Sunday, August 02, 2009
நட்பு
பேசிக் கொண்டோம் நாம்
யார் யாரோ பேசிக்கொண்டார்கள்
நம்மைப் பற்றி
நம் பேச்சில் பெரிதாக
சுவாரசியம் இல்லை
உண்மை இருந்தது
அவர்கள் பேச்சில்
சுவாரசியம் நிறைய இருந்தது
ஆனால்
உண்மை இல்லை
தோழி
எதுவும் இன்றி
ஒரு மழைநாளில்
வாழ்வில் வந்து சேர்ந்தாள்
தோழி என்றொரு
தேவதை !
காத்திருந்தது போல
சிறகுகளை
சிருஸ்டித்து கொண்டு
உடன் பயணமாக
தயாராகி இருந்தது
எனக்கு முன்
என் மனது...!
Tuesday, January 20, 2009
பாட்டியின் கதை
வந்த பாட்டி
தூங்கிப்போனாள்
விழித்திருக்கிறது குழந்தை
கதாபாத்திரங்களுடன்.
Friday, January 09, 2009
இன்னும் ஓர் இரவு...!
யாருமற்ற மேசையில் தனியே
உணவருந்த வேண்டும் என்கிற நினைவே....
காலை உணவை மறுக்க செய்கிறது...
நினைவில் வர மறுக்கும் நேற்றைய கனவுகளை
தேடி தேடியே தொலைந்து போகிறது
எனது பகலும் சில நினைவுகளும்...
யாருமற்று கழியும் மாலை பொழுதுகள்...
இரவு நேர மயானமாய்
இரைச்சல் நிறைந்த மனதின்
தனிமையை போக்க முயல்கிறேன்...
சில நேரம் வண்ணங்கள் கொண்டும்..
வண்ணங்கள் வாய்க்காத தருணங்களில் உதிரம் கொண்டும்...
உறங்கி போனதாய் நினைக்கும் வேளையில்...
மூடிய இமைகளின் வழியே வெளியேறும்...
சிறு கண்ணீரும் சில கனவுகளும்...
எஞ்சிய எனது கருப்பு வெள்ளை கனவுகளும்
குருதி பாய்ந்து வண்ணமாகிறது...
திடுக்கிட்டு எழுகையில் கடந்து போகிறது...
உறக்கம் தொலைத்த இன்னும் ஓர் இரவு...
Wednesday, January 07, 2009
நினைவுகள்
எழுதப்படும் எல்லா வார்த்தைகளும்
பகிர்ந்து கொள்ளப்படுவதில்லை எல்லோருடனும்
சில அனைவருக்காக
சில சிலருக்காக
பல எனக்காக
மிகப்பல உனக்காக
மனதுள் மட்டுமே உறவாடி
விளையாடிய பல கவிதைகள்
மனதோடு தேங்கிவழிந்து கொண்டிருந்த
பல வார்த்தைகள்
இன்று
தோளில் இருந்து நழுவி
இடை விட்டு இறங்கிவிரல் பிடித்து
நடந்து படி ஏறி
உன் வீட்டுக்கதவு தட்டத்தொடங்கி விட்டது
ஒவ்வொரு நாளும் கதவு
திறக்கப்படும் நேரத்துக்காக
திறக்கப்படும் கதவின் பின்னால்
நிற்கும் ஒற்றை ஜோடி
கால்களுக்காக
ஒற்றைக்காலில் என் கவிதை செய்த
தவத்தின் பலனாக
உனக்குள் எனது நினைவிருக்குமா
தெரியவில்லை
நினைவுகளின் மீட்டெழுப்புகளின்
பொழுதுகளில்
கடந்த காலங்களின் காயங்கள்
நிச்சயம் தொடரும்
ரகசியங்கள்..!
சில ரகசியங்கள் இன்னும்
சொல்லபடாமல் இருக்கின்றன..
கறுத்த சுய ரகசியங்களாக
அவை புதைக்க படுகின்றன..
மனதில் ஆழத்தில் வெளிப்படும்
நிறக்கலவைகளாக
சிலரிடம் பகிர்ந்து கொள்ளபடுவதுண்டு
அவற்றின் நிறங்கள் மாறியுள்ளன
என்ற ரகசியம் மறுபடியும்
புதைகிறது
நிறங்கள் இல்லாத
ரகசியங்கள் சில இரவுகளில்
வெளிப்படுகின்றன…
இரவுகளின் நிறங்களை சுமந்து கொண்டு
புகைபடிந்த தண்டாவாள செடிகளை போல
ரகசியங்கள் அவற்றின்
நிறங்களை மறந்து
மேலும் ஆழ புதைகின்றன…
உறவுகள்
காலையில் மலர்ந்து மாலையில் உதிரும் மலர்களைப் போலத் தான் உறவுகளும்.. நாம் அடுத்த பருவத்தை எட்டும் பொழுது தடுக்க இயலாமல் சில உறவுகள் தானாக உத...
-
எப்போதும் போலவே சந்திப்புக்கள் சத்தத்தோடும் பிரிவுகள் மௌனத்தோடும் அரங்கேறிப் போனது.
-
நாகரீகம் வளர்ந்தும் நாடோடி வாழ்க்கை வாழ்கிறான் மனிதன். வாழ்வை உணராத வரையில்!