அனுப்பியிருக்கிறது. ஆசிரியர்கள் என்ன சொன்னாலும், அது தவறு என மேதாவித்தனமாக விளக்கிக் கொண்டிருப்பவனை எந்த பள்ளிக்கூடம் தான் ஏற்றுக் கொள்ளும். வேறு வழியின்றி இப்போது தனியாக படித்து வருகிறானாம்.
உலகில் ஏற்படப் போகும் பேரழிவைக் குறித்து எச்சரிக்கை செய்வதற்காக அனுப்பப்படும் “இண்டிகோ” சிறுவன் இவன் என நம்புகின்றனர் பலர்.
இதை வலுப்படுத்துவது போல 2009 லும், 2013 லும் இரண்டு மாபெரும் அழிவுகளை உலகம் சந்திக்கும். தப்பிப் பிழைப்பவர்கள் வெகு சிலரே. துருவ விலகலால் இந்த சிக்கல் உருவாகும் என அவன் அதிர்ச்சிக் கதைகளை சொல்கிறான்.
உலகில் நிகழும் அழிவு நிகழ்வுகளின் போது அவனை மாபெரும் வலியும், பதட்டமும், நிம்மதியின்மையும் அலைக்கழிக்கும் என அவனது தாய் கண்கள் பனிக்க சொல்கிறார்.
மரணத்தைக் குறித்து பயப்படவேண்டாம் ஏனெனில் எல்லோருமே நிலை வாழ்வு வாழப்போகிறோம் என்கிறான் தத்துவ ஞானிபோல.
செவ்வாயில் நாங்கள் எல்லாம் கரியமில வாயுவைத் தான் சுவாசிப்போம், இங்கே தான் உயிர் வழியை சுவாசிக்க வேண்டியிருக்கிறது. இது தான் முதுமையைத் தருகிறது என ஒரு பளிச் சுவாரஸ்யத்தையும் சொல்கிறான்.
செவ்வாயிலிருந்து அடிக்கடி பூமிக்கு தான் வந்திருப்பதாகவும், விண்கலத்தை ஓட்டி வந்ததாகவும், லெமூரியா காலத்தில் தான் வந்த நிகழ்வுகளையும் மணிக்கணக்காய் பேசுகிறான். யாருமே எனக்கு எதுவுமே சொல்லித் தரவில்லை. இதெல்லாம் நானே நேரில் பார்த்தவை என்கிறான்.
பிரமிடுகளைக் குறித்து பேசும்போது, மக்கள் இப்போது நினைப்பது போல Cheops பிரமிடில் இருந்து பழங்கால வரலாறுகள் எதுவும் தெரிய வராது எனவும், அவையெல்லாம் இன்னோர் பிரமிடில் இருக்கிறது ஆனால் அந்த பிரமிட் இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை என அவன் திகைக்க வைக்கிறான்.
செவ்வாயை நெருங்கும் போது ஏன் விண்கலங்கள் எல்லாம் எரிந்து விடுகின்றன என விஞ்ஞானிகளில் தலையைப் பிய்க்கும் கேள்வியைக் கேட்டனர். அதற்கு அவன், இந்த விண்கலங்களில் உள்ள கதிர்களெல்லாம் அவர்களைப் பாதிக்கும் என்பதால் அவர்கள் வேறு கதிர்களும், சமிச்ஞைகளும் அனுப்பி அவற்றை அழிக்கின்றனர் என்கிறான்.
விண்வெளிக்கலம் எப்படிப்பட்டது, எப்படிச் செய்யப்பட்டது என்பதையெல்லாம் மிகத் துல்லியமாக படம் வரைந்து பாகங்களைக் குறிக்கிறான் இவன்.
உதாரணமாக, விண்கலம் ஆறு அடுக்குகளைக் கொண்டது. மேல் பாகம் இருபத்து ஐந்து விழுக்காடு உறுதியான உலோகத்தால் ஆனது. இரண்டாவது அடுக்கு முப்பது விழுக்காடு ரப்பரால் ஆனது. மூன்றாவது அடுக்கு முப்பது விழுக்காடு உலோகத்தாலும், கடைசி அடுக்கு காந்தப் பொருட்களாலும் ஆனது. இந்தக் காந்தத்தில் விசையைச் செலுத்தினால் இந்த விண்கலம் பிரபஞ்சத்தில் எங்கே வேண்டுமானாலும் செல்லும் என்கிறான்.
இவனுடைய அலட்சியமான உறுதியான விளக்கத்தைப் பார்த்து விஞ்ஞானிகள் தலையைப் பிய்த்துக் கொள்கின்றனர். ஏனெனில் இவன் பேசுவதெல்லாம் பல ஆண்டுகாலம் விண்வெளி ஆராய்சியில் ஊறித் திளைத்தவர்கள் பேசும் நுட்ப மொழியில் !
ஏன் மக்கள் நோயாளியாகிறார்கள் என்ற கேள்விக்கு மக்கள் சரியான வாழ்க்கை முறை வாழாதது தான் காரணம். யாரேனும் உன்னை காயப்படுத்தினால் அவனை அரவணைத்து, மன்னித்து அவன் முன்னால் முழங்கால் படியிட வேண்டும். யாரேனும் நம்மை வெறுத்தால் நம்மை மன்னிக்கச் சொல்லி விண்ணப்பிக்க வேண்டும். என சாத்வீக ஆன்மீகவாதியாகிறான்.
இவன் சொல்வதில் எதை நம்புவது, எதை விடுப்பது எனத் தெரியாமல் குழப்பத்தில் இருக்கின்றனர் பல நிலைகளிலுமுள்ள மக்கள்.
நன்றி : சேவியர்
Friday, May 16, 2008
கல்லூரி
அடக்க ஒடுக்கமான ஏழை மாணவனாய் கவர்கிறார் நாயகன்(அகில்). நாயகி(தமன்னா) தன்னை கவனிக்கவில்லை என்று கலங்கும் போதும், பின்னர் தமன்னாவின் ஆர்வம் அறிந்து குதூகலிக்கும் போது அத்தனை இன்னொசென்ஸ்! நாயகன், நாயகியின் ஈர்ப்பு மெது மெதுவாய் வளர்வது அழகு.
காதலா நட்பா என்று தவித்து உருகும் தருணங்களில் கறை ஒட்டிக்கொண்ட கர்ச்சீஃப் மற்றும் தொடர்ந்து துரத்தி வரும் ரிஷப்ஸன் பாட்டு சிம்பாலிஸம்கள் கவிதை.
நண்பர்கள் காதலிக்க கூடாது என்று எண்ணும் ஒருத்தியும், நண்பனை காதலிக்கு அவள் தோழியும் – கடைசி கட்டத்தில் மனம் விட்டு பேசிக்கொள்கிற காட்சி-கவிதை
எளிமையே பிரம்மாண்ட அழகு என்று அழுத்தம் திருத்தமாகவும் அழகாகவும் சொல்லியிருக்கிறார் இயக்குனர் (பாலாஜி ஷக்திவேல்)
மொழி
உன்னாலே உன்னாலே
காதலில் விட்டுக் கொடுத்து போவது தற்காலிகமானது; புரிஞ்சுக்கிட்டு வாழ்வது தான் பெஸ்ட் என்ற வாழ்க்கை தத்துவத்தை சொல்லியிருக்கும் படம் மெல்லிசான உணர்வுகளை சொல்லும் அருமையான படம் .
வாழ்க்கை
ஒரு நாள் நீ என்னிடம் வந்து கேட்டாய்:
நான் முக்கியமா?
இல்லை உன் வாழ்கை முக்கியமா?
எனக் கேட்டாய், வாழ்க்கை என்றேன் ,
நீ திரும்பி சென்றாய்,
என் வாழ்க்கையே நீதான் என்று தெரியாமல்……..
நினைவலைகள் ஓய்வதில்லை!
அழியாத
நினைவுகள்
என்றுமே அழிவதில்லை!
விழியால்
கண்ட காட்சிகள்
என்றுமே நிலைப்பதில்லை!
கழியாத
நாட்களென
என்றுமே ஒன்றுமில்லை!
ஆழியால்
பெற்ற முத்துக்கள்
என்றுமே தரம் குறைவதில்லை!
மழையால்
பெற்ற வளங்கள் அனைத்தும்
புவிக்கு சொந்தமில்லை!
சோழியால்
சொன்ன வார்த்தைகள்
எல்லாம் பழித்ததில்லை!
நாழிகையால்
கண்ட உண்மைகள்
அனைத்தும் விளங்குவதில்லை!
நட்பின்பால்
பெற்ற அன்பு
என்றுமே தேய்வதில்லை!
நினைவலைகள்
என் மனக்கடலில்
என்றுமே ஓய்வதில்லை!
Thursday, May 15, 2008
இன்றேனும் பேசு நண்பா!
இன்றேனும்
பேசு நண்பா!
ஆனால் நீ மட்டும் நீயில்லை!
நீயில்லை
என்பதற்கு
காரணம் புரியவில்லையா!
சிந்திக்க நேரமில்லையா! - இல்லை
பேச மனமில்லையா!
பழகிய உனக்கும்
எனது உணர்வுகளின்
வெளிப்பாடு புலப்படவில்லையா! - ஆனால்
என்னை மட்டும் கேட்கிறாய்.
நீ, நீயில்லை என்று!
இயல்பு மாறுகின்றதென்றால் - அங்கே
மனதுக்கு மாறானதொன்று
நிகழ்ந்துள்ளது என்று - நீ
புரிந்துக்கொள்வது என்று!
என் உணர்வுகள் ஊமையில்லை!
மொழி தெரிந்தும்
மொழிப்பெயர்க்க முடியவில்லை
என் உணர்வுகளை!
உன்னை மட்டும்
நெஞ்சில் சுமக்கின்றேன்
ஒரு சுமைதாங்கிப் போல!
அன்பு வைத்ததென்னவோ
அறவழியில் தான்.
இருந்தும் தெரியவில்லை − அது
அறவழி வன்முறை என்று!
என்
உணர்வுகளின் உச்சரிப்பு
நீ உணரும் வரையில்
உணரப்படாதது!
என்
உணர்வுகள் ஊமையில்லை.
ஊமையானது
என் உள்ளம் தான்!
Wednesday, May 07, 2008
சில கேள்விகள்
திருமணம்
என்னும் விளக்கவுரை
தந்தவன் யார் ?
கயிற்றின் முடிச்சில்
கட்டுப்பட்டு நிற்கும்
அகலிகைகள்
இங்கே ஏராளம்.
நெருப்புக்கும் நீருக்கும்
இல்லாத சக்தி
நிலத்தில் கிழித்த கோட்டிற்கு !
கர்வத்தில் எவனோ எழுதிய
கட்டுக்கதைக்கு
காலப்போக்கில் 'காவிய ' அந்தஸ்து !
தென்றலின் வருடலிலும்
வண்டின் முத்தத்திலும்
இதழ் சிவந்து சிாிக்கும் பூவிற்கு
கொண்டையில் சொருகப்பட்டு
சிறைமுகம் இங்கே !
வண்டுகளையும் பூக்களையும்
பசை கொண்டு ஒட்டும் சமுதாயம் !
சுமப்பதற்காக பூக்களும்
சுவைப்பதற்காக வண்டுகளுமாய்
சுதந்திரம் இழக்கும் காலங்கள் ..
உலகின்(ல்) உயிர்
Only when the last fish get caught,
Only when the last drop of water gets poisoned,
Then only you'll know,
You can't eat money.
கடந்து போகும் காலங்கள்
Monday, May 05, 2008
மழையின் துணை
போய்ச்சேரும் புள்ளியும் தெரியவில்லை
கரைகளைத் தழுவிக்கொண்டு ஓடுகிறது
காட்டாறு
வெறியின் கர்ஜனையில் வெளிப்படுகிறது
வெல்லமுடியாத வேகம்
கரையில் கால்நீட்டி அமர்ந்த
பாறைமீது நின்று பார்க்கிறேன்
நான்குநாள் முன்புவரைக்கும்
மணல்புழுதியாகக் கிடந்த இடம்
நம்ப முடியாதவகையில் மாறிவிட்டது
அடங்க மறுக்கிற சீற்றத்தோடு
ஆற்றின் வேகம் பெருகியபடி இருக்கிறது
கண்ணுக்கெட்டும் தூரம்வரைக்கும்
கருமேங்கள் நிறைந்திருக்கின்றன
எந்தக் கணமும்
அவை தீண்டப்பட்டு
பொழிவதற்குக் காத்திருக்கின்றன
வெளிச்சம் தன்னை மறைத்துக்கொள்கிறது
சூரியனின் அச்சம்
ஆச்சரியமாக இருக்கிறது
தற்செயலான ஒரு கணத்தில்
விசைபெற்ற கணைபோல இறங்கிய மழை
உடம்பை நனைத்து வழிகிறது
ஒவ்வொரு நீர்முத்தும்
பளிரென மோதி உடைகிறது
கண்களில் மின்னல் கூசும் கணத்தில்
உணரமுடிகிறது
மழையின் இருப்பை
யாரோ துணைக்கு நிற்பதைப்போல
நம் பையில் சில ஓட்டைகள்
அதன்வழி
உறவுகள்
விழுந்து தொலைகின்றன
நான்
பார்த்துக் கொண்டு
ஒன்றும் செய்யாமலிருக்கிறேன்
முடிவில்
எஞ்சியிருக்கும் நீயும்
தொலைந்து போகலாம்
அப்போதும்
நான் ஒன்றும்
செய்யாமலிருப்பேன்
என்றே தோன்றுகிறது
வெளிச்சம் தின்று
நீள்கிற இருளின் பாதையில்
தொடர்கிறது
நம் பயணம்
நம் கைகளில்
இருக்கும் பைகள்
‘எல்லாம்’
இழந்த போதிலும்
கனக்கின்றன!
உறவுகள்
காலையில் மலர்ந்து மாலையில் உதிரும் மலர்களைப் போலத் தான் உறவுகளும்.. நாம் அடுத்த பருவத்தை எட்டும் பொழுது தடுக்க இயலாமல் சில உறவுகள் தானாக உத...
-
எப்போதும் போலவே சந்திப்புக்கள் சத்தத்தோடும் பிரிவுகள் மௌனத்தோடும் அரங்கேறிப் போனது.
-
நாகரீகம் வளர்ந்தும் நாடோடி வாழ்க்கை வாழ்கிறான் மனிதன். வாழ்வை உணராத வரையில்!
