Friday, February 29, 2008

கவிதை


என்னுள் நானே
மெல்ல மெல்ல
கரைதல் கண்டேன்.
மெல்ல மெல்ல
கரைந்து நிற்க
சொல்லில் விரியாச்சுகம்
சூழலெங்கும் சூழ்ந்திருந்த
கவிதைச் சுகமெல்லாம்
எந்தன் சிரசுள்
இதமாய் இறங்க
நானே கவிதையாய்
செறிந்து பரந்தேன்....

கனவு

எல்லாக் கனவுகளின்
முடிவுகளின் பின்னும்
என்னுள் நான்
எனைத் தொலைத்து
வானத்தில் ஓர்
விடிவெள்ளியாய்
என் உரிமைகளை
வென்று கொள்கிறேன்.
என்றும் ஓர்
கனவுகளில் நடப்பவளாய்.

இருட்டு

வாழ்வு தொடங்கி பல்லாண்டுகள் பின்னும்
பிள்ளைகள் எம் பிறப்பின் பின்னும்
முடிவுறாத இவர்கள் குடும்பப்போரில்
எனது காற்றின் எனது மலரின்
எனது கனவின் முகம் கிழிந்து தொங்கிற்று.
கோணல் மாணலாய்
ஓய வேண்டாம் இவர்கள் போர்
இவர்கள் கூத்துக்கள் முன்
என் முழுமையையும் வெறுக்கின்றேன்.எப்பிறவியின் சாபமோ
நானும் அவர்களும் அறியோம்...
ஒரு யுகத்திலும் எறித்துவிடாதபடி
நிலவின் கறுத்த பின்புறத்தை எம் வாசல் நோக்கி
திருப்பிப் பிடித்திருப்பது எவருடைய கைகளோ..!
எத்தனையோ தெளிந்தேன் ஆயினும்
இப்போரின் மனநிலைகள்
இன்னும் இன்னும் புரியாதனவாகவே!

வெறுமை

எதுவும் உன்னிடம் பேச முடியாதபடி
நான் ஊமையாக இருத்தப்பட்டுள்ளேன்.
உன்னுடன் பேசிக்கொண்டிருந்த
இந்தப்பொழுதுகளைப்பற்றி
இப்போது மழையுடன் பேசுகிறேன்.

சிறிது உன்னை நினைக்கிறேன்
பிறகு அழுகிறேன்.
அழவேண்டும்.
என் உணர்ச்சிகளைக் கொட்டி.

என் இதயம் கனக்கிறது.
ஏதோ ஒன்று மனதில்
பாரம்போல் உணர்கிறேன்.
அது உன்நினைவின் துயரா.

எனக்கு இது பிடித்திருக்கிறது.
உன் நினைவில் அமிழ்வதும்
அழிவதும்...ஜீவனாய்...
இன்னும் உனக்காகவே...

நீ எனக்குள் உயிர்க்கிறாய்
என் மனதில் துளிர்க்கும்
நினைவின் குருத்துகளாயென..

உணர்வுகள்

உண்மைகளை விழுங்கும்
உணர்வுகளைச் சிதைக்கும்
சம்பிரதாயக் கயிற்றில் எனைத்
திரித்து வதை செய்ய வேண்டாம்.
அதனுள் அழுகி வாழுதல்
அழிந்து அமிழ்ந்து போதல்
என்னால் இயலாது…

வாழ்தலையும் மரணித்தலையும்
எனக்காய்ப் புரிய இசைகிறேன்.
தீக்கிடங்கினுள் கிடந்து
நான் உயிர்வாழ்வதற்காய்க் கூச்சலிட
எத்தகைய பிடிப்புகளுமில்லை எனக்கு…

உணர்வுகளைத் தனியே உறிஞ்சி
பிணங்களாய்த்தான் வாழவைப்பீரெனின்
உடனேயே எனைக்
கொன்று விடுங்கள்.

ஏனெனில்
வாழ்தலுடன் கூடிய நடிப்புத்திறன்
எனக்கிருப்பதாய் மார்தட்டிக் கொள்ள
நான் நிஐங்களைப் பொய்ப்பிப்பவளல்ல…

Thursday, February 28, 2008

நினைவு

புரண்டு புரண்டு
படுக்கிறேன்.
தூக்கமே வரவில்லை.
எங்கே போய் தொலைந்தது
என தேடிக்கொண்டிருந்தேன்.
உன் நினைவுகளோடு
தூக்கத்தை தேடுவது
மெது மெதுவாகபுரிந்தது எனக்கு.

தூக்கமே வரவில்லையா?!
உன் நினைவால் தான்
தூக்கம் தொலைந்ததா?!
தூக்கம் வரவில்லையே
என நினைத்த எனக்குள்
உன் ஞாபகம் வந்துஒட்டிக்கொண்டதா?!

விடை தேட முயன்றேன்.
விடையாக விரிந்தது மனதில்.

தூக்கம் வரவில்லையே
என நினைத்த எனக்குள்
உன் ஞாபகம் வந்து
எனக்குத் துணையாக
புகுந்து கொண்டது.

இது தான் நட்பின் உன்னதம்.
இப்படியான ஒரு இன்ப அனுபவத்தை
எத்தனை பேர் உணர்ந்திருப்பர்.!

நட்பு

நட்புக்கு ஏது பால்?
எல்லோரும் தாராளமாக
நட்பை காதல் செய்வோம்.

உன்னை நான் இங்கு
பத்திரமாக பாதுகாக்கிறேன்.
நானும் பாவம்.
என்னையும் அங்கு
பத்திரமாக பாதுகாத்துக்கொள்.

உலகில் எஞ்சி இருப்பது
நட்பு ஒன்று தான்.
நீயும் நானும்
கை கோர்த்தே சென்றால்
அந்த வானம் கூட
வெகு தூரமில்லைத்தான்.

உன் வருகைக்காக
ஏங்கி நின்றேன்.
அருகில் உள்ள பூக்கள்
எனைப்பார்த்து
ஏளனமாய் சிரிக்கின்றன.
நட்பு என்ன கேட்டதும்
கிடைத்து விடும் வரமா?!! என.

என்னோடு பேச
நீ எப்போதும் வேண்டும்.

நீ எனக்கருகில் இருந்தால்
துன்பமே நெருங்காது.

துன்பம் பலதை இறக்கி வைத்தேன்.
அதற்காய் நீ அவற்றை காவிச் செல்லாதே.

நான் விடும் பிழைகளை
அடிக்கடி நீ தட்டிக்கேட்டதால்
பிழைவிட போகிறேன் என
எப்படி என்னால் அனு மானிக்க முடிகிறது இப்போ?!!
நன்றிடா செல்லம்.

மிகவும் கோபமாய்த்தான் இருந்தேன்
உன்னைக்கண்டதும் எப்படிப்போனது?

பார் இந்த மெழுகுதிரியை
அப்படித்தான் எனக்குள்ளும்
பிரகாசத்தை ஏற்றி வைத்தாய்.

இந்த அலைகளின் தழுவல்போல்
எப்படி எனக்குள்
அப்படி ஒரு சுகத்தை
உன்னால் தர முடிந்தது.

உறவுகள்

காலையில் மலர்ந்து மாலையில் உதிரும் மலர்களைப் போலத் தான் உறவுகளும்.. நாம் அடுத்த பருவத்தை எட்டும் பொழுது தடுக்க இயலாமல் சில உறவுகள் தானாக உத...