Friday, December 12, 2008

மௌனத்தின் தீவில்…!

ரம்மியமாய் வந்து
ராட்சச அலையென
என்னை இழுத்துச் செல்லும்
உன் ஞாபகங்கள்
கொண்டு போய் சேர்க்கின்றன
அடர்ந்த மௌனத்தின் தீவில்…

அதன் கரையோரங்களில் எல்லாம்
மணலாய் கொட்டிக் கிடக்கின்றன
உன் குட்டிப் புன்னகைகள்…

மரங்களாய் வளர்ந்து நிற்கின்றன
என்மீதான உன் அக்கறைகள்…

அங்கு தனியே நானிருந்தாலும்
தனிமையாய் இல்லை…

அருகாமையோ
தீண்டல்களோ
பகிர்தல்களோ
இல்லாவிடினும்…

எனக்கு துணையாய்
எப்போதும் என்னைச் சுற்றி
பறந்துகொண்டே இருக்கின்றன
உன் ஸ்பரிசப் பறவைகள்…

ஒருநாள் காலம்
உன்னையும் இந்த தீவில்
கொண்டு வந்து தள்ளும்
என்ற எதிர்பார்ப்போடு…

மகிழ்ச்சியுடன் அலைந்து கொண்டிருக்கிறேன்
நமக்கான மௌனத்தின் தீவில்…

ஊடல்


உன் கண்களில் இருந்து
உடைந்துவிழும்
ஒவ்வொருத்துளி கண்ணீருக்குள்ளும்
நெருப்பாய் எரிந்துகொண்டிருக்கிறது
நமது நேற்றைய ஞாபகங்கள் !

முற்றிப்போய் முட்டிக்கொண்ட
நமது சண்டைகளுக்குள்
ஒன்றும் பேசாமல்
ஒளிந்துகொண்டிருக்கிறது
நமக்கான காதல் !

மனதின் முரண்

நாளொரு கருத்தும்
நொடியொரு நிகழ்வும்
நிகழ்த்தியவாறே
மனது முயலும்
அமைதியை தேடி!

தோழியே....!

என் மௌனத்தில்
சிரிப்பதென்றால்
வார்த்தைகளை துறப்பதில்
வருத்தமொன்றும்
எனக்கில்லை!

Monday, December 08, 2008

நம்ப மறுத்த கணங்கள்

நம்ப மறுத்த கணங்களை
மீண்டும் மீண்டும்
நிகழ்த்திப் பார்க்கிறது மனம்.


கடந்துபோன ஆற்று நீர்போல்
ஏற்கனவே பெய்த வெயில்போல்
இழந்த கணங்கள் என்றபோதிலும்


பரவசமான கணங்களை
முன்பைவிடத் தேய்ந்துபோன
பரவசத்தோடும்


வலிமிகுந்தத் தருணங்களை
முன்பைவிடத் தேய்ந்துபோன
வருத்தத்தோடும்.


அக்கணங்களின்
அதிர்வலைகள் இன்னமும்
ஓய்ந்தபாடில்லை.

Wednesday, December 03, 2008

சந்திப்பு - பிரிவு


எப்போதும் போலவே
சந்திப்புக்கள் சத்தத்தோடும்
பிரிவுகள் மௌனத்தோடும்
அரங்கேறிப் போனது.

சொல்லாத வார்த்தைகள்......!


இருவருக்கும் இடையில்
கூப்பிடு தூரந்தான் இடைவெளி- இருந்தும்
எதுவுமே பேசவில்லை
இதுவரையில் நாம்


குரல்நாண்களின்
வேலை நிறுத்தத்தால்
வெப்பக்காற்று மட்டும்
வெளியேறிக் கொண்டிக்கிறது
பெருமூச்சாகசுற்றி நின்றவர் பேசினர்


தூரத்தில் குயில் கூவியது
வாகனங்கள் இரைந்தன
வாலாட்டியபடி வந்த நாய்
சும்மா குரைத்துப்போனது


இன்னும் எத்தனையோ
இரைச்சல்களுக்கு மத்தியில்
எந்தவித ஒலியும்
எழுப்பத் திரணியற்றவர்களாய்
உறைந்திருக்கிறோம் நாம்


நினைத்துப் பார்க்கிறேன்
நிறையவே நாம் பேசியிருக்கிறோம்
வருந்தியதும் உண்டு
சொல்லிய சில வார்த்தைகளுக்கும்
சொல்லாமல் விட்ட வார்த்தைகளுக்கும்.....!

Monday, December 01, 2008

Life is a .......?

Life before marriage is AIRTEL
" u can express ur self ".
During honeymoon is RELIANCE-
" Always get in Touch ".

After Honeymoon is HUTCH
" Wherever u go ur wife network follows".



After one year Life is IDEA
" ur wife can change ur life ".



After 10 years Life is BSNL
" Subscriber is not reachable "?????????

உறவுகள்

காலையில் மலர்ந்து மாலையில் உதிரும் மலர்களைப் போலத் தான் உறவுகளும்.. நாம் அடுத்த பருவத்தை எட்டும் பொழுது தடுக்க இயலாமல் சில உறவுகள் தானாக உத...