Friday, October 31, 2008
தோழி....!
பேச என்ன இருக்கிறது
உனது தோற்றங்களும் தடங்களும்
இன்னொருவருக்காய் ஆகிப்போன
மாயையில்
பேசி முடிந்து போன
நிசப்தங்களை தவிர.....!
Tuesday, October 14, 2008
சாத்தியப்புள்ளிகள்
வாழ்வை இனியதாக்கும் பொருட்டு
கனவுப் பாசறைகளில் உலாவத் தொடங்கி
கனவுகள் சமைப்பது மட்டுமே
வாழ்க்கையாகியிருக்கிறது
எல்லாமே சூன்யமாயிருக்கையில்
எங்கு தொடங்கி எதில் முடிக்க??
இருத்தலும் இல்லாதிருத்தலுக்குமான
அடையாளங்கள் அழிந்தொழிந்தபின்
எதைத் தொடர எதை விட??
சுவாசித்தல் மட்டுமே
உயிரோடிருப்பதைப் பறைசாற்றுகையில்
வாழ்தலுக்கான சாத்தியப்புள்ளிகளை
தேடியலைகிறது மனம்
எக்கணத்திலேனும்
அவை கிடைக்கப்பெறலாமென..
Monday, October 13, 2008
வாழ்க்கை
Sunday, October 12, 2008
எல்லைகள்
Saturday, October 11, 2008
பிரிதலும், பிரிதல் நிமித்தமும்..

எதன் பொருட்டேனும் நிகழலாம் எதுவும்
எப்போது வேண்டுமானாலும்
தெரிந்து விட்ட மரணவலியாய்
முன்னமே நிச்சயிக்கப்பட்ட பிரிவுகள்
உயிர் நரம்பை அறுக்கும்படியான
விலகல்கள் இனி சாத்தியமில்லை
பீறிடும் அழுகை மறைத்து
பொய்யாய் புன்னகைத்த கணங்களில்,
விசுவிசுத்த காற்றின் சப்தமும்
மடியிருத்திய மழலையின் கொஞ்சல்களும்
கேட்டபடியேயிருக்கிறது
இன்னமும்.
Friday, October 10, 2008
வாழ்வின் நிழல்கள்
நீண்ட மணற்பரப்பும், ஒற்றை நிலவும்
ஆர்ப்பரிக்கும் கடலும்
போதுமானதாகவே இருக்கிறது.
விரும்பிடத் தோன்றவில்லை
சட்டங்களுக்குள் அடைபட.
இதுதான் வாழ்க்கையென்றே உணர்த்திப்போன
பொழுதுகளில் எதார்த்தத்தின் கரங்கள்
கழுத்தை இறுக்க மூச்சு முட்டத் துவங்குகிறது.
உடைக்கவியலா கண்ணாடிச் சட்டத்தினுள்
அகப்பட்டுக் கொண்டதாய்
பொருமிக் கொண்டேயிருக்கிறது
என் மீதமுள்ள பொழுதுகளும்...
உன்னிஷ்டம் கேட்கப்போவதில்லையென
மிரட்டும் காலத்தின் சுழல்களில்
மூழ்கிப்போகிறேன்
வரங்களுக்கு சற்றும் தகுதியில்லாதவளாய்..
விருப்பு வெறுப்புகளற்ற பிராந்தியத்தில்
நடைபோடத் துவங்குகிறேன்
என்னுலகில் சஞ்சரிக்கும் சிற்றெறும்பு தேடி...
உங்கள் உலகத்தில் வாழ்ந்திராத எனக்கு
தெரியத்தானில்லை
உலகம் பற்றி ஒருவரி சொல்ல...
Thursday, October 09, 2008
ஆழ்கடலும் அமைதியும்..
எனக்கென்று யாருமில்லை
என்னைத்தவிர...
அவ்வப்போது முகம் காட்டிச் செல்லும்
இருள் சூழ்ந்த சில நினைவுகள்.
இருத்தலின் எச்சமாய்
கிறுக்கிச் செல்லும் சில வார்த்தைகள்
என் நாட்குறிப்பின் பக்கங்களை..
நீ வந்து சென்ற நாளொன்றின்
பின்புலப் பொழுதுகளில் தனிமைக்குத்
துணையாய் வீற்றிருக்கும் என் கவிதை.
கலைக்க விரும்பாத தவமாய்
நீண்டு கொண்டே செல்லும்
என் மெளனமும்...
புலன்களுக்கு சிக்காத இறுதிப்புள்ளி நோக்கி.
Wednesday, October 08, 2008
Tuesday, October 07, 2008
குற்றவாளி
அழகான அதிகாலை
பனியின் மென்மையை ரசிக்க இடம்தராமல்
வலுக்கட்டாயமாக வந்துவிடும்
அலுவலக நினைவு.
உருண்டோடும் காலத்தின் பின்னால்
நானுமொரு சக்கரமாய்..
மெல்ல தலை காட்டிய சூரியனின் பார்வை
தகிக்கத் துவங்க,
திணிக்கப்பட்ட வாழ்க்கையோடு
போரிடத் தொடங்குகிறேன்
நிராயுதபாணியாய்..
பேருந்தை துரத்தும் அவசரச் சூழலில்
'புளிச்'சென்று வந்து விழும்
காவிநிறத்தில்...
சிவந்த பற்கள் காட்டி அகோரமாய் சிரிக்கும்
முகமறியா மனிதனின் துப்பலை
மெளனமாய் ஏற்று நிறம் மாறத்துவங்கும்
நகரத்துத்
தார்ச்சாலை
ஏதும் செய்ய இயலா நிலையில்
ஒரு முறைப்பை மட்டும் கொட்டி விட்டு
கூட்டத்தில் கலந்து மறையும்
குற்றவாளியாய் நான்..
அன்பு - பலவீனம்
எந்த ஒரு விஷயத்திடம்
இருந்தும் விலகியே இரு.
அது,
அதிகபட்ச
அன்பாக இருந்தாலும்...
Thursday, October 02, 2008
கனவு மெய்ப்படுமா?
நல்வரவை எதிர் நோக்கி
முடிவில்லா சாலையில் பயணிக்கிறேன்
முடித்து வைத்த கனவுகளோடு.............
கரைந்திடும் நிமிடங்கள்,கரைத்திடுமா கனவுகளை?
நம்பிக்கைதான் கைவிடுமோ?
உறவுகள்
காலையில் மலர்ந்து மாலையில் உதிரும் மலர்களைப் போலத் தான் உறவுகளும்.. நாம் அடுத்த பருவத்தை எட்டும் பொழுது தடுக்க இயலாமல் சில உறவுகள் தானாக உத...
-
எப்போதும் போலவே சந்திப்புக்கள் சத்தத்தோடும் பிரிவுகள் மௌனத்தோடும் அரங்கேறிப் போனது.
-
நாகரீகம் வளர்ந்தும் நாடோடி வாழ்க்கை வாழ்கிறான் மனிதன். வாழ்வை உணராத வரையில்!


